அழிக்கப்பட‌ வேண்டியது சாதியா?

blog_post_4

கடந்த 10,20 ஆண்டுகளாகவே நாம் இதனை கேள்விப்பட்டிருக்கக்கூடும். “சாதிகள் அழிக்கப்பட வேண்டும்” என்று. அனைவரும் இதே கருத்தை மீண்டும் மீண்டும் கேட்பதனால் நாம் நம்மை சாதிக்கு எதிரானவராக காட்டிக்கொள்ள முயல்கிறோம். (எல்லோரும் அல்ல).

நாம் உயர் வகுப்பினராகவோ, நடுத்தர வகுப்பினராகவோ, பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவோ குறிப்பிடப் படலாம். முதலில் நாம் ஒன்றை தெளிவுபடுத்திக் கொள்வோம். நாம் சாதிக்கு எதிரானவரா அல்லது சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரானவரா?

ஒருவேளை இதன் பதில் சாதிக்கு எதிரானவர் எனில் நாம் நம்மை பிறருக்காக அவ்வாறு காட்டிக்கொள்கிறோம் என்பதுதான் உண்மை. மேலே விவாதிப்பதற்கு முன் ஒன்றை நாம் உறுதி செய்து கொள்வோம். சாதிய ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்பட வேண்டியவையே,சாதிகள் அல்ல.

சாதி என்பது என்ன? ஏதோ ஒரு செயல்பாட்டில் பொதுவாக செயல்படும் மக்களை குறிக்கும் சொல். அது தொழில், பழக்க வழக்கங்கள், தோற்றம், கலாச்சாரம், மொழி, நாடு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதை ஒரு தீய வார்த்தையாக மாற்றியதுதான் தம்மை உயர்வாகவும் பிறரை தாழ்வாகவும் நினைத்த நமக்கு முன் வாழ்ந்த மக்கள், இப்போதைய ஊடகங்கள், லாபம் தேடிய, தேடும் தலைவர்களின் சாதனை.

ஒருவேளை நீங்கள் மீண்டும் சாதியை தவறு எனக் கூறினால் தமிழன் என்பதே சாதிதான் எனக் கூறுவேன் நான். தமிழ் மொழி எனும் பொதுவான செயல்பாட்டினால் ஒன்றிணைவதால் தான் தமிழர்கள். இதே போலத்தான் தெலுங்கு, கன்னடம்,மலையாளம் எல்லாம். சாதியே வேண்டாமென நாம் நினைத்தால் பிறகெதற்கு தமிழன், தெலுங்கன்,கன்னடன். எல்லாத்தையும் நீக்கிவிட்டு இந்தியன் என்று ஒரே அடையாளத்தை வைத்து விடுவோமே! அப்பொழுதும் எதற்கு இந்தியன் என்ற கேள்வி எழும்.

நாம் கூறலாம். நமக்கான அடையாளத்தையும், உரிமையையும் நிலை நிறுத்திக் கொள்ள நாம் ஓர் அணியாக இருக்க வேண்டியது அவசியமாகிறது, அதுதான் தமிழன், இந்தியன் என்று. இந்தியாவில் அடையாளமாக தமிழன். உலகில் அடையாளமாக இந்தியன். அதேதான் சாதி. அதிக நபர்கள் ஒன்றிணைந்து இந்தியா, தமிழ்நாடு, ஆந்திரா, மலையாளி எனப் பிரித்து சட்டமாக்கிக் கொள்ளலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட மக்கள் தங்களை விட்டுக் கொடுக்காமல் இருந்தால் அவர்களை சாதி வெறி பிடித்தவர்கள் என்கிறோம். ஆக பிரச்சினை சாதிகளில் இல்லை, அதைக்கொண்டு ஏற்றத்தாழ்வை உருவாக்கியவர்களிடமும், பின்பற்றுபவர்களிடமும் தான் இருக்கின்றது.

சாதிய ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டும்;அனைவரும் சமம் எனும் நிலையைக் கொண்டு வர வேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால் அதை செய்ய முடியவில்லை. ஏனென்றால் சாதிக்கு எதிராக காட்டிக் கொண்டதோடு சரி, நடந்து கொள்ளவில்லை. சற்று கடினமான செயல்தான் அது. பெருச்சாளியைக் கொள்ள முடியவில்லை. வீட்டைக் கொளுத்துகிறோம்.

மீண்டும் மீண்டும் அவ்வாறு செய்வதால் சாதியை ஒழித்து விட முடியும் என நாம் நம்பினால் அது மடத்தனமாகவே முடியும். ஏனென்றால் அப்படி முடியும் என்றால் இந்நேரம் சாதி அழிந்திருக்க வேண்டும் அல்லது குன்றிப்போயிருக்க வேண்டும். சில சமயங்களில் அது குன்றிப்போனதாய் தெரிந்திருந்தாலும் மீண்டும் எர்மலையாய் வெடித்துச் சிதறியதைத்தான் கடந்த கால நிகழ்வுகளில் அறிகிறோம். இன்றைய நவீன உலகில் கூட சாதி அழியாதிருப்பதன் காரணம் ஒன்றுதான்.

நாம் அழிக்க முயல முயல அது தன்னை மக்கள் மனங்களில் வலுப்படுத்திக் கொள்கிறது. எவ்வளவு நபர்கள் என்பதல்ல சாதி, நபர்களின் எண்ணங்களில் எவ்வளவு வீரியமாய் இருக்கிறதென்பதே சாதி.

சமூக சிந்தனையாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் மனிதர்களின் கருத்துக்களை நாம் மடத்தனமாய் பிந்தொடர்ந்தது போதும். நாமே நமக்கான ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் படைப்போம். புறப்படுக!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *