Month: July 2013

மனுஷ்யபுத்திரனின் பசித்த பொழுது

மனுஷ்யபுத்திரனின் கவிதைத்தொகுப்பு – பசித்த பொழுது.

படிக்கும் பொழுது “இதெல்லாம் கவிதைதானா? வெற்று வசனங்கள்தானே ?” என கேட்கத்தூண்டும் வண்ணம் பல கவிதைகள் இருக்கிறது. ஒருவேளை அவைதான் சரியான கவிதைகளோ? நமக்குத்தான் அதற்கா ஞானம் வரவில்லையோ என்ற எண்ணமும் இப்போது வரை உண்டு. உங்களுக்கும் தோன்றினால் நீங்களும் என் இனமே.

 பெரும்பாலும் தன் வாழ்வின் நிகழ்வுகளைத்தான் கவிதைகளாக வடித்திருக்கிறார். சமூக பொருளாதார சித்தாந்தங்களெல்லாம் ஒன்றுமில்லை. ஒன்றுமேயில்லை எனலாம்.

மொத்தம் உள்ள 236 கவிதைகளில் 99% கவிதைகளை காமம், மழை, பூனை, அம்மு, அப்பு என ஐந்தே வகைக்குள் கொண்டு வந்து விடலாம். அம்மு, அப்பு அவர் குழந்தைகள் என நினைக்கிறேன். அவர்கள் தொடர்பாக பல கவிதைகள். நூல் தலைப்புக்கான் கவிதையே அப்புவை சுற்றித்தான். ஒருவேளை அவர்கள் அவரது குழந்தைகளாக இல்லாது இருந்து அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களாக இருப்பின் அதனை நயம்பட, உணர்வுப்பூர்வமாக தந்தமைக்காகவே பாராட்டலாம்.

பல கவிதைகள் தான் செய்த தவறுக்கான‌ விளக்கம் கொடுத்து அது சரியெனக் காட்டிக்கொள்வதாகவே அமைந்திருக்கின்றன. அந்த விதத்தில் எதிர்மறையையும் பெருமையாய்க் கூறிக்கொள்கின்றன பல கவிதைகள்.

இவ‌ற்றையெல்லாம் விடுத்து முத்தாய்ப்பாய் சில கவிதைகளும் உண்டு. உதாரணமாக அவள் தன்னை விட்டுப் பிரிந்ததை இப்படிக் கூறுகிறார்.

 நான் இல்லாத போது என் குரல் கேட்காத

ஒரு வாழ்க்கைக்குச் சென்று விட்டாள்”

மிகச்சிறப்பு.

மற்ற சில நெஞ்சைத் தொட்ட கவிதைகள்.

முதியவர்களின் முகங்களில்”

எனக்கு முன்னால் இங்கே இருந்தவர்கள்”

நன்றி.

சிறிது வெளிச்சம் – என் பார்வையில்

சமீபத்தில் ராமகிருஷ்ணன் எழுதிய “சிறிது வெளிச்சம்” நூலைப் படித்தேன். ஆனந்த விகடனில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. நல்ல புத்தகம். நாம் அன்றாடம் சந்திக்கும் கவனிக்காது விட்ட பல்வேறு அவலங்களையும், மகிழ்வுகளையும் விவரித்திருக்கிறார்.

வாரம் தோறும் வெளியானதாலோ என்னவோ ஒவ்வொரு அத்தியாயமும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவையாகவே இருக்கின்றன. ஆனாலும் தனித்தனியே ஒவ்வொரு கட்டுரையும் ஒரு சமூகக் கருத்தை முன்வைக்கிறது. அனைத்து கட்டுரைகளும் ஏதாவது ஒரு வடிவில் நம் அறிவைத் தொடுகிறது.  அதில் முத்தாய்ப்பாய் “கைகள் இரண்டால்” கட்டுரை. ஆனால் இது அறிவிற்கு பதில் மனதினைத் தொடுகிறது.

எல்லா கட்டுரைகளிலும் ராமகிருஷ்ணன் ஏதாவது ஒரு வேற்று மொழி படத்தினையோ, நூலையோ மேற்கோள் காட்டி தன் கருத்தை விளக்குகிறார். அதனால் சிறந்த பிற மொழிப் படங்களையும், புத்தகங்களையும் தேர்வு செய்ய இந்த புத்தகத்தை ஒரு கருவியாகக் கொள்ளலாம்.

நாம் நாமல்ல

நாம் நம் இடத்தை விடுத்து நீண்ட தூரம் செல்லச் செல்ல நம்முடைய செயல்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. ஏனெனில் எந்த ஒரு நிலையிலும் நம்முடைய செயல்பாடு நாம் சார்ந்திருக்கக்கூடிய சமூகத்தின் செயல்பாடாகவே பார்க்கப்படுகிறது. இங்கே குறிப்பிடப்படும் சமூகம் என்பது நம் இடத்தையும் பதவியையும் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும்.

எனது பள்ளி நாட்களில் நான் முதல் பரிசு பெற்றபொழுது எனது சுற்றுவட்ட கிராமங்களில் எனது செயல்பாடு எனது கிராமத்தின் ஒருவனது செயல்பாடாகவே பார்க்கப்பட்டது. ” School First நாட்டாம்பட்டி பையனாம்” என்றே பலர் கூறினர். ஏன் என்னிடமே பலர் அவ்வாறு கூறியதுண்டு. இது அவர்கள் மத்தியில் என் ஊரின் மீதான மதிப்பினை சற்று உயர்த்தியிருக்கும். என்னை மறந்து அந்த நிகழ்வையும் என் ஊரையுமே மக்கள் நீண்ட நாள் நினைவில் வைத்திருந்தனர்.

Continue reading

இசையும் பாடலும்

நம் மனநிலையை மாற்றும் சக்தி இசைக்கும் பாடலுக்கும் எப்போதுமே உண்டு. இசையும் பாடலும் ஆரம்ப காலம் தொட்டே நம்மோடு இணைந்து வருகிறது. முற்றிலும் படிப்பறிவில்லாத காலகட்டத்திலும் கூட நாட்டுப்புற பாடல்களை பாடியபடியே கிராம மக்கள் வேலை செய்ததை இலக்கியங்களில் காணலாம். இன்றும் சில கிராமங்களில் வேலை நேரங்களின் போது வேலையாட்கள் பாடுவதைக் கேட்கலாம். நன்கு உற்று கவனித்தால் அவர்கள் முதியவர்களாக இருப்பார்கள். ஆனால் இசை என்பது உயர்குடி மக்களுக்கு மட்டுமே என்ற நிலையை பிற்கால உயர்குடி மக்கள் தோற்றுவித்தனர். 

 ஆனால் இன்றைய நிலையில் இசை, பாடல் என்பதெல்லாம் சினிமா இசையையும் பாடலையுமே குறிக்கும் சொற்களாய் மாறிப்போய் விட்டன. இருந்தாலும் இன்றைய இசை கூட ஏதோ ஒரு வகையில் நம்மை அறியாமல் நம்மோடு கலந்து விட்டிருக்கிறது. நாம் கேட்கும் ஒவ்வொரு பாடலும் ஏதோ ஒன்றை நமக்கு நினைவு படுத்துகிறது. 

Continue reading

அந்நிய நேரடி முதலீடு என்ன செய்யும்?

blog_post_8சில்லறை வர்த்தக அந்நிய நேரடி முதலீடு என்ன செய்யும்?

இந்தியச் சந்தையில் அந்நிய முதலீட்டிற்கான பல்வேறு விதிகளையும், உச்ச வரம்பையும் மத்திய அரசு தளர்த்தியிருக்கின்றது. அதில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு அனைத்து மாநில ஒப்புதலோடுதான் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு அறிவித்து அதன் காரணமாக எழுந்த கொந்தளிப்புகளை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது. இது தற்காலிகம்தான். 
விரைவில் அரசு அதையும் அறிவிக்கும்.

அந்நிய முதலீட்டாளர்கள் சில்லறை வணிகத்தில் முதலீடு செய்வதால் நன்மை என்ன? தீமை என்ன?

இந்தியாவில் கட்டுமானத்துறைக்கு அடுத்து அதிக வேலை வாய்ப்புகளை வழங்கிக்கொண்டிருப்பது சில்லறை வர்த்தகம்தான். அதாவது மொத்த வேலை வாய்ப்பில் 7%.

Continue reading

விஜய் டிவியில் எப்படி Program நடத்துவது?

vijaytvஎளிய‌ வழிமுறைகள்.

1. எந்த program ஆ இருந்தாலும் அதுல குண்டா ஒரு பையன் இருக்கணும். (Ex 7C,கனா காணும் காலங்கள், Super Singer இப்படி)

2. program 30 நிமிஷம்னா விளம்பரம் கொறஞ்சது 6 மணி நேரமாவது போடணும். (Ex: இளையராஜா கனடாவுல பண்ற program 1 மணி நேரம்னா, விளம்பரம் 15 மணி நேரம் போடணும்.)

3. ஒரு program ஹிட் ஆயுடுச்சுன்னா அதுல கொறஞ்சது 25 Season வரைக்கும் கொண்டு போகணும். (Ex: Super Singer Season 26, Home Sweet Home Season 36 இப்படி)

4. அதே மாதிரி ஒரு program ஹிட் ஆனா அதுல இருந்து இன்னொரு program கொண்டு வரணும். (Ex: Super Singer ல இருந்து Super Singer Junior வந்த மாதிரி Super Singer Senior Citizen, Super Singer Middle Aged citizen , அப்புறம் 7C ல இருந்து 7D,7E இப்படி)
Continue reading

விளையாட்டல்ல வியாபாரம்


iplசமீபத்திய ஆண்டுகளில் பெரும்பாலானவர்களின் பேச்சுக்களில் இந்த வார்த்தை இடம் பிடித்திருக்கும். IPL

அவர்கள் அனைவருக்கும் (எனக்கும் சேர்த்து) கேள்வி இதுதான். IPL ஆல் அடைந்த நன்மைகள் என்னென்ன? பட்டியலிடுங்கள். நன்மை என்பது உங்களுக்காகவோ நாட்டுக்காகவோ இருக்கலாம். சிறந்த பொழுதுபோக்கு என்பதை தவிர்த்து ஒரு சில நன்மைகளை மட்டும்தான் கூற முடியும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Continue reading