2014 ஆம் ஆண்டினை நிர்ணயம் செய்யப்போகும் நிறுவனங்களாக
எதிர்பார்க்கப்படுபவை இவைதான்.
2014 ஆம் ஆண்டினை நிர்ணயம் செய்யப்போகும் நிறுவனங்களாக
எதிர்பார்க்கப்படுபவை இவைதான்.
மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்த சாரதி அவர்களால் பல்வேறு காலக் கட்டங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.
ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்து எழுதப்பட்ட குவியல் அல்ல. கற்பு, அரசியல், தமிழக, இந்திய, உலக இலக்கியம், சினிமா, இலக்கணம், உலகப்போர் என பல்வேறு துறைகள் தொடர்பான கருத்தாளமிக்க கட்டுரைகள். மிகவும் மூத்த படைப்பாளி என்பதனால் அவருடைய சொல் வண்ணமும், தகவல்களின் தரமும் இயல்பாகவே உயர்வாக இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆரம்ப நிலை கட்டுரைகளில் இல்லாமல், பின்னர் வரும் கட்டுரைகளில் உள்ள நகைச்சுவை உணர்வு நான் விரும்பி ரசித்த ஒன்று. அத்துணை சிறப்பான நகைச்சுவைகள். அந்த அந்த நிகழ்வுகளுடன் பொருந்திப் போகின்ற நகைச்சுவைகள். மொத்தத்தில் என் பார்வையில் இன்னுமொரு விழியைத்திறக்கும் நூல்.
நம்மிடம் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் நம்மிடம் பதில் இருக்கிறது. அது சரியானதா இல்லையா என்பதை விட என்னால் பதிலளிக்க முடிகிறது என்பதனையே நம் திறமையாக எண்ணுகிறோம். நமக்குத் தெரிந்த தகவல்களின் அடிப்படையிலோ, கேள்வி ஞானத்தின் அடிப்படையிலோ இப்போதைய கேள்விக்கான பதிலை உருவாக்குகிறோம். பின்னர் அதை மெய்ப்பிப்பதற்கான ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் நம் மனம் இறங்கி விடுகிறது.
கற்றலின் முதல் நிலையென்பதே நமக்குத் தெரியாத ஒன்றை தெரியாது என ஒப்புக் கொள்வதிலிருந்தே தொடங்குகிறது. நாம் ஒருவருடைய கேள்விக்கு பதிலளிக்கும்போதே நம் உள்மனதுக்குத் தெரியும், இது சரியான பதிலில்லை என்பது. ஆனால் அந்த எண்ணத்தை நாம் மென்மேலும் ஆள சிந்திக்காமல் மற்றவரிடம் விளக்குவதைப் போலவே நம் மனதுக்கும் விளக்கி அந்த ஆரம்ப கட்ட அற உணர்வை மேலெழுந்து வரவிடாமல் செய்து விடுகிறோம்.
நம்மிடம் கேள்விகளை விட மற்றவரின் கேள்விகளுக்கான பதில்கள் நிறைய உள்ளன. அறிதலின் அடிப்படை எப்போதும் கேள்வியோடிருப்பதே ஒழிய பதில்களோடு இருப்பது அல்ல. இதன் பொருள் பதில்கள் இல்லாமல் இருப்பது என்பது அல்ல. உண்மையாக அறியத்தொடங்கும் பொழுது நம் ஒவ்வொரு கேள்விக்கும் கிடைக்கும் பதில், இன்னும் பல கேள்விகளை எழுப்புகிறது. அதனைப் பின்தொடர்ந்து அந்த கேள்விக்கான பதிலை அறியும்பொழுது அது அதனுடைய கேள்விகளை கொண்டுள்ளது. ஆகவே கேள்வியோடிருங்கள் என்பதன் பொருள், பதிலில்லாமல் இருங்கள் என்பதல்ல. கேள்விகளோடு இருங்கள்; விடைகளைத் தேடுங்கள்; மீண்டும் அடுத்தகட்ட கேள்விகளோடு இருங்கள் என்பதே.
வழுக்கைத் தலைகளைப் பார்க்கும்போதெல்லாம்
நாளைய நானாகத் தெரிகிறார்கள் அவர்கள்!
ஒருவேளை அவர்களுக்கு
நேற்றைய அவர்களாகத் தெரியலாம் நான்!
இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் குறித்த சுதந்திரத்திற்கு முந்தைய பிந்தைய நிகழ்வுகள், வனத்தைக் காத்தல் என்ற பெயரில் காட்டுவாசிகளை விரட்டி காட்டை வணிக நோக்கில் பயன்படுத்திய செயல்பாடுகள்,அமெரிக்க வாழ்வினை போல வாழ முயலும் நம்முடைய நுகர்வு என ஒட்டுமொத்த சூழலியல் பார்வையே how much a person should consume?.
ராமச்சந்திர குஹா அவர்களால் ஆங்கிலத்தில்ல் எழுதப்பெற்ற இந்நூல் தமிழில் போப்பு அவர்களால் நுகர்வெனும் பெரும்பசி எனும் பெயரில் வெளிவந்துள்ளது.
இப்படியாக பல சூழலியல் கருத்துக்களின் தொகுப்பு நூல் how much a person should consume? .சுற்றுச்சூழல் குறித்த புரிதலுக்கான் சிறந்த நூல்.