பெரியம்மை என்னும் உயிர்கொல்லி

இந்த நோயின் காரணமாக 1700 களின் பிற்பாதியில் ஐரோப்பாவில் மட்டும் 4 லட்சம் மக்கள் வருடத்திற்கு மாண்டனர். 20 ஆம் நூற்றாண்டில் 30 முதல் 50 கோடி மக்களின் மரணத்திற்கும் இந்த நோய் காரணமாக அமைந்தது. அந்நோய் smallpox எனப்படும் பெரியம்மை.

ஆரம்பகாலத்தில் இந்நோய் தாக்கினாலே மரணம் என்ற நிலை இருந்தது. ஆரம்பத்தில் அரிப்பு, காய்ச்சல் எனத்தொடங்கும் இந்நோய் கிட்டத்தட்ட 12 நாட்களில் உயிரைக் குடித்துவிடும்.இந்நோய் Variola Major மற்றும் Variola Minor என்னும் இருவகை கிருமிகளால் தோன்றுகிறது. Variola Major தொற்று ஏற்பட்டவர்களில் 30 முதல் 35 விழுக்காடு மக்கள் மாண்டனர். Variola Minor தொற்றினால் மாண்டவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அது முகத்திலும் உடம்பிலும் அழியாத் தழும்புகளை ஏற்படுத்தியது. Variola Major தொற்று ஏற்பட்டு பிழைத்தவர்கள் உடம்பெங்கும் மிக அதிக அளவில் தழும்புகள் ஏற்பட்டன. நாம் இன்றும் கூட உடம்பெங்கும் அம்மைத் தழும்பு உடைய பலரைக் காண முடியும்.

இந்நோய் அதிகமாக 20 ஆம் நூற்றாண்டில் பரவினாலும் கி.மு 10000 க்கும் முற்பட்ட ஒரு எகிப்திய அரசனின் மம்மியிலேயே இந்நோய்த் தழும்புகள் கண்டறியப்பட்டுள்ளன.இந்நோய்க்கிருமி Orthopox என்னும் ஒருவகை நுண்ணுயிரிக் குடும்பத்தைச் சார்ந்தது. இக்குடும்பத்தில் Variola, Vaccinia, Cowpox, Monkeypox என்னும் நான்கு வகை கிருமிகள் உண்டு. இவற்றுள் Variola மனிதனைத் மட்டும் தொற்றும். மற்றவை மனிதனையும் மிருகங்களையும் தொற்றும். 

இந்நோய்க்காக பல்வேறு மருத்துவ முறைகள் பின்பற்றப்பட்டாலும் எட்வர்டு ஜென்னர் என்பவர் கண்டறிந்த மருந்தே இந்நோய்க்கான நிரந்தர மருந்தாக பின்னாளில் அங்கீகரிக்கப்பட்டது.

Vaccinia என்னும் அதே Orthopox குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு கிருமியே இந்த கிருமிக்கான எதிர்ப்பு ஆற்றலை உண்டு பண்ணுகிறது என்பதனைக் கண்டறிந்தார் ஜென்னர். Cowpox என்னும் நோயுடைய பசுவிலிருந்து பெற்ற Vaccinia நுண்ணுயிரியை ஒரு சிறுவனின் உடலில் செலுத்தி பின் சில நாள் கழித்தி பெரியம்மை நோயை உண்டு பண்ணும் Variola நுண்ணுயிரியினை அச்சிறுவனின் உடலில் செலுத்தும் பொழுது அச்சிறுவனின் உடலில் அக்கிருமி எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதனை சோதனை மூலம் கண்டறிந்தார். பெரியம்மைக்கான மருந்து கண்டுபிக்கப்பட்டுவிட்டது

பின்னாளில் அம்மருந்து உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது. அனைத்து பிறந்த குழந்தைகளுக்கும் பெரியம்மை தடுப்பூசி என்ற பெயரில் போடப்பட்டது. கிட்டத்தட்ட பெரியம்மையே உலகில் இல்லாத நிலை ஏற்பட்டது. பெரியம்மை முற்றிலுமாக அழிக்கப்பட்டது.

இருப்பினும் ஆய்வுகளுக்காக சில நாடுகள் அக்கிருமியை வைத்திருந்தனர். இந்நிலையில் 1978 ல் பர்மிங்காம் மருத்துவக்கல்லூரியிலிருந்த‌ Janet Parker என்னும் மருத்துவ புகைப்படக் கலைஞர் இந்நோய்த் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார். அதற்கு காரணமான பேராசிரியர் Henry Bedson என்பவர் பின்னாளில் தற்கொலை செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து உலக சுகாதார மையம் உலகெங்கும் உள்ள அக்கிருமிகளை அழிக்க உத்தரவிட்டது. இருப்பினும் சில நாடுகள் ஆய்வுகளுக்குத் தேவை என வலியுறுத்தியதனால் மிக அதிக பாதுகாப்புடைய அமெரிக்க மற்றும் ரஷ்ய ஆய்வுக்கூடங்களில் மட்டும் வைத்துக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

இருப்பினும் இந்நோய்க்கிருமியை எனப்படும் போர் உத்தியாக நாடுகள் மற்றும் தீவிரவாத அமைப்புகள் பயன்படுத்தக் கூடும்; எனவே அவற்றை முற்றிலுமாக அழித்துவிட வேண்டும் என்றும் ஒரு சாரர் கூறுகின்றனர்.

நாம் நினைவில் கொள்ள வேண்டியதெல்லாம் பல கோடி மனிதர்கள் மாண்டு, பின்னர் நூற்றாண்டுகளாக ஆய்வு செய்து நமக்கான இவ்வாழ்வை அறிவியல் அழித்துள்ளது. எனவே அறிவியல் மக்களை அழித்துவிட்டது எனத் தூற்றாமல் அறிவியலைப் போற்றுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.