Parliment of Great Britain

House of Common & House of Lords என்பவை இங்கிலாந்தின் பாராளுமன்றத்தின் இரு அவைகள் ஆகும். இந்திய அரசியலமைப்பும் இங்கிலாந்து அரசியலமைப்பைக் கொண்டே வடிவமைக்கப்பட்டது.
இங்கிலாந்தின் பாரளுமன்றம் பற்றிய சில தகவல்கள்.

uk_small

இங்கிலாந்து பாரளுமன்றம் House of Common & House of Lords எனும் இரு அவைகளால் நிர்ணயிக்கப்படுகிறது.House of Common எனும் அவை 650 உறுப்பினர்களைக் கொண்டது. அனைத்து உறுப்பினர்களும் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படுகின்றனர்.

650 உறுப்பினர்களில் 533 உறுப்பினர்கள் இங்கிலாந்தில் இருந்தும் 40 உறுப்பினர்கள் வேல்ஸில் இருந்தும் 59 உறுப்பினர்கள் ஸ்காட்லாந்தில் இருந்தும், 18 உறுப்பினர்கள் வடக்கு அயர்லாந்தில் இருந்தும் தேர்வு செய்யப்படுகின்றனர்.அவையின் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகள். மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலொழிய முன் கூட்டியே தேர்தலை நடத்த முடியாது.

உறுப்பினர்கள் அனைவரும் Palace of Westminister ல் கூடி விவாதிப்பர், அதுவே அரசின் அலுவலகமும்.House of Lords (பேராயர்கள் அவை) எனப்படும் மற்றோர் அவை நேரடியாக நிர்ணயம் செய்யப்படும் உறுப்பினர்களைக் கொண்டது. இங்கு மொத்தம் 780 உறுப்பினர்கள்.

அவர்களில் பலர் தேவாலயத்தின் பாதிரியார் குழுவாலும், பரம்பரைக் குடும்ப உரிமைகளாலும் நிர்ணயம் செய்யப்படுகின்றனர்.

House of Common முதன் முதலாக 14 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினரே அமைச்சர் ஆவதற்கு தகுதியானவர்.  மிக அவசிய தருணங்களில் உறுப்பினர் அல்லாதவர் அமைச்சர் ஆகும் வாய்ப்பு இருப்பினும் House of Lords வழியாக அவரும் உடனடியாக உறுப்பினர் ஆக்கப்படுவார்.

பிரதம மந்திரி House of Common  சேர்ந்தவராகவே இருப்பார்.நிதி, வரி தொடர்பான சட்டங்கள் House of Common  ல் நிறைவேற்றப்பட்டு House of Lords ன் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.

House of Lords அந்த சட்டங்களில் மாற்றங்களுக்கு பரிந்துரைக்கலாம். ஆனால் த‌டை செய்ய முடியாது. பரிந்துரைகள் ஏற்கப்பட்டால் மீண்டும் House of Common ல் ஒப்புதல் பெற வேண்டும்.

House of Lords விட House of Common அதிக அதிகாரம் வாய்ந்தது. ஆரம்பத்தில் இரு அவைகளுக்கும் சம அதிகாரமே வழங்கப்பட்டு வந்தது. 1908 ஆம் ஆண்டு Liberal அரசின் Asquith என்பவ‌ரின் தலைமியிலான அரசு சமூக மேம்பாட்டுக்கான பல்வேறு மாற்றங்களை சட்டமாக்க முயன்றது.

அந்த சட்டங்கள் பெரும்பாலும் பணக்காரர்களிடமிருந்து அதிக வரியைப் பெறும் வண்ணம் இருந்ததால் House of Lords ல் இருந்த Conservative உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டது

அதனால் அரசு ராஜினாமா செய்தது. பின்னர் மீண்டும் தேர்தலுக்குப் பின்னர் Asquith ஆட்சி அமைத்தார். பின்னர் 1911 ஆம் ஆண்டு House of Lords ன் அதிகாரங்களை குறைக்கும் வண்ணம் சட்டமியற்றப்பட்டது.

ஒவ்வொரு வார புதன்கிழமையும் 30 நிமிடங்கள் கேள்வி நேரத்திற்காக ஒதுக்கப்படும். அவையின் மற்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வினா எழுப்பலாம்.

17 ஆம் நூற்றாண்டு வரை உறுப்பினர்கள் சம்பளம் இல்லாமலேயே பணியாற்றி வந்தனர். பின்னரே சம்பளம் வழங்கும் வண்ணம் சட்டம் இயற்றப்பட்டது.முதலில் இங்கிலாந்துக்காக மட்டும் இருந்த பாராளுமன்றம் 1706 ல் ஸ்காட்லாந்துடனான இணைப்புக்குப் பின்னர் Parliment of England என்பதில் இருந்து Parliment of Great Britain என பெயர் மாற்றம் பெற்றது.

பின்னர் 1800 ல் அயர்லாந்து இணைக்கப்பட்டது. அவையில் மேலும் 100 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.

427 இருக்கைகள் மட்டுமே அவையில் உண்டு. எனவே அனைத்து உறுப்பினர்களுக்கும் சபையில் அமர இடம் கிடையாது. முதலில் வருவோருக்கு மட்டுமே அமர இடம். மற்ற உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க விரும்பினால் வாயிலில் நின்றபடி பங்கேற்கலாம்.

தேர்தல் நடைமுறைகள்

1918 ல் 30 வயதுக்கு மேலுள்ள பெண்கள் வாக்களிக்க உரிமை அளிக்கப்பட்டது.

அனைத்து தேர்தல்களும் வியாழக்கிழமைகளில் நடைபெறும்.

தேர்தலில் போட்டியிடுபவர் 5 சதவித வாக்குகள் பெற்றால் கட்டணத்தொகையான 500 பவுண்டுகள் திருப்பியளிக்கப்பட்டுவிடும்.

8 முதல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொகுதிகள் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் மறு நிர்ணயம் செய்யப்படும்.

பாரளுமன்ற உறுப்பினராக குறைந்த பட்ச வயது 18 ஆண்டுகள்.

ஒரு வருடத்திற்கு மேல் தண்டணை பெற்றவர்கள் உறுப்பினராக முடியாது.

இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர்கள் வாக்களிக்கலாம்.போட்டியிடலாம். ஆனால் வேறு நாடுகளுக்கு சென்ற குடிமக்கள் 15 ஆண்டுகள் வரை வாக்களிக்கலாம்.

காது கேளாமை, வாய் பேசாமை இரண்டும் உள்ளவர்கள் உறுப்பினராக முடியாது. காது கேட்கும் தன்மை இல்லாத Jack Ashley என்பவர் 1966 முதல் 1992 வரை உறுப்பினராக இருந்தார்.

ஆளுங்கட்சி உறுப்பினர்கள் Speaker (சபாநாயகர்) உடைய வலதுபுறத்திலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் இடது புறத்திலும் அமர்வர்.

தற்போதைய அரசு Conservative Party மற்றும் Liberal Democrats கட்சிகளின் கூட்டணி அரசாகும். எதிர்க் தொழிலாளர் கட்சி. அடுத்த தேர்தல் 2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.