நுகர்வு எனும் நோய்

இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் குறித்த சுதந்திரத்திற்கு முந்தைய பிந்தைய நிகழ்வுகள், வனத்தைக் காத்தல் என்ற பெயரில் காட்டுவாசிகளை விரட்டி காட்டை வணிக நோக்கில் பயன்படுத்திய‌ செயல்பாடுகள்,அமெரிக்க வாழ்வினை போல வாழ முயலும் நம்முடைய நுகர்வு என‌ ஒட்டுமொத்த சூழலியல் பார்வையே how much a person should consume?.
nuharvenum_perumbasi

ராமச்சந்திர குஹா அவர்களால் ஆங்கிலத்தில்ல் எழுதப்பெற்ற‌ இந்நூல் தமிழில் போப்பு அவர்களால் நுகர்வெனும் பெரும்பசி எனும் பெய‌ரில் வெளிவந்துள்ளது. 

  • தனிமனிதன் செய்யும் மனித குல அழிவிற்கான செயல் நுகர்வு. காட்டுவாசி என்னும் வார்த்தையையே நாகரிமற்ற சொல்லாக மாற்றிய அவலம் நம் நாட்டில்தான்.
  • இன்றும் காட்டுவாசி என்ற நாகரிகம் என்பதன் எதிர்ப்பதமாகவே உருவகம் செய்கிறோம். இயற்கையை அழிக்காமல் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்தும் அவர்கள் நாகரீகமற்ற மனிதர்கள். சுய நலத்துக்காக இயற்கையை அழித்து, நம் இடத்தை நாசப்படுத்தி பல் உயிர்கள் வாழ இயலாத இடமாக மாற்றிவிட்டு அவர்களுடைய வளங்களையும் உறிஞ்சும் நாம் நாகரிக மனிதர்கள். 
  • நாம் உரக்க ஒலிப்பதால் நம் குரல் ஓங்கி ஒலிக்கிறது. உரக்கக் கேட்கிறது. அவர்கள் உரக்க ஒலிப்பதில்லை. ஒலிக்க முடிவதில்லை.
  • இந்தியாவை பிரிட்டீஷ் ஆண்ட காலத்தில் அரசின் காடுகள் மீதான உரிமையை நிலைநாட்டுவதற்காக அங்கு வாழ்ந்த ப‌ல்லாயிரம் மக்கள் வேறு இடங்களுக்கு கட்டாயமாக அனுப்பப்பட்டார்க்ள். அதற்கு முக்கிய காரணம் காட்டின் வளம் முழுமையாக அப்போதையா அரசுக்குத் தேவைப்பட்டது. வணிக ஏற்றுமதி செய்யவும், ரயில் தண்டவாளங்கள் அமைக்கவும் இன்னும் பல தேவைகளுக்கும் மரம் தேவைப்பட்டது.
  • பிரிட்டீஷ் நிர்வாகத்தின் ஆரம்ப 40 ஆண்டுகளில் மட்டும் 80000 மைல்கள் ரயில் பாதைகள் போடப்பட்டன. இதற்காக பல லட்சம் மரங்கள் அழிக்கப்பட்டன. அங்கு வாழ்ந்த காட்டுவாசி மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.ரயில் பாதைகளும் துறைமுகங்களை நோக்கியே வணிக நோக்கிற்காக போடப்பட்டன.
  • பின்னர் வந்த இந்திய சுதந்திர அரசும் காட்டின் மீதான பாதுகாப்பு என்ற பெயரில் மலைவாழ்மக்களின் காடுகள் மீதிருந்த உரிமைகளையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் அழித்தது.
  • காட்டை வணிக நோக்கில் அழித்தவர்கள் தப்பிப்பதற்காக மலைவாழ் மக்கள் பலியாக்கப்பட்டனர்.
  • மலைவாழ் மக்கள் காட்டினை தங்கள் வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்தினார்களேயன்றி வணிகத்திற்காக அன்று.
  • மேலும் வணிக நோக்கிற்காக ஓக் மரங்கள் அழிக்கப்பட்டு பைன் மரங்கள் நடப்பட்டன. இம்மரங்கள் புல் மற்றும் வேறு பல செடிகள் வளரவிடாமல் காட்டின் பல்லுயிர் அமைப்பைக் கெடுத்தன. இதனால் தங்களுடைய கால்நடைகளுக்கான தீவனம் போன்றவை கிடைக்காமல் காட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
  • இன்றும் கூட இயற்கை பாதுகாக்கப்பட வேண்டுமென்று கூறுபவர்களின் வாதப் பின்னணி என்பது மரங்களும் உயிர், விடுமுறை நாட்களில் நுகர்தல் என்ற நிலையிலேயே பார்கப்படுகின்றது. காடு என்பது அம்மக்களின் வாழ்வாதாரம் என்ற எண்ணத்தில் பார்க்கப்படுவ‌தில்லை. 
  • தன் தேவைக்கு அதிகமாகவே நுகரும் வாழ்க்கைக்கு பழகிவிட்டோம் நாம். அதுவே நமக்கும் இயல்பாகவே தெரிகின்றது. எல்லா பொருளையும் மறு உபயோகமோ, நீண்ட கால உபயோகமோ செய்வதில்லை.
  • நாம் அமெரிக்க இங்கிலாந்து வாழக்கை முறையை நோக்கி பயணிக்கிறோம். 100 இந்தியர்களினால் ஏற்படும் சுற்றுச் சூழல் சீர்கேட்டை ஒரு அமெரிக்கன் ஏற்படுத்தி விடுகிறான். ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் 4 விழுக்காடு இருக்கும் அமெரிக்கா உலக உற்பத்தி வளத்தில் 30 விழுக்காட்டை நுகர்கின்றது. 
  • அந்த நிலையை நோக்கி பயணிக்கும் நாமும், சீனர்களும் அதனை அடையும் பட்சத்தில் உலகில் நுகர்வதற்கு இயற்கை இல்லாத நிலையே உருவாகும். 
  • இன்று நுகர்வில் கட்டுப்பாடு விதிப்பதனையோ, சுய அளவில் தேவைக்கு மேல் நுகராத நிலையையோ ஏற்கத் தயங்கும் நாம் ஒரு நாள் கண்டிப்பான நுகர்விற்காக தள்ளப்படுவோம்.

இப்படியாக‌ பல சூழலியல் கருத்துக்களின் தொகுப்பு நூல் how much a person should consume? .சுற்றுச்சூழல் குறித்த புரிதலுக்கான் சிறந்த நூல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.