Month: January 2020

புது வருடம் ‍- 2020


இந்த ஆண்டில்
1. 52 புத்தகங்களை வாசிப்பது
2. வாசித்த புத்தகங்களுக்கான அறிமுகத்தை தமிழில் காணொளியாக இணையத்தில் பதிவேற்றுவது
3. தெலுங்கு மொழியினை சரளமாக பேசவும்,எழுதவும்,வாசிக்கவும் கற்றுக்கொள்வது
என மூன்று செயல்களைத் திட்டமிடுகிறேன்.

சென்ற ஆண்டில் 50 புத்தகங்களை வாசிக்கத்திட்டமிட்டு 7 புத்தகங்களை மட்டுமே முழுமையாக வாசித்தேன். எந்த விதமான காரணம் கூறிக்கொண்டாலும் திட்டமிட்டதனை அடய முடியவில்லை என்பதே உண்மை. அதிலுள்ள குறைபாடுகளை திருத்திக்கொண்டு மீண்டும் முன் செல்லத் திட்டமிடுகிறேன்.

இரண்டாவதாக, வாசித்த புத்தகங்களைப்பற்றி இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்கான காரணம் ஒன்று உள்ளது. அதனை பின்னர் பதிவிடுகிறேன். ஏன் இப்பொழுது பதிவிடவில்லை என்பதனையும் அப்பொழுதே விவரிக்கிறேன்.

மூன்றாவதாக தெலுங்கு மொழி தொடர்பாக. சென்ற வருட திட்டமிடல் தான். மீண்டும் இவ்வருடத்தில்.

இவையல்லாமல் மேலும் இரண்டு புதிய பழக்கவழக்கங்களை கைக்கொள்ளத் திட்டமிடுகிறேன். அது தினமும் அதிகாலையில் 4 மணிக்கு எழுவது மற்றும் தினமும் மைதானத்திற்கு உடற்பயிற்சிக்கு செல்வது என. பார்க்கலாம்.
நன்றி.

2019 – ஓர் மீள்பார்வை

2019 ஆண்டில் மூன்று செயல்பாடுகளை திட்டமிட்டிருந்தேன். அதனை என்னுடைய தளத்திலும் பதிவிட்டும் இருந்தேன் (http://www.mahiznan.com/2019/01/06/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e2%80%8d-2019/) . வெளிப்படையாக பதிவிட்ட‌தற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று, வருட இறுதியில் அவ்வாண்டில் திட்டமிட்டவற்றில் எவ்வளவை முடிக்க முடிந்திருக்கிறது, திட்டமிடுதலுக்கும் அடைவதற்குமான இடைவெளி எவ்வளவு இருக்கிறது என்பதனை துல்லியமாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதுதான்.

2019 ல் திட்டமிடப்பட்ட மூன்று செயல்பாடுகள்.

  1. 50 புத்தகங்களினை வாசித்தல்
  2. 50 கட்டுரைகளைப் பதிவிடுதல்
  3. தெலுங்கு மொழியினை பேசவும் எழுதவும் வாசிக்கவும் செய்வது

திட்டமிட்ட 50 புத்தகங்களில் 7 புத்தகங்களை சென்ற ஆண்டில் வாசித்திருக்கிறேன். அவை.

  1. ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது – ஜெயகாந்தன்
  2. நெல்சன் மண்டேலா – தா.பாண்டியன்
  3. கன்னி நிலம் – ஜெயமோகன்
  4. Rich Dad Poor Dad – Robert Kiyosaki
  5. உன்னோடு ஒரு நிமிஷம் – வெ.இறையன்பு
  6. ஊர்களில் அரவாணி – ம.தவசி
  7. Homo Deus – Yuval Noah Harari

இன்னும் சில புத்தகங்கள் துவங்கி முடிக்காமலேயே இருக்கின்றன. அவற்றையெல்லாம் நான் சேர்க்கவில்லை. முழுமையாக வாசித்தவற்றை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கேன். திட்டமிட்டதற்கும் அடைந்ததற்கும் வேறுபாடு மிக அதிகம். 14 விழுக்காடு மட்டுமே அடைந்திருக்கிறேன். இந்த ஆண்டில் 100 விழுக்காடு அடையவேண்டும் என சபதமேற்கிறேன்.

இரண்டாவதாக புத்தகம் பற்றிய கட்டுரைகள் அல்லாமல், 50 கட்டுரைகளை பதிவிட திட்டமிட்டிருந்தேன். அதனை முற்றிலுமாக செய்யவில்லை. ஒரேயொரு கட்டுரையினை மட்டுமே பதிவிட்டிருந்தேன். இதுவும் 99 விழுக்காடு அடையவில்லை.

மூன்றாவதாக தெலுங்கு மொழியினை பேச, எழுத, வாசிக்க தெரிந்து கொள்வது. இதில் ஒரு குறிப்பிடத்தக்க அளவில் திட்டமிட்டதை அடைந்திருக்கிறேன். தற்போது என்னால் ஒரளவிற்கு தெலுங்கில் உரையாட முடியும். தெலுங்கு மொழித் திரைப்படங்களின் வசனங்களில் 50 விழுக்காட்டினை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது. முக்கியமாக நான் கவனம் செலுத்தாமல் விட்டது வாசிப்பது மற்றும் எழுதுவது. அந்த இரண்டிலும் மீண்டும் இவ்வாண்டு முழுக்கவனம் செலுத்த வேண்டும் என்பது திட்டம்.

சென்ற ஆண்டில் கற்ற பாடங்களைக் கொண்டு இந்த ஆண்டிற்கான செயல்பாடுகளைத் திட்டமிட்டுள்ளேன் (அது தனி பதிவாக). பார்க்கலாம்.

Home Deus – Yuval Noah Harari

This books follows the popular book ‘The Sapiens’ from the same author Yuval Noah Harari. If you have not read the book ‘The Sapiens’ it should be read first. So that it will give better picture on understanding this book.
The Sapiens talks on how the homo sapiens evolved as human being in detail. This book ‘Homo Deus’ talks about how the Sapiens conquered the entire world and how it made humanism as the new religion. Also the book discuss in detail on what are all the possible futures for the sapiens and what are all the challenges sapiens may face. The book also raise a question on ‘Sapiens conquered the world from other species, then who will take over from Sapiens in the future?’ and discuss the possibilities in detail.

One of the must read books of lifetime. This book will change the way how we look creed,humans,industrialism.

ஊர்களில் அரவாணி – ம‌.தவசி

ம. தவசி அவர்களால் எழுதப்பெற்ற சிறுகதைத் தொகுப்பு. காவ்யா பதிப்பகம் வெளியீடு. மிகவும் வித்தியாசமான சிறுகதைகள். சராசரியான‌ வார இதழ் சிறுகதைகளை வாசிக்கும் ஒருவர் இக்கதைகளைக் கண்டிப்பாக வாசிக்க வேண்டும். சராசரி சிறுகதைகளில் காட்சிகளின் சித்தரிப்பு, உறவுகளின் சித்தரிப்பு இறுதியில் ஒரு திருப்பம் இப்படியாகத்தான் அமைப்பு இருக்கும். ஆனால் இதிலுள்ள ஒவ்வோர் கதையும் அத்தகைய எந்த வடிவத்திற்குள்ளும் அடங்காதவை. காட்சிகளின் சித்தரிப்புகள் மிக இயல்பானவையாக இருந்தாலும், ஒவ்வோர் கதையிலும் நாம் அந்நிலத்திற்குள் சென்று மீள்வோம் . குறிப்பாக புத்தகத்தின் தலைப்புக்கதையான ஊர்களில் அரவாணி மிகவும் சிறப்பான ஒன்று. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு.