Adolf Hitler: A Life From Beginning to End
ஹிட்லரின் இளமைக்காலம், முதலாம் உலகப்போரில் அவருடைய பங்கு, இரண்டாம் உலகப்போர் மற்றும் அதன் தொடக்கத்திற்கான காரணங்கள், முடிவு போன்ற நிகழ்வுகளின் தொகுப்பே இந்நூல். ஹிட்லரின் மனதில் சிறுவயதிலேயே எப்படி யூதர்கள் மீதான வெறுப்பு உண்டானது என்பது ஆச்சரியமான ஒன்று. முதலாம் உலகப்போரின் போது இருந்த மற்ற ஜெர்மானியக் கட்சிகள் யூதர்களே ஜெர்மனியின் தோல்விக்கும், ஜெர்மனியின் வளர்ச்சிக்குத் தடையெனவும் முழங்கினர். அது அவர்களின் கட்சி வளர்ச்சிக்கு அவசியமான ஒன்றாக இருந்தது. அது ஹிட்லரின் மனதில் ஆழப்பதிந்ததன் தாக்கத்தினை பின்னாளில்…