|

கோடா டிங்கீ – தேசாரு கடற்கரை

கோடா டிங்கீ

Kota Tingii
Kota Tingii

மலேசியாவின் ஜோகோர் மாகாணாத்திலுள்ள ஓர் சுற்றுலாத் தளம். முக்கியமான இடம் அங்குள்ள அருவி. சமீபத்தில் அங்கு சென்றிருந்தேன். இயற்கை எழில் மிகுந்த ஓர் இடம். சிறப்பான முறையில் பராமரித்து வருகிறார்கள். இந்த கோடையிலும் அங்கு தண்ணீர் நன்றாக வருகிறது. மிகவும் சுவையான அருவி நீர். இனிப்பானதாக இருக்கிறது. அருவி வழிந்தோடும் வழியெங்கும் மக்கள் ஆங்காங்கே அமர்ந்து நீரில் விளையாடுகிறார்கள். ஏனென்றால் சில முக்கியமான இடங்களுக்கு மட்டுமே நுழைவுக்கட்டணம். மற்ற இடங்களில் இல்லை. பெரும்பாலும் அங்கு சுற்றுலாவுக்காக மக்கள் வருவதில்லை போலும், அல்லது நான் சென்ற சம‌யத்தில் வரவில்லை. பெரும்பாலும் உள்ளூர் மக்கள். ஆனால் அனைவரிடமும் இது நம்முடைய அருவி, இதனை அசுத்தப்படுத்தக்கூடாது என்ற ஓர் அடிப்படை உணர்வு இருக்கிறது.நுழைவாயிலில் மட்டுமே காவலர்கள் இருக்கிறார்கள். உள்ளே எங்கும் கிடையாது. ஆனாலும் கூட மக்கள் எந்த குப்பையையும் தண்ணீரில் எரிவதில்லை. இதுவே நம் ஊராக இருக்கும் பட்சத்தில் அருவியின் ஓர் ஓரத்தில் ஒர் குப்பைக்குவியலே சேர்ந்திருக்கும். குறிப்பாக ஷாம்பூ பாக்கெட்டுகள். ஜோகோர் மலேசியாவின் வசதியான மாகாணங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஜோகோரிலிருந்து செல்லும் வழியெங்கும் பாமாலின் மரங்களும், ரப்பர் மரங்களும் ஆக்கிரமித்திருக்கின்றன. பாமாலின் எண்ணெய் மிக முக்கியமான உற்பத்திப்பொருள். இந்தோனேசியாவிற்கு அடுத்து உலகில் அதிகம் பாமாலின் உற்பத்தி செய்யப்படுவது மலேசியாவில்தான். நல்ல சுற்றுலாத் தளம்.

தேசாரு கடற்கரை

Desaru Beach
Desaru Beach

கோடா டிங்கியிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஓர் கடற்கரை. மிகவும் சுத்தமான கடற்கரை. கண்ணாடி போன்ற நீர். வெள்ளை வெளேர் மணல். அங்கும் பெரும்பாலும் உள்ளூர் மக்களே. கடற்கரையில் குடும்பத்துடன் பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள். கடல் நீரில் ஓட்டுவதற்கான பைக் வைத்திருக்கிறார்கள். சாகசம் மற்றும் புதுமையில் நன்கு ஆர்வமிருப்பின் முயற்சிக்கலாம். முயற்சித்தேன்.

Water Bike
Water Bike

இக்கடற்கரை மலேசியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. முற்றிலும் இயற்கையாக அமைந்துள்ள ஓர் இடம். அமைதியாக ஆனந்தமாக பொழுதைக் கழிக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற கடற்கரை.

Similar Posts

  • |

    நெல்சன் மண்டேலா – தா.பாண்டியன்

    தா பாண்டியன் அவர்களால் எழுதப்பட்டது. நெல்சன் மண்டேலா அவர்களின் சிறுவயது முதல் தென்னாப்ரிக்காவில் ஜனநாயகம் மலர்ந்தது வரையிலான காலகட்ட நிகழ்வுகளின் தொகுப்பு. 1918 ஆம் ஆண்டு ஜூலை 18ல் பிறந்த நெல்சன் மண்டேலாவிற்கு அவரது தந்தை இட்ட பெயர் ரோலிலாலா. அவரது பள்ளி ஆசிரியர் இட்டபெயரே நெல்சன். சோசோ இனக்குழுவில் பிறந்த மண்டேலாவின் தந்தை காட்லா ஹென்றி அவ்வினக்குழுவின் தலைவர். அதனால் ஓரளவுக்கு வசதியாகவும், பெயருடனும் வாழ்ந்து வந்தனர். அப்பதவிக்கு அங்கு ஆண்டுவந்த வெள்ளையர்களின் அங்கீகாரம் முக்கியமானது….

  • புது வருடம் ‍- 2020

    இந்த ஆண்டில் 1. 52 புத்தகங்களை வாசிப்பது2. வாசித்த புத்தகங்களுக்கான அறிமுகத்தை தமிழில் காணொளியாக இணையத்தில் பதிவேற்றுவது3. தெலுங்கு மொழியினை சரளமாக பேசவும்,எழுதவும்,வாசிக்கவும் கற்றுக்கொள்வது என மூன்று செயல்களைத் திட்டமிடுகிறேன். சென்ற ஆண்டில் 50 புத்தகங்களை வாசிக்கத்திட்டமிட்டு 7 புத்தகங்களை மட்டுமே முழுமையாக வாசித்தேன். எந்த விதமான காரணம் கூறிக்கொண்டாலும் திட்டமிட்டதனை அடய முடியவில்லை என்பதே உண்மை. அதிலுள்ள குறைபாடுகளை திருத்திக்கொண்டு மீண்டும் முன் செல்லத் திட்டமிடுகிறேன். இரண்டாவதாக, வாசித்த புத்தகங்களைப்பற்றி இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்கான காரணம்…

  • மலையாளம் செய்வது எப்படி?

    மலையாளம் செய்வது எப்படி? தேவையான பொருட்கள். தமிழ் தேன் ‍ நான்கு தேக்கரண்டிகள் செய்முறை:ஒரு பாத்திரத்தில் தமிழை விட்டு அதனுடன் நான்கு தேக்கரண்டி தேனை விட்டு நன்கு கலக்கவும். மலையாளம் தயார். தமிழ் செய்வது எப்படி? தேவையான பொருட்கள். மலையாளம் தேன் ‍ நான்கு தேக்கரண்டிகள் செய்முறை:ஒரு பாத்திரத்தில் மலையாளத்தை விட்டு அதனுடன் நான்கு தேக்கரண்டி தேனை விட்டு நன்கு கலக்கவும். தமிழ் தயார்.

  • கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை

    கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை என்றால் என்ன? குழி மற்றும் குவி ஆடிகளை உபயோகிக்கும் பொழுது அவை உண்மையில் எவ்வாறு சரி செய்யப்படுகிறது என்பதனை விளக்கும் ஓர் எளிய ப‌திவு. மிகவும் உபயோகமான ஒர் பதிவு. Click Here  

  • | | |

    நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கலாமா?

    சமீபத்திய நாட்களில் சீமான் மீதான ஆர்வத்தையும் ஆதரவையும் சில இடங்களில் காண முடிகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சி இன்றைய நிலையில் தமிழகத்திற்கு ஓர் மாற்றாக அமையுமா? சீமானுக்கு வாக்களிக்கலாமா? அவரின் இன்றைய இடம் எது? சீமான் நாம் தமிழர் கட்சியை 2010 ல் தொடங்கினார். சென்ற நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். தற்போது தனியாக நிற்பதாக அறிவித்து திராவிடக்கட்சிகள், மக்கள் நலக் கூட்டணி, காங்கிரஸ், பாஜக என அனைத்து கட்சிகளையும் விமர்சனம் செய்து வருகிறார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.