What are Futures?
A simple video from Investopedia that clearly explains what futures are.
2019 ஆண்டில் மூன்று செயல்பாடுகளை திட்டமிட்டிருந்தேன். அதனை என்னுடைய தளத்திலும் பதிவிட்டும் இருந்தேன் (http://www.mahiznan.com/2019/01/06/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e2%80%8d-2019/) . வெளிப்படையாக பதிவிட்டதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று, வருட இறுதியில் அவ்வாண்டில் திட்டமிட்டவற்றில் எவ்வளவை முடிக்க முடிந்திருக்கிறது, திட்டமிடுதலுக்கும் அடைவதற்குமான இடைவெளி எவ்வளவு இருக்கிறது என்பதனை துல்லியமாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதுதான். 2019 ல் திட்டமிடப்பட்ட மூன்று செயல்பாடுகள். 50 புத்தகங்களினை வாசித்தல் 50 கட்டுரைகளைப் பதிவிடுதல் தெலுங்கு மொழியினை பேசவும் எழுதவும் வாசிக்கவும் செய்வது திட்டமிட்ட 50 புத்தகங்களில் 7…
mediocre – மோசமான நிலைக்கும் சராசரி நிலைக்கும் இடைப்பட்ட நிலை Sample Sentence they improved the quality from mediocre to above average
இந்திய சினிமா தனது நூறாவது ஆண்டைக் கொண்டாடிவிட்டது. விழாவும் எடுத்தாயிற்று. இந்த நூறாண்டுகளில் இந்திய சினிமா இந்திய சமூகத்திற்காக செய்தவை என்று எண்ணினால் ஏமாற்றமே. சினிமா தொடர்பான துறையில் இருப்பவர்கள் வேண்டுமானால் சினிமாவைப் பற்றிப் புள்ளிவிபரங்களை அடுக்கி அதனை நியாயப்படுத்த முயன்றாலும் அவர்களுக்கே தெரியும் உண்மை எதுவென்று. அவர்களுக்கு வேறு வழியில்லை. சினிமாவில் உள்ளவர்கள் தங்களைத் தாங்களே உயரத்தூக்கிக் கொள்வார்கள். அதற்கென்றே உள்ளது இன்றைய ஊடகத்துறை. இயல் இசை நாடகத்தின் பரிணாம வளர்ச்சியாக வந்த சினிமா ஆரம்பகாலங்களில்…
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு இந்த ஆண்டே நான் முதன் முதலாக விஷ்ணுபுரம் விழாவில் கலந்து கொண்டேன். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தங்களை வாசித்து வருபவன். சிங்கப்பூரில் பணிபுரிவதால் இந்த வருடம் என்னுடைய பயணத்தை விஷ்ணுபுரம் நிகழ்வினை ஒட்டி அமைத்து கலந்து கொண்டேன். மிகச்சிறப்பான நிகழ்வு. நிகழ்வின் நிரல்களுக்கு வெளியே நடைபெற்றவற்றைப் பற்றி மட்டுமே மிக நீண்ட கட்டுரைகளை எழுதலாம். அந்த அளவிற்கு சிறப்பானதொரு நிகழ்வு. அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல. குடி,சிகரெட் இல்லாமல் நடந்த ஓர்…
ஜானகிராமன் அவர்களின் பத்துக் கதைகளின் தொகுப்பு. அம்ருதா பதிப்பகம் வெளியீடு. கங்கா ஸ்நானம் சிலிர்ப்பு பரதேசி வந்தான் பிடி கருணை முள்முடி மேரியின் ஆட்டுக்குட்டி கோதாவரிக்குண்டு பசி ஆறிற்று சத்தியபாமா செய்தி இவையே அந்த பத்து சிறுகதைகள். வாசிக்க வேண்டிய சிறுகதைகள்.
ஆங்கிலத்தில் மிக அதிகமாக உபயோகிக்கக்கூடிய நூறு வார்த்தைகளில் it ஒன்று. ஆனால் அதில் உள்ள வேறுபாடு அறியாமலேயே பல இடங்களில் அந்த வார்த்தையை உபயோகிக்கின்றோம். its என்பது it என்பதன் possessive form. அதாவது உடைய என்ற பொருளில் வருகிறது. அவனுடைய, அவளுடைய, கண்ணனுடைய என்பது போன்ற இடங்களில். உதாரணத்திற்கு பின்வரும் வாக்கியத்தைக் கவனியுங்கள். “I have to fix my bike. Its front wheel came off”. இதில் its என்பது அதன் என்ற…