மாற்றுச் சிந்தனை
நாள்தோறும் பெருகி வரும் நாம் பெருக்கி வரும் மின் கழிவுகளைக் குறைப்பதற்கான ஒரு மாற்றுச் சிந்தனை. காணொளி இங்கே.
முன்பொருமுறை இந்தியாவின் முன்னாள் திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா அவர்களிடம் ஒரு பேட்டியின் போது ஒரு கேள்வி கேட்கப்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளால் உலகின் ஆதிக்கசக்தியாக மாற இயலுமா? அதற்கு அவர் அளித்த பதில் இப்போதைய காலகட்டத்தில் தன் மக்கள் தொகையில் பாதி மக்களின் உழைப்பை உபயோகப்படுத்தாத ஒரு நாட்டிற்கு அது சாத்தியமில்லை என்பது. சாத்தியமுள்ள மக்களின் உழைப்பாற்றலை உபயோகிக்காமல் இருப்பது ஒரு தேசத்திற்கு இழப்பு என்பது அவரது கருத்து. அக்கண்ணோட்டத்தில் பார்க்கும்பொழுது இந்தியாவில் பெண்களின்…
நமது சமூகத்தின் இன்றைய அடுக்கில் இந்தச் சொற்றொடர் பலரிடமிருந்து வெளிப்படக்காணலாம். “நான் மற்றவரைப்போலல்ல” இதன் சாரம்சம் என்பது. “நான் எண்ணத்திலும் சிந்தனையிலும் அறிவிலும் ஒரு சாதாரண வெகுஜன பிரதிநிதி சிந்திப்பதைக்காட்டிலும் உயர்வாக சிந்திப்பவன்”. இதை புறவயமாக மறுத்தாலும் அதுதான் ஆழ்மன உண்மை. சரி. அந்தச் சராசரி மனிதன் யார்? அவனுடைய செயல்பாடுகள் எத்தகையவை? எல்லோரும் தன்னை சராசரியிலிருந்து விடுபட்ட ஒன்றாகக் கருதினால் உண்மையில் அந்த சராசரி மனிதன் என்பவன் யார்? எங்கிருக்கிறான்?
உலகமெங்கும் மக்களால் ஒரே மொழிதான் பேசப்படப்போகிறது, எழுதப்படப்போகிறது. இதனைச் சிலர் மறுத்தும் சிலர் ஏற்றும் பேசலாம். ஆனால் அதுதான் நடைபெறுகிறது. எந்த ஒரு மொழியும் அதன் வாழும் காலத்தை அதன் மாற்றங்களைக் கொண்டே நிர்ணயம் செய்து கொள்கிறது. காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டே, புதுப்பித்துக்கொண்டே வரக்கூடிய மொழிகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன,எஞ்சியிருக்கும். இன்றைய நிலையில் உலகம் முழுவது ஏறத்தாழ 7000 மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால் அவற்றுள் உலக மக்கள் தொகையில் ஒரு விழுக்காட்டுக்கு மேற்பட்ட மக்களால் பேசப்படும் மொழிகள் 20…
திசம்பர் 6, 1992. அயோத்தியிலிருந்த பாபர் மசூதி முற்றிலுமாக இடித்துத் தள்ளப்பட்ட நாள். 20 ஆண்டுகள் முழுமையாக முடிந்து விட்டது. அலகாபாத் உயர்நீதிமன்றமும் தனது இறுதித்தீர்ப்பை அறிவித்து விட்டது. (அதனை இரு தரப்பினரும் ஏற்கவில்லை என்பது வேறு.) இந்நிலையில் எஸ். சொக்கனால் தொகுக்கப்பட்டு இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ள நூல் அயோத்தி. முதல் பதிப்பில் பெற்ற வரவேற்பின் காரணமாக, இறுதித் தீர்ப்பு விவரங்களோடு, மேலும் பல விவரங்களையும் இணைத்து வெளிவந்துள்ள நூல். முதன் முதலாக பாபர் ஆப்கனிலிருந்து வந்து…
எத்தனையோ குறைகளைக் கூறிக்கொண்டும், மற்றவர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்துகொண்டு வாழும் இவ்வுலகில் இத்துனை குறைகள் இருந்தாலும் மற்றவர்களுக்காக வாழும் உயர்ந்த உள்ளம் கொண்ட சகோதரிகள். மனதை நெருடும் ஒரு காணொளி.
ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு யானை தந்தத்திற்காக கொல்லப்படுவதை விவரிக்கும் இந்த ஆவணப்படம் இன்றைய நிலையில் மிக முக்கியமானது. மேலதிக தகவல்களுக்கு, http://www.lastdaysofivory.com/