மொழிபெயர்ப்பு

  • | |

    ஒரு வருட கொரோனா கற்றுத்தந்த பாடங்கள் – யுவல் நோவா ஹராரி

    FINANCIAL TIMES பத்திரிக்கையில் Yuval Noah Harari அவர்களால் எழுதப்பெற்ற கட்டுரையின் தமிழாக்கம். (https://www.ft.com/content/f1b30f2c-84aa-4595-84f2-7816796d6841) வரலாற்றின் பார்வையில் இந்த ஒரு வருட கொரோனா காலத்தை நாம் எப்படி மதிப்பிடலாம்? பெரும்பாலானவர்கள் கொரோனா இறப்புகள், இயற்கையின் முன் மனித குலத்தின் மனிதாபிமானமற்ற தன்மையையின் வெளிப்பாடு என எண்ணலாம். ஆனால் உண்மையில் மனிதகுலம் இன்னும் மனிதாபிமானத்தை முற்றிலுமாக விட்டுவிடவில்லை என்பதையே 2020 காட்டியிருக்கிறது. பெருந்தொற்றுக்கள் முந்தைய கால கட்டங்களைப் போல கட்டுப்படுத்தமுடியாதவைகளாக இப்போது இருக்கவில்லை. அறிவியல் அதனை கட்டுப்படுத்தக்கூடிய சவாலாக…

  • |

    புத்தகம் 3 : உமார் கயாம் பாடல்கள்

    பாரசீகக் கவிஞர் உமார் கய்யாமின் பாடல்களை கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் தமிழில் மொழிபெயர்த்திருந்தார். அந்தப் பாடல்களையும் அதற்கான பொருள்களையும் கமலா முருகன் என்பவர் தொகுத்திருக்கும் நூல் இது. நேரடியான மொழிபெயர்ப்பு கிடையாது. அதாவது தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் அந்தக் கருவை நம் மொழியில் வடித்துள்ளார். ஒரு கவிதையில் கம்பராமயணம் பற்றிக் கூட உண்டு. பொதுவாக இந்த நூலில் உள்ள பாடல்கள் மூன்று வகையாக இருக்கின்றன. ஒன்று வாழிவின் நிலையாமை பற்றிய பாடல்கள். உதாரணமாக, புலர்ந்து…

  • | |

    புத்தகம் 1 : சூதாடி

    ரஷ்ய மொழியில் தஸ்தோயேவ்ஸ்கியால் எழுதப்பெற்று 1867 ல் வெளிவந்த‌ The Gambler நாவலின் தமிழாக்கம். தமிழாக்கம் ரா.கிருஷ்ணையா. இந்நாவலின் மையக் கதாபாத்திரம் Alexei Ivanovich, தன்னுடைய அனுபவங்களை கூறுவது போன்ற நாவல். ரஷ்ய ஜெனரலின் குழந்தைகளுக்கு பாடம் கற்றுத் தரும் ஆசிரியராக வேலை செய்கிறான் Alexei Ivanovich. அவன் ஒருதலையாக‌ ஜெனரலின் சகோதரர் மகள் Polina மீது காதல் கொள்கிறான். அவளுக்கு அவனுடைய காதல் தெரிந்தாலும் அதனை ஏற்காமலும் மறுக்காமலும் அவனுடன் பழகி வருகிறாள். அவளுடைய சிற்றப்பாவாகிய…

  • |

    நம்பிக்கையற்ற இருண்ட உத்தரப்பிரதேசம்

    சமீபத்தில் பைனான்ஸ் டைம்ஸ் இதழில் வந்த ஓர் கட்டுரை என் கண்ணில் பட்டது. அதன் தலைப்பு இதுதான். ‘இந்தியா டீ கொடுக்கும் வேலைக்காகவும், காவலாளி வேலைக்காகவும் விளம்பரம் செய்தது. 23 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்தன’. அந்தக் கட்டுரை இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தின் நம்பிக்கையிழந்த இளைஞர்களின் அரசுப் பணி மீதான ஆர்வத்தைக் காட்டியது. இந்த வருடத்தொடக்கத்தில் உத்தரப்பிரதேச அரசு 368 நான்காம் நிலை பியூன் வேலைக்கான அறிவிப்பினை வெளியிட்டது. மலைக்க வைக்கும் அளவுக்கு 23 லட்சத்து 20…