|

புத்தகம் 3 : உமார் கயாம் பாடல்கள்

பாரசீகக் கவிஞர் உமார் கய்யாமின் பாடல்களை கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் தமிழில் மொழிபெயர்த்திருந்தார். அந்தப் பாடல்களையும் அதற்கான பொருள்களையும் கமலா முருகன் என்பவர் தொகுத்திருக்கும் நூல் இது.

நேரடியான மொழிபெயர்ப்பு கிடையாது. அதாவது தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் அந்தக் கருவை நம் மொழியில் வடித்துள்ளார். ஒரு கவிதையில் கம்பராமயணம் பற்றிக் கூட உண்டு.
பொதுவாக இந்த நூலில் உள்ள பாடல்கள் மூன்று வகையாக இருக்கின்றன. ஒன்று வாழிவின் நிலையாமை பற்றிய பாடல்கள்.

உதாரணமாக,

புலர்ந்து விடியும் பொழுதினிலே
பொய்கைக் கரையஞ் சோலையிலே
மலர்ந்து நல்ல மணம் வீசி
மகிழும் மலர்கள் ஆயிரமாம்;
உலர்ந்து வாடிச் சேற்றினிலே
உதிரு மவையும் ஆயிரமாம்;
கலந்த‌ உலக வாழ்வை இதில்
கண்ணாற் கண்டு தெளிவாயே!

மலர்ந்த மலர்களைக் காணும் நாம் உதிர்ந்து விழும் மலர்களை நோக்குவதில்லை, அது போலவே இவ்வுலக வாழ்வு என்ற பொருளில்.

இரண்டாவதாக இறைவன் என்பவன் எல்லோரிடத்திலும் ஒரே மாதிரியாக இருப்பவன். அவனிடத்தில் தன்னை வணங்குபவர், வணங்காதவர், நன்மை செய்தவர், தீமை செய்தவர் போன்ற வேறுபாடுகள் கிடையாது போன்ற பாடல்கள்.

மூன்றாவது வாழ்வினை அனுபவிப்பது. உதாரணமாக மது போன்றவை. நம்மைப் படைத்த இறைவனே அதனையும் படைத்ததனால் அவை தவறாகாது. தவறு சரியெல்லாம் நமக்கு நாமே கற்பித்துக் கொண்ட கற்பிதங்கள் போன்ற பாடலகள்.

நம்முடைய முந்தைய வாசிப்புக்கு ஏற்ப இப்பாடல்களின் பொருள்கள் நமக்கு ஆழமாகத் தோன்றும். வாசிக்க வேண்டிய நூல்.

Similar Posts

  • |

    கடல்புரத்தில் – வண்ணநிலவன்

    வண்ணநிலவன் அவர்களால் எழுதப்பெற்றது. பிலோமி என்ற ஓர் கடற்கரை கிராமத்துப் பெண் மற்றும் அவளது உறவுகள் நண்பர்கள் பற்றிய நாவல். என்னை மிகவும் கவர்ந்த ஓர் அம்சம் கதாபாத்திரங்களை லட்சியவாதிகளாக எல்லாத் தருணங்களிலும் காட்டும் பொய்மை இந்த நாவலில் இல்லை. மிக இயல்பான மனிதர்களைப் போல சில சமயம் லட்சியம் பேசும் மனிதர்கள் வேறு சில சமயங்களில் யதார்த்தம் பேசுகிறார்கள். ஒரு சமயத்தில் தன் மனைவியை பயங்கரமாகத் திட்டும் மிக்கேல், மற்றோர் சமயம் அவளை நினைத்து பெருமை…

  • |

    செங்கிஸ்கான் – முகில்

    ஆங்காங்கே சிதறிக்கிடந்த மங்கோலிய இனக்குழுக்களை ஒன்றினைத்த மாவீரன் செங்கிஸ்கான். அலெக்ஸாண்டரின் பேரரசைவிட நான்கு மடங்கு பெரிய மங்கோலியப் பேரரசை நிறுவியவர். அவரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது முகிலின் செங்கிஸ்கான். இப்புத்தகம் செங்கிஸ்கானுடைய தாயார் மற்றோர் இனக்குழுவால் கவரப்படுவதிலிருந்து துவங்கி செங்கிஸ்கானுடைய வாரிசுகளால் எவ்வாறு மங்கோலிய பேரரசு பிரிக்கப்பட்டு, வலுவிழக்கத் தொடங்கியது என்பது வரை விவரிக்கப்பட்டுள்ளது. டெஜிமுன் என்னும் இயற்பெயர் கொண்ட செங்கிஸ்கான் அனைத்து மங்கோலிய இனங்களையும் வென்று, சீனாவையும் வென்ற பின்னரே செங்கிஸ்கான் என பட்டம் ஏற்றிருக்கிறார்….

  • |

    இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு பாகம் 1

    ராமச்சந்திர குஹாவால் எழுதப்பட்டது. ஆங்கிலத்தில் எழுதப்பெற்ற நூல் ஆர்.பி.சாரதியால் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறந்த மொழியாக்கம். புத்தகம் இரு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. சரி, ஏற்கனவே இந்திய வரலாற்றினைப்பற்றி ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துள்ளனவே, அவற்றில் இல்லாத அப்படி என்ன சிறப்பு இந்தப்புத்தகத்திற்கு? இரண்டு முக்கியமான காரணங்கள். முதலாவது, இதுவரையான இந்திய வரலாற்று நூல்கள் இந்தியப் போராட்ட நிகழ்வுகளை அதிகமாக விவரித்து சுதந்திரத்தோடு நின்று விடும், அல்ல‌து இந்திய மன்னர்களது காலங்களில் அதீத கவனம் செலுத்துவதாய் இருக்கும். இந்த நூல்…

  • | |

    இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு பாகம் 2

    India After Gandhi புத்தகத்தின் தமிழ்ப்பதிப்பின் இரண்டாம் பாகம். இப்புத்தகம் 1960 களிலிருந்து தொடங்குகிறது. 1964 ல் பிரதமர் நேருவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானது, அதனைத் தொடர்ந்து இந்திரா காந்தி பிரதமரானது, நேருவுக்கும் இந்திரா காந்திக்குமான முரண்பாடுகள், அதன் விளைவாக ஏற்பட்ட அவசரநிலைப் பிரகடனம், நிலையில்லாத ஆட்சிகள், மீண்டும் இந்திரா காந்தி, அவரது இளைய மகன் சஞ்சயின் அரசியல் பிரவேசம், அவருடைய சறுக்கல்கள் மற்றும் மரணம், பின்னர் ஏற்பட்ட கலவரங்கள்,…

  • | | |

    BackStage – Montek Singh Ahluwalia

    மான்டெக் சிங் அலுவாலியா அவர்களால் எழுதப்பெற்று 1990 களில் இந்தியா மேற்கொண்ட பொருளாதாரா சீர்திருத்தங்களைப் ப‌ற்றி விரிவாக விவரிக்கும் புத்தகம். இந்திய வரலாற்றையும், பொருளாதாரத்தையும் அறிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல். பெரும்பாலும் தனி நபர் நினைவிலிருந்து எழுதக்கூடிய புத்தகங்கள் எல்லாம் அவர்களைப் பற்றிய மற்றும் அவர்களைச் சுற்றி நடைபெற்ற‌ நிகழ்வுகளின் தொகுப்பாகவே இருக்கும். அத்தகைய ஒரு புத்தகத்தினை எழுதுவதில் தனக்கு உடன்பாடு இல்லை எனக்கூறிவிட்டே புத்தகத்தினை தொடங்குகிறார் அலுவாலியா. இந்த புத்தக்கத்தினை வாசித்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.