புத்தகம் 2 : அப்புசாமியும் ஆப்ரிக்க அழகியும்

பாக்கியம் ராமசாமியால் எழுதப்பெற்று குமுதத்தில் 1963 களில் தொடர்கதையாக வெளிவந்த நகைச்சுவைத் தொடர். பின்னர் மொத்த நாவலாக வெளியிடப்பட்டது.

அப்புசாமித் தாத்தா தன்னுடைய மனைவி சீதாவுடன் நாள்தோறும் சண்டையிட்டு வருபவர். சாதாரண விளையாட்டுச் சண்டைகள். ஒருமுறை அவருடைய தாடியை அவர் மழிக்கவில்லை என்பதற்காக அவரைத் தன்னுடன் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லாமல் விடுகிறாள் சீதா. அதனால் தான் இனிமேல் தாடியை எடுக்கப்போவதில்லை என சபதம் செய்கிறார் அப்புசாமி. இந்நிலையில் இந்தியாவுக்கு வருகை தரும் ஒரு ஆப்ரிக்க இளவரசி இடீலி தனக்கான கணவன் தாடி வைத்திருப்பார் எனவும், அவர் வயதானவராய் இருப்பார் எனவும் ஒரு நாடி ஜோசியனிடம் தெரிந்து கொள்கிறாள். அப்படிப்ப‌ட்ட கணவனைத் தேடும் அவள் எதேச்சையாக அப்புசாமியை சந்திக்கிறாள். அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள். அப்புசாமியும் தன் மனைவி சீதாவினை வெறுப்பேற்ற ஆரம்ப‌த்தில் அவளுடன் சேர்ந்து சில சேஷ்டைகள் செய்கிறார். பின்னர் ஒரு கட்டத்தில் விஷயம் சீரியசாக அதிலிருந்து அப்புசாமியை சீதை எப்படி மீட்டெடுக்கிறாள் என்பதே கதை.

முற்றிலும் நகைச்சுவையை மட்டுமே மையமாக வைத்து தொடர் எழுதப்பட்டுள்ளது. அத்தோடு தொடர்கதையாக வெளிவந்ததால் ஒரு ஒட்டுமொத்த வடிவு நாவலுக்கு இல்லை. அவ்வப்போதைய‌ வாரத்தின் சுவாரஸ்யத்திற்காக ஒவ்வொரு அத்தியாயத்தில் முடிவிலும் சேர்க்கப்படும் வெற்றுத் திருப்பங்கள் ஒட்டுமொத்த‌ நாவலை முற்றிலும் சுவாரசியமற்றதாக்கிவிடுகிறது. என்னதான் நகைச்சுவை நாவலென்றாலும் குறைந்த பட்ச அளவிற்காவது லாஜிக் வேண்டாமா என்ன?

கதையின் ஆசிரியர் ஜ.ரா.சுந்தரேசன் பிராமணக் குடும்பத்தை சேர்ந்தவராகையால் கதை முழுவதுமே ஒரே பிராமணச் சாயல். பிராமணக்கதையில் பிராமணச் சாயல் வருவது ஏற்புடையதே. ஆனால் எல்லாக் கதையிலும் பிராமணச்சாயல் வருவதே இடிக்கிறது. பிராமணக்குடும்பத்தில் பிறந்து பிராமணச்சாயல் இல்லாமல் எழுத முயன்றவர்கள் குறைவு. எழுதியவர்கள் வெகு குறைவு போலும்.

2017 ல் நான் இந்நாவலைப் படிக்கிறேன். ஒட்டு மொத்த நாவலிலும் ஒரிரு இடங்களைத் தவிர்த்து நகைச்சுவை இல்லை. ஒருவேளை நகைச்சுவை என்பதற்கான வரையறை இந்த 54 ஆண்டுகளில் மாறிவிட்டதோ? இல்லை அந்தக்காலத்திலும் நகைச்சுவை இல்லாமலே நகைச்சுவைத் தொடராக‌ பிரசுரிக்கப்பட்டதோ என்னவோ?

அதீத‌ நேரமிருந்தால், படிப்பதற்கு வேறு புத்தகங்களே இல்லையென்றால் படிக்கலாம்.

Similar Posts

  • |

    ஆரோக்ய நிகேதனம் – தாராசங்கர் பந்த்யோபாத்யாய

    1951 ஆம் ஆண்டில் தாராசங்கர் பந்த்யோபாத்யாய அவர்களால் வங்க மொழியில் எழுதப்பெற்ற நாவல். பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலை தமிழில் த.நா.குமாரசாமி அவர்கள் 1972 ல் மொழிபெயர்த்துள்ளார். இந்திய அரசின் சாகித்திய அகாதெமி மற்றும் மேற்கு வங்க அரசின் ரபீந்திர புரஷ்கார் விருதுகளை வென்ற நாவல். இந்நாவல் ஜீவன் மாஷாய் என்னும் வைத்தியரின் நினைவோட்டத்தின் வாயிலாக சொல்லப்படுகிறது. மூன்று தலைமுறைகளாக ஆயுர்வேத சிகிச்சை செய்துவரும் ஜீவன் மாஷாயின் வாழ்வு மற்றும் ஆயுர்வேத மருத்துவம் ஆங்கில மருத்துவ‌த்தின் வருகையினால்…

  • |

    Work Rules!: Insights from Inside Google

    கூகுள் நிறுவனத்தின் மனித வள மேலாண்மை அதிகாரி லாஸ்லோ போக்கால் எழுதப்பட்ட ஓர் சுய முன்னேற்ற நாவல். பெரும்பாலும் இந்நாவல் மற்ற நிறுவனத்தின் மேலாண்மை அதிகாரிகளை நோக்கியே எழுதப்பட்டிருக்கிறது. ஒரு மேலாண்மை அதிகாரியின் பார்வையில் எப்படியெல்லாம் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நலனைப் பேணலாம் என விளக்குவதே இப்புத்தக்கத்தின் அடிப்படை. பணியாளர் விரும்பும் நிறுவனங்களில் முன்னணியில் இருக்க‌க்கூடிய நிறுவனங்களில் கூகுள் ஒன்று. லாஸ்லோ போக் தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக எப்படி கூகுளை அந்த நிலையை அடைய…

  • |

    அபிப்ராய சிந்தாமணி ‍- ஜெயமோகன் (புத்தகம் – 3)

    எழுத்தாளர் ஜெயமோகன் பல்வேறு காலகட்டங்களில் அவருடைய வலைத்தளத்தில் எழுதிய பகடிக்கட்டுரைகளின் தொகுப்பு. எதனையும் மிகவும் வெளிப்படையான நகைச்சுவையாக எதிர்பார்க்கும் தமிழ் வாசகனுக்கு ஒருபடி மேலான நகைச்சுவையையும், அதற்கான சாத்தியங்களை அளிக்கும் நூல். வெவ்வேறு காலகட்டத்தில் எழுதப்பெற்ற கட்டுரைகளாதலால் தொடர்ச்சி என்ற ஒன்று கிடையாது. எந்தக் கட்டுரையை வேண்டுமானாலும் படிக்கலாம். அத்தோடு பல கட்டுரைகளில் உள்ள அங்கதம் நம்மை சிந்திக்கவும் வைக்கக்கூடியவை. 767 பக்கம் கொண்ட நூலாயினும் வாசிக்கத்தொடங்கியவுடன் நம்மை உள்ளிழுத்துக் கொள்ளும் வசீகரம் உண்டு. சிற்றிதழ்கள், தத்துவ…

  • | | | | |

    புதிய தலைமுறை வார இதழில்

    நான் எழுதிய இந்திய உளவுத்துறை எவ்வாறு செயல்படுகிறது புத்தக விமர்சனம் புதிய தலைமுறை 31 டிசம்பர் தேதியிட்ட வார இதழில் வெளிவந்துள்ளது. அக்கட்டுரை. ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண் என்பது வள்ளுவர் வாக்கு. அதாவது நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்திலேயே ஓர் அரசு சிறப்பாகச் செயல்பட முடியும். ஆம் இன்றும் அதுதான் நிலை. கடந்த 50 ஆண்டுகால வரலாற்றை…

  • மூன்றாம் உலகப்போர் – வைரமுத்து

    கவிஞர் வைரமுத்துவினால் வரையப்பெற்ற நூல். எளிய கதைக்களத்தின் வழியே இன்றைய சூழ்நிலை அழிவுகளை எடுத்தியம்பும் நூல். எமிலி, சின்னப்பாண்டி எனக் கடல் கடந்த காதலும் உண்டு. கருத்தமாயி என நாம் அறிந்த நம்மோடு வாழும் ஒரு பாமர விவசாயியும் உண்டு. பாத்திரங்களின் ஊடே பாத்திரமாக வைரமுத்துவும் உண்டு. சூழ்நிலை தொடர்பான பொது அறிவுத் தகவல்களும் உண்டு. சூழல் தொடர்பான நம் மனப்பாங்கில் சம்மட்டியாய் அடிக்கும் எளிய காவியம் இந்த மூன்றாம் உலகப்போர். நன்றி.

  • |

    Home Deus – Yuval Noah Harari

    This books follows the popular book ‘The Sapiens’ from the same author Yuval Noah Harari. If you have not read the book ‘The Sapiens’ it should be read first. So that it will give better picture on understanding this book. The Sapiens talks on how the homo sapiens evolved as human being in detail. This…

One Comment

  1. it is not brahmin centric novel. It is based on brahmin characters. If you see seetha paati is wearing madisar. so it is natural. Again humour comes naturally in brahmin society. Other societies are little dry even todays standards. Needs talent to appreciate subtle comedy.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.