| |

மறைக்கப்பட்ட இந்தியா – எஸ்.ராமகிருஷ்ணன்

maraikkappatta_india

எழுத்தாளர் ராமகிருஷ்ணனால் எழுதப்பெற்றது. ஆனந்த விகடனில் தொடர்ச்சியாக‌ வெளிவந்த க‌ட்டுரைகளின் தொகுப்பு. இந்திய வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையிலான கட்டுரைகள். இதுவே சாராம்சம். தனித்தனியாக வெளிவந்ததால் ஒட்டுமொத்த புத்தகத்திற்கு என்று ஒரு கச்சித வடிவம் கிடையாது. ஓர் ஆரம்பகால அல்லது இதுவரை வாசிப்பு பழக்கம் இல்லாத ஒருவருக்கான புத்தகம். ஏனெனில் வெறுமனே தட்டையான எழுத்து நடை. ஏற்கனவே வாசிக்கும் பழக்கம் உள்ளவருக்கு சலிப்பையே தரும். அதிலுள்ள தகவல்களும் அப்படியே. எந்த தகவலும் தினசரி செய்தித்தாள்களில் வரக்கூடிய அளவிற்கானவையே. ஆழமற்ற செறிவற்ற தகவல்கள். அதனால் வரலாற்றினை விரும்பி படிக்கும் ஒருவருக்கும் சலிப்பே தோன்றுகிறது. இருப்பினும் ஒரு விதத்தில் இதன் பயன் என்னவெனில், நமக்குத் தெரியாத ஒரு தகவலினை ஏதாவது ஒரு கட்டுரையில் படிக்கும்பொழுது அவற்றை பற்றித் தெரிந்துகொள்ள முயல ஓர் வாய்ப்பு உண்டு. அதாவது அந்த தகவலினை இப்புத்தகத்தில் தேடாமல் வேறு எங்காவது படிக்கலாம். மற்றொன்று கட்டுரைகளோடு தொடர்புடைய பல்வேறு புத்தகங்களினை கட்டுரைகளின் நடு நடுவே பிரசுரித்திருப்பதனால் அப்புத்தகங்களைப் படிக்கலாம். இது மற்றோர் பயன். மற்றபடி இப்புத்தகத்தில் பிரமாண்டம் என்பது தலைப்பு மட்டுமே.

Similar Posts

  • உபபாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன்

    மகாபாரதக் கதாபாத்திரங்களை அக்காலக் கட்டத்தில் அவர்களின் ஊடே பயணிக்கும் ஒருவன் விளக்குவதைப் போல விவரிக்கும் நூல். மகாபாரதத்தின் மீதான ஆர்வம் தணியாததால் இந்த நூலை வாசித்தேன். மகாபாரதக் கதை நிகழ்ந்த இடங்களுக்கு பயணம் செய்து அதன் விளைவாக தான் உணர்ந்தவற்றை கதாபாத்திரங்களின் ஊடே பயணம் செல்வது போல் விளக்கியிருக்கின்றார் ராமகிருஷ்ணன். படித்து முடிக்கும் பொழுது மகாபாரதத்தினை நம் கண்முன்னே கண்டதுபோல, அந்தக் காலக் கட்டத்திலே வாழ்ந்தது போல ஒரு உணர்வை ஏற்படுத்துவதே இந்நூலின் வெற்றி. இப்படியெல்லாம் மகாபாரதத்தினை…

  • |

    யானை வேட்டை

    ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு யானை தந்தத்திற்காக கொல்லப்படுவதை விவரிக்கும் இந்த ஆவணப்படம் இன்றைய நிலையில் மிக முக்கியமானது. மேலதிக தகவல்களுக்கு, http://www.lastdaysofivory.com/

  • | | | |

    இந்தியாவில் முகலாயர்கள் – 2

    முகலாயர்களின் ஆட்சியில் இந்தியாவில் ஏற்பட்ட கலாச்சார பாதகங்கள், பொருளாதார பாதகங்கள் பல இருப்பினும் அவர்களால் ஏற்பட்ட சில சமூக நன்மைகளும் உண்டு. முகலாய சாம்ராஜ்யத்தின் போதே இந்தியா நிர்வாக ரீதியில் இன்றைய‌ ஒருங்கிணைந்த வடிவை அடைந்தது. அதற்கு முன்புவரை வெவ்வேறு பகுதிகளும் வெவ்வேறு நிலச்சுவான்தாரர்களாலும், குறு மன்னர்களாலும் ஆளப்பட்டு வந்தது. முகலாயர்களே அவர்களை வென்று ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர். முகலாயர்களைத் தொடர்ந்து ஆங்கிலேயர்கள் அவ்வொருங்கிணைக்கும் பணியினையே செய்தனர். அவர்கள் இவற்றையெல்லாம் இந்தியா என்னும் தேசத்தை உருவாக்க…

  • ராமரும் பாபரும்

    திசம்பர் 6, 1992. அயோத்தியிலிருந்த பாபர் மசூதி முற்றிலுமாக இடித்துத் தள்ளப்பட்ட நாள். 20 ஆண்டுகள் முழுமையாக முடிந்து விட்டது. அலகாபாத் உயர்நீதிமன்றமும் தனது இறுதித்தீர்ப்பை அறிவித்து விட்டது. (அதனை இரு தரப்பினரும் ஏற்கவில்லை என்பது வேறு.) இந்நிலையில் எஸ். சொக்கனால் தொகுக்கப்பட்டு இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ள நூல் அயோத்தி. முதல் பதிப்பில் பெற்ற வரவேற்பின் காரணமாக, இறுதித் தீர்ப்பு விவரங்களோடு, மேலும் பல விவரங்களையும் இணைத்து வெளிவந்துள்ள நூல்.  முதன் முதலாக பாபர் ஆப்கனிலிருந்து வந்து…

  • |

    நவீன இந்தியாவின் சிற்பிகள் – ராமச்சந்திர குஹா

    நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகள் இவர்கள் என பத்தொன்பது பேரைக் குறிப்பிட்டு அதற்கான காரணங்களாக அவர்களுடைய செயல்பாடுகள் மற்றும் அவர்கள் பல்வேறு சமயங்களில் ஆற்றிய உரைகள், எழுதிய கடிதங்கள் போன்றவற்றை ஆதாரங்களினோடு தொகுத்துள்ளார் ராமச்சந்திர குஹா. அதுவே இப்புத்தகம். அந்த பத்தொன்பது பேர் இவர்களே மகாத்மா காந்தி ஜவகர்லால் நேரு பி.ஆர்.அம்பேத்கர் ராம்மோகன் ராய் ரவீந்திரநாத் தாகூர் பாலகங்காதர திலகர் ஈ.வே.ராமசாமி முகம்மது அலி ஜின்னா சி.ராஜகோபாலச்சாரி ஜெயப்பிரகாஷ் நாராயணன் கோபால கிருஷ்ண கோகலே சையது அகமது கான்…

  • |

    ஆயிரம் கைகள் – ஜெயமோகன்

    ஜெயமோகன் எழுதிக்கொண்டிருக்கும் மகாபாரதமாகிய வெண்முரசுவில் வரும் பரசுராமன் தொடர்பான அத்தியாயங்களைத் திரட்டி ஒரு சிறிய நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். ஜெயமோகன் கூறியது போல இது வெண்முரசில் நுழைய ஒரு வழி. பரசுராமனி பிறப்பிற்கான காரணம் முதல் பிருகுகுல பிராமணர்களிற்கும், யாதவ குடிகளுக்கும் பல தலைமுறைகள் நடந்த போரினைப் பற்றி சுருக்கமாக விளக்கும் நாவல். வாசிக்க வேண்டிய புத்தகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.