மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

“இது எதுக்கு? சறுக்கி வெளையாடுதக்கா?”
“கெடட்டி”

இந்த வரியை நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டிருக்கிறேன் கிட்டத்தட்ட இரண்டு வாரமாக‌. நேற்று புத்தகத்தை நூலகத்தில் திருப்பி செலுத்தும்பொழுது அமர்ந்து மீண்டும் அவ்விடத்தை வாசித்தேன். வாய்விட்டு சிரித்துவிட்டேன். எல்லோரும் என்னையே பார்த்தார்கள். பார்த்து விட்டுப் போகட்டுமே! அதனால் என்ன?

Similar Posts

  • |

    மனதை நெருடும் ஒரு காணொளி

    எத்தனையோ குறைகளைக் கூறிக்கொண்டும், மற்றவர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்துகொண்டு வாழும் இவ்வுலகில் இத்துனை குறைகள் இருந்தாலும் மற்றவர்களுக்காக வாழும் உயர்ந்த உள்ளம் கொண்ட சகோதரிகள். மனதை நெருடும் ஒரு காணொளி.  

  • கேள்வியும் பதிலும்

    நம்மிடம் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் நம்மிடம் பதில் இருக்கிறது. அது சரியானதா இல்லையா என்பதை விட என்னால் பதிலளிக்க முடிகிறது என்பதனையே நம் திறமையாக எண்ணுகிறோம். நமக்குத் தெரிந்த தகவல்களின் அடிப்படையிலோ, கேள்வி ஞானத்தின் அடிப்படையிலோ இப்போதைய கேள்விக்கான பதிலை உருவாக்குகிறோம். பின்னர் அதை மெய்ப்பிப்பதற்கான ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் நம் மனம் இறங்கி விடுகிறது. கற்றலின் முதல் நிலையென்பதே நமக்குத் தெரியாத ஒன்றை தெரியாது என ஒப்புக் கொள்வதிலிருந்தே தொடங்குகிறது. நாம் ஒருவருடைய கேள்விக்கு பதிலளிக்கும்போதே…

  • உன்னதத்தின் பக்கம் ஒரு அங்குலம்

    ஒரு அரசு அதனுடைய பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமா என்று கேட்டால் அதற்கான பதிலாக நம்மில் பெரும்பாலானோர் மனதில் உதிப்பது ஆம் என்பதுதான். ஏனென்றால் இன்றைய நிலையில் பெரும்பாலான ஜனநாயக நாடுகளில் ஒரு அரசு என்பது அதன் மக்களாலேயே தேர்வு செய்யப்படுகிறது. அதனால் பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது ஒரு அரசின் கடமை என நினைக்கலாம். ஆனால்,எப்பொழுதும் பெரும்பான்மையின் விருப்பத்தினை மட்டும் நடைமுறைப்படுத்தும் ஒரு அரசு அதன் வளர்ச்சியின் சாத்தியத்தை இழக்கிறது. அச்சமூகத்திற்கு தீங்கினையே இழைக்கிறது….

  • |

    புதிய இந்தியா

    16வது மக்களவைத்தேர்தல் சிறப்பாக முடிவடைந்திருக்கிறது. இந்த தேர்தலைப் பொறுத்தமட்டில் நாம் மிகப்பெரும் பெருமை கொள்ளத்தக்க செய்தி உலகின் எந்த ஒரு தேசமும் இத்தனை பெரிய ஜனநாயக வலிமை கொண்டிருக்கவில்லை என்பதுதான். என்னதான் ஜனநாயகம் என்று வெளிக்காட்டிக்கொண்டாலும் தன்னளவில் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ சர்வாதிகாரப்போக்குடையதாகவே இருந்திருக்கிறது, இருக்கிறது. நம்மில் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவான நிலப்பரப்புள்ள தேசங்களிலும் சரி நம்மை சுற்றியுள்ள தேசங்களிலும் சரி ஜனநாயகம் சரிவர செயல்படுவதில்லை. உதாரணம் சிங்கப்பூர், உக்ரைன், பாகிஸ்தான், இலங்கை. உக்ரைனில் புதிய அரசு…

  • | |

    மறைக்கப்பட்ட இந்தியா – எஸ்.ராமகிருஷ்ணன்

    எழுத்தாளர் ராமகிருஷ்ணனால் எழுதப்பெற்றது. ஆனந்த விகடனில் தொடர்ச்சியாக‌ வெளிவந்த க‌ட்டுரைகளின் தொகுப்பு. இந்திய வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையிலான கட்டுரைகள். இதுவே சாராம்சம். தனித்தனியாக வெளிவந்ததால் ஒட்டுமொத்த புத்தகத்திற்கு என்று ஒரு கச்சித வடிவம் கிடையாது. ஓர் ஆரம்பகால அல்லது இதுவரை வாசிப்பு பழக்கம் இல்லாத ஒருவருக்கான புத்தகம். ஏனெனில் வெறுமனே தட்டையான எழுத்து நடை. ஏற்கனவே வாசிக்கும் பழக்கம் உள்ளவருக்கு சலிப்பையே தரும். அதிலுள்ள தகவல்களும் அப்படியே. எந்த தகவலும் தினசரி செய்தித்தாள்களில் வரக்கூடிய அளவிற்கானவையே….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.