நாம் நாமல்ல

நாம் நம் இடத்தை விடுத்து நீண்ட தூரம் செல்லச் செல்ல நம்முடைய செயல்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. ஏனெனில் எந்த ஒரு நிலையிலும் நம்முடைய செயல்பாடு நாம் சார்ந்திருக்கக்கூடிய சமூகத்தின் செயல்பாடாகவே பார்க்கப்படுகிறது. இங்கே குறிப்பிடப்படும் சமூகம் என்பது நம் இடத்தையும் பதவியையும் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும்.

எனது பள்ளி நாட்களில் நான் முதல் பரிசு பெற்றபொழுது எனது சுற்றுவட்ட கிராமங்களில் எனது செயல்பாடு எனது கிராமத்தின் ஒருவனது செயல்பாடாகவே பார்க்கப்பட்டது. ” School First நாட்டாம்பட்டி பையனாம்” என்றே பலர் கூறினர். ஏன் என்னிடமே பலர் அவ்வாறு கூறியதுண்டு. இது அவர்கள் மத்தியில் என் ஊரின் மீதான மதிப்பினை சற்று உயர்த்தியிருக்கும். என்னை மறந்து அந்த நிகழ்வையும் என் ஊரையுமே மக்கள் நீண்ட நாள் நினைவில் வைத்திருந்தனர்.

அதேபோல் நான் சென்னை வந்த பொழுது என்னை, என் மாவட்டத்தை சேர்ந்த ஒருவனாகவே பார்த்தனர். அதேபோல் வேறு மாநிலத்திலிருந்து வந்து என்னுடன் பணியாற்றியவர்கள் செயல்பாடெல்லாம் அவரவர் சார்ந்திருந்த் மாநிலத்தின் பொதுவான செயல்பாடகவே பார்ககப்பட்டது. உண்மை.

நாம் ஒரு சில மாநிலத்தினர் மீது மரியாதை கொள்வதற்கும், சில மாநிலத்தாரின் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பதற்கும் காரணம் நமக்குத் தெரிந்த அந்த மாநிலத்தினைச் சேர்ந்த ஒரு சிலரது செயல்பாடுகளே. நாம் ஒன்றும் அந்த மாநிலத்தைச் சேர்ந்த அனைவருடனும் பழகி அந்த முடிவுக்கு வருவதில்லை. 

இது இங்கல்ல. உலகம் முழுவதும் அப்படியே.

அத‌னால் நாம் தூரம் செல்லச் செல்ல நம்முடைய பொறுப்பு அதிகமாகிறது. உதாரணமாக சென்னையில் உள்ள ஒரு கேரளத்து நபரின் செயல்பாடினைக் கொண்டு நாம் கேரளத்தவ‌ரை மதிப்பிடுகிறோம். ஆனால் சென்னையில் நாம் ஒரு கேரளத்தவரை மட்டுமல்ல, பலரை சந்திப்போம். அவர்கள் அனைவரது செயல்பாடுகளில் இருந்தே கேரளத்தை மதிப்பிடுவோம். 

ஆனால் இதுவே நாம் வேறொரு நாட்டிற்குச் செல்லும்பொழுது அங்கு நாம் இந்தியாவைப் பிரதிபலிப்போம். அங்குள்ள‌ பல வெளிநாட்டவருக்கு மிகச் சில இந்தியர்களே பழக்கமாய் இருப்பர். அவர்கள்தான் மற்ற நாட்டினரிடத்து இந்தியர்கள் குறித்த மதிப்பீடுகளை நிர்ணயம் செய்பவர்கள்.

உதாரணமாக சிங்கப்பூரில் என்னுடைய செயல்பாடுகள், பழக்க வழக்கங்கள், திறமை, அறிவு, மடத்தனம் எல்லாமே இந்தியர்களின் செயல்பாடாகவே பார்ககப்படுகிறது. அதனாலே மிகவும் கவனமுடன் என்னுடைய செயல்பாடுகளையும், சொற்களையும் நிர்வகிக்க விரும்புகிறேன். 

குறைந்தது நாம் சந்திக்கும், நம்மை சந்திக்கும் நபர்களிடமாவது  இந்தியர்களைப் பற்றி உயர்வாய் நினைக்கச் செய்வோமே!

Similar Posts

  • | |

    The Boss Baby – குழந்தை முதலாளி

    2017 ஆம் ஆண்டு வெளிவந்த அனிமேஷன் திரைப்படம். 2010 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த The Boss Baby என்ற புத்தகத்தினை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. கதைச்சுருக்கம் இதுதான். கதை எதிர்காலத்தில் நடைபெறுகிறது. டிம் தன்னுடைய குழந்தைக்கு தன்னுடைய சிறு வயதுக்கதையைக் கூறுவதாகப் படம் தொடங்குகிறது. டிம் தன்னுடைய பெற்றோருக்கு ஒரே பையன். செல்லமாகவும் புத்திசாலித்தனமாகவும் வளர்ந்து வருகிறான். டிம்மின் பெற்றோர் பப்பிஸ் கார்ப் என்ற‌ நாய்க்குட்டிகளை விற்பனை செய்யும் கம்பெனியில் பணியாற்றுகின்றனர். பரபரப்பான வேலைக்கு மத்தியிலும்…

  • Ayurvedic Home Remedies: Medicinal Uses of ‘Touch Me Not’ Plant – Part 1

    The ‘Sensitive Plant’ (Touch-me-not) ‘thotta chinungi’ in Tamil and ‘thotta vaadi’ in Malayalam has been the subject of extensive studies over the recent years for its medicinal properties. This plant is effective in treating a wide range of disease conditions ranging from allergy, asthma, menstrual problems, hemorrhoids, premature ejaculation, to hypertension, cholesterol, snake bite and…

  • அதிகார மனப்பான்மையும் இட ஒதுக்கீடும்

    முன்பொருமுறை இந்தியாவின் முன்னாள் திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா அவர்களிடம் ஒரு பேட்டியின் போது ஒரு கேள்வி கேட்கப்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளால் உலகின் ஆதிக்கசக்தியாக மாற இயலுமா? அதற்கு அவர் அளித்த பதில் இப்போதைய‌ காலகட்டத்தில் தன் மக்கள் தொகையில் பாதி மக்களின் உழைப்பை உபயோகப்படுத்தாத ஒரு நாட்டிற்கு அது சாத்தியமில்லை என்பது. சாத்தியமுள்ள மக்களின் உழைப்பாற்றலை உபயோகிக்காமல் இருப்பது ஒரு தேசத்திற்கு இழப்பு என்பது அவரது கருத்து. அக்கண்ணோட்டத்தில் பார்க்கும்பொழுது இந்தியாவில் பெண்களின்…

  • அதிக பணம் அச்சடித்தால் என்ன?

    பொருளாதாரம் பற்றி அறியத்துவங்கிய காலத்தின் ஆரம்பகாலக் கேள்விகளுள் ஒன்று. இந்தக் கேள்வியோடிருப்பவர் நீங்களென்றால் உங்களுக்கே இந்தப் பதிவு. இந்தியாவின் கடன் தொகை பல லட்சம் கோடிகளில். ரூபாய் மதிப்பு சரிவு. இதைச் சரிசெய்ய அதிக பணம் அச்சடித்தால் என்ன? அடிப்படைக்கேள்வி. அடிக்கலாம். என்ன நடக்கும்? அரசாங்கம் அதிக பணம் அச்சடிக்கும். அதை புழக்கத்தில் விடும். புழக்கத்தில் விட வேண்டுமென்றால் அரசு திட்டங்களுக்காக செலவிடலாம், அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக தரலாம் அல்லது மக்களுக்கு  மணியார்டர் செய்யலாம். எப்படியோ மக்களிடம்…

  • |

    டிசிஎஸ் ‍- ஊழியர் வெளியேற்றம்

    எங்கு பார்த்தாலும் டிசிஎஸ் நிறுவனத்தின் வேலை நிறுத்தத்தினைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்னதான் அங்கே நடக்கிறது என்ற உண்மை நிலை தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். போதாதற்கு சமூக வலைத்தளம், வாட்ஸ் அப் போன்றவற்றில் அதனைப் பகிர்ந்து கொள்ளவும் செய்கின்றனர். இதனால் சமீபத்திய நாட்களில் தேசத்தில் பெரும்பாலானவர்களால் விவாதிக்கப்படும் செய்தியாயிருக்கிறது. இச்சூழ்நிலையில் மென்பொருள் துறை மீது எப்பொழுதுமே வெறுப்போடு இருக்கும் ஒரு சாரர், இதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு தங்களின் ஆதங்கத்தையெல்லாம் கொட்டித் தீர்க்கின்றனர்….

  • அதென்ன நடப்பு கணக்கு பற்றாக்குறை?

    சமீபத்திய நாட்களில் ஊடகத்தின் உச்சத்தை தொட்ட செய்தி இதுதான். “அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி” இதற்கு நமது அரசு கூறும் காரணம்,நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும், அளவுக்கதிகமான தங்க இறக்குமதியும் என்று.அதென்ன நடப்பு கணக்கு பற்றாக்குறை(Current Account Deficit)? அது எப்படி இந்திய ரூபாயின் மதிப்பை நிர்ணயம் செய்கிறது? கீழே படியுங்கள், விளங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.