சிறிது வெளிச்சம் – என் பார்வையில்

சமீபத்தில் ராமகிருஷ்ணன் எழுதிய “சிறிது வெளிச்சம்” நூலைப் படித்தேன். ஆனந்த விகடனில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. நல்ல புத்தகம். நாம் அன்றாடம் சந்திக்கும் கவனிக்காது விட்ட பல்வேறு அவலங்களையும், மகிழ்வுகளையும் விவரித்திருக்கிறார்.

வாரம் தோறும் வெளியானதாலோ என்னவோ ஒவ்வொரு அத்தியாயமும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவையாகவே இருக்கின்றன. ஆனாலும் தனித்தனியே ஒவ்வொரு கட்டுரையும் ஒரு சமூகக் கருத்தை முன்வைக்கிறது. அனைத்து கட்டுரைகளும் ஏதாவது ஒரு வடிவில் நம் அறிவைத் தொடுகிறது.  அதில் முத்தாய்ப்பாய் “கைகள் இரண்டால்” கட்டுரை. ஆனால் இது அறிவிற்கு பதில் மனதினைத் தொடுகிறது.

எல்லா கட்டுரைகளிலும் ராமகிருஷ்ணன் ஏதாவது ஒரு வேற்று மொழி படத்தினையோ, நூலையோ மேற்கோள் காட்டி தன் கருத்தை விளக்குகிறார். அதனால் சிறந்த பிற மொழிப் படங்களையும், புத்தகங்களையும் தேர்வு செய்ய இந்த புத்தகத்தை ஒரு கருவியாகக் கொள்ளலாம்.

Similar Posts

  • |

    இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு பாகம் 1

    ராமச்சந்திர குஹாவால் எழுதப்பட்டது. ஆங்கிலத்தில் எழுதப்பெற்ற நூல் ஆர்.பி.சாரதியால் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறந்த மொழியாக்கம். புத்தகம் இரு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. சரி, ஏற்கனவே இந்திய வரலாற்றினைப்பற்றி ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துள்ளனவே, அவற்றில் இல்லாத அப்படி என்ன சிறப்பு இந்தப்புத்தகத்திற்கு? இரண்டு முக்கியமான காரணங்கள். முதலாவது, இதுவரையான இந்திய வரலாற்று நூல்கள் இந்தியப் போராட்ட நிகழ்வுகளை அதிகமாக விவரித்து சுதந்திரத்தோடு நின்று விடும், அல்ல‌து இந்திய மன்னர்களது காலங்களில் அதீத கவனம் செலுத்துவதாய் இருக்கும். இந்த நூல்…

  • |

    அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்

    தி ஜானகிராமன் அவர்களால் எழுதப்பெற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் 1966ல் வெளிவந்த ஒர் நாவல். அப்பு வேதம் படிப்பதற்காக திருச்சிக்கு அனுப்பபடுகிறான். அங்கே பதினாறு வருடங்கள் வேதம் படித்தபின்னர் தன்னுடைய சொந்த ஊருக்குப் புறப்படத்தயாராகிறான். இன்னும் சில நாட்களில் கிளம்ப வேண்டும் என்ற நிலையில், அம்மடத்தினை நிர்வகிக்கும் பவானியம்மாளின் தம்பி மகள் இந்து தான் அப்புவை விரும்புவதாகக் கூறுகிறாள். இந்து ஏற்கனவே திருமணமாகி கணவனை இழந்தவள். தன் அத்தை பவானியம்மாளோடு வசிக்கிறாள். அவள் சிறுவயதிலிருந்தே அப்புவுடன் வளர்ந்தவள்….

  • |

    ரஷ்யப் புரட்சி – மருதன்

    1917 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் ஜார் மன்னரின் ஆட்சி போராட்டத்தின் மூலம் கவிழ்க்கப்பட்டு, லெனின் தலைமையில் கம்யூனிச அரசு அமைந்ததை விவரிக்கும் சிறு புத்தகம். மருதன் அவர்களால் எழுதப்பெற்றது. ஜார் மன்னராட்சியில் தொழிலாளர்களின் வாழ்வு பேணப்படாமால் கீழ் நிலைக்கு சென்று கொண்டிருந்ததே போராட்டத்தின் ஆரம்பகாலக் காரணம். சரியான ஊதியமின்மை, முறைப்படுத்தப்படாத வேலை நேரங்கள் எனப் பல துன்புறல்களுக்கு ஆளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட அதன் ஒருபகுதியாக லெனினின் சகோதரனும் அரசாங்கத்தால் கொல்லப்படுகிறார். அதன் பின்னர் போராட்டத்தில் தன்னை…

  • | |

    புத்தகம் 1 : சூதாடி

    ரஷ்ய மொழியில் தஸ்தோயேவ்ஸ்கியால் எழுதப்பெற்று 1867 ல் வெளிவந்த‌ The Gambler நாவலின் தமிழாக்கம். தமிழாக்கம் ரா.கிருஷ்ணையா. இந்நாவலின் மையக் கதாபாத்திரம் Alexei Ivanovich, தன்னுடைய அனுபவங்களை கூறுவது போன்ற நாவல். ரஷ்ய ஜெனரலின் குழந்தைகளுக்கு பாடம் கற்றுத் தரும் ஆசிரியராக வேலை செய்கிறான் Alexei Ivanovich. அவன் ஒருதலையாக‌ ஜெனரலின் சகோதரர் மகள் Polina மீது காதல் கொள்கிறான். அவளுக்கு அவனுடைய காதல் தெரிந்தாலும் அதனை ஏற்காமலும் மறுக்காமலும் அவனுடன் பழகி வருகிறாள். அவளுடைய சிற்றப்பாவாகிய…

  • |

    பாவம் இவள் ஒரு பாப்பாத்தி – ஜெயகாந்தன்

    ஜெயகாந்தன் அவர்களால் 1979 ஆம் ஆண்டில் எழுதப்பெற்ற குறு நாவல். ஊருக்கு வெளியேயுள்ள கரும்பு ஆலைக்கு அருகில் பல‌காரக்கடை நடத்தி வரும் பாப்பாத்தியம்மாளின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. அவள் ஓர் அனாதை. அவளுக்கென்ற இப்போது யாரும் இல்லை. அங்கு வரும் அனாதை எவரையும் தன்னோடு வைத்துக்கொள்கிறாள். அவர்கள் சில நாட்கள் இருந்த பின்னர் ஏதேதோ காரணங்களுக்காக சென்று விடுகின்றர். அவர்கள் சென்ற பின்னர் வெறோர் அனாதை வந்து சேர்கிறார்கள். பிராமணக்குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருப்பதாலும், ஆச்சாரங்களை தவறாது கடைபிடிப்பதாலும்…

  • |

    தவிப்பு – ஞானி

    ஞானி அவர்களால் எழுதப்பெற்று விகடனில் தொடராக வெளிவந்த தொடரின் நாவல் வடிவம். வெளியீடு விகடன் பிரசுரம். வெளியிட்ட ஆண்டு ஆகஸ்ட் 2007. டில்லியில் அரசு தொலைக்காட்சியில் பணிபுரியும் விஜயனுக்கு ஒரு தமிழ்த் தீவிரவாதக் கும்பலுடன் சமரசம் பேசுவதற்கான அழைப்பு அரசால் விடுக்கப்படுகிறது. அத்தீவிரவாதிகள் ஒருவரை பணயக்கைதியாக வைத்திருக்கின்றனர். அத்தோடு அத்தீவிரவாதிகளுள் ஒருத்தியான ஆனந்தி விஜயனின் கல்லூரிக் கால நெருங்கிய தோழி. விஜயன் அவர்களுடன் பேரம் பேசுவது, அவனுக்கும் ஆனந்திக்குமான முந்தைய நட்பின் நினைவுகள், விஜயன் தற்போதைய அலுவலகத்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.