|

மணலின் கதை – மனுஷ்யபுத்திரன்

மனுஷ்ய புத்திரன் அவர்களால் 2002, 2003 ஆம் ஆண்டுகளின் வெவ்வேறு நாட்களில் எழுதப்பெற்ற 37 கவிதைகளின் தொகுப்பு. 2004 ல் வெளிவந்த நூல். உயிர்மை பதிப்பகம் வெளியீடு. அவற்றுள் என்னைக் கவர்ந்த ஒரு கவிதை ‘இந்தக் காயங்கள்’.

இந்தக் காயங்கள்
இன்று வெய்யில் நோக்கி திறந்திருக்கின்றன‌
நாளை மழை நோக்கி திறந்து கிடக்கும்

வெட்ட வெளியில் கிடத்தப்பட்ட‌
ஒரு காயம்
மருந்திட இயலாததல்ல‌
மருந்திடப்படாமல் புறக்கணிக்கப்பட்டதுமல்ல‌

இந்தக் காயங்கள்
காயங்களாக இருப்பதற்காகவே
கசிந்துகொண்டிருக்கின்றன‌

பிடிவாதமாய் தன்னை மூடிக்கொண்டிருக்கும்
ஒரு கருணையின் ஊற்றுக்கண் திறக்க

வாசிக்கலாம்.

Similar Posts

  • |

    ஆரோக்ய நிகேதனம் – தாராசங்கர் பந்த்யோபாத்யாய

    1951 ஆம் ஆண்டில் தாராசங்கர் பந்த்யோபாத்யாய அவர்களால் வங்க மொழியில் எழுதப்பெற்ற நாவல். பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலை தமிழில் த.நா.குமாரசாமி அவர்கள் 1972 ல் மொழிபெயர்த்துள்ளார். இந்திய அரசின் சாகித்திய அகாதெமி மற்றும் மேற்கு வங்க அரசின் ரபீந்திர புரஷ்கார் விருதுகளை வென்ற நாவல். இந்நாவல் ஜீவன் மாஷாய் என்னும் வைத்தியரின் நினைவோட்டத்தின் வாயிலாக சொல்லப்படுகிறது. மூன்று தலைமுறைகளாக ஆயுர்வேத சிகிச்சை செய்துவரும் ஜீவன் மாஷாயின் வாழ்வு மற்றும் ஆயுர்வேத மருத்துவம் ஆங்கில மருத்துவ‌த்தின் வருகையினால்…

  • உபபாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன்

    மகாபாரதக் கதாபாத்திரங்களை அக்காலக் கட்டத்தில் அவர்களின் ஊடே பயணிக்கும் ஒருவன் விளக்குவதைப் போல விவரிக்கும் நூல். மகாபாரதத்தின் மீதான ஆர்வம் தணியாததால் இந்த நூலை வாசித்தேன். மகாபாரதக் கதை நிகழ்ந்த இடங்களுக்கு பயணம் செய்து அதன் விளைவாக தான் உணர்ந்தவற்றை கதாபாத்திரங்களின் ஊடே பயணம் செல்வது போல் விளக்கியிருக்கின்றார் ராமகிருஷ்ணன். படித்து முடிக்கும் பொழுது மகாபாரதத்தினை நம் கண்முன்னே கண்டதுபோல, அந்தக் காலக் கட்டத்திலே வாழ்ந்தது போல ஒரு உணர்வை ஏற்படுத்துவதே இந்நூலின் வெற்றி. இப்படியெல்லாம் மகாபாரதத்தினை…

  • ஞானகுரு – எஸ்.கே.முருகன்

    தனியனாய், பரதேசியாய் சுற்றித்திரியும் ஞானகுரு எனக்கூறப்படுபவரின் பதில்களின் தொகுப்பு. பெயரை வைத்து அவரை ஏதோ புனிதர், மானுட அவதாரம் தரித்த மகான் என்றெல்லாம் எண்ண வேண்டியதில்லை. நம் ஊரிலே தெருவிலே இதைவிட அருமையாகத் தத்துவங்கள் கூறும் பல சாமியார்கள் உண்டு. குடித்துவிட்டு, கஞ்சா அடித்துவிட்டு உளரும் ஒருவருடைய சொற்கள் புத்தகமாயிருக்கின்றன. வேறு ஒன்றும் இல்லை. தன்னுடைய செயல்பாடுகளை யே(கஞ்சா, குடி, மாமிசம், சுருட்டு) அறமாய்க் கொண்டு அதையே நியாயப்படுத்தும் தகவல்களை அறிவுரைகளாக ஒட்டுமொத்த நூலும் விளம்புகிறது. இந்த…

  • | |

    தூய்மை இந்தியா

    சமீபத்தில் நமது பிரதமர் அவர்களால் தூய்மை இந்தியா துவங்கப்பட்டதை விமர்சனம் செய்து பல்வேறு விதமான கட்டுரைகளும் பேச்சுக்களும் இணையத்தில் உலாவுகின்றன. ஒரு எளிய இணைய வாசகன் வாசிக்கும்பொழுது அவன் நம்பக்கூடிய வண்ணமே அப்பதிவுகள் இடப்படுகின்றன. எதற்காக அவர்கள் அதனை செய்கிறார்கள்? ஒன்று அவர்கள் மோடியை வெறுப்பவராகவோ, அல்லது எதிர்க் கட்சியை சேர்ந்தவராகவோ இருப்பார். ஆனால் அவர்களின் எண்ணங்களை இணையத்தில் முடிந்த அளவிற்கு பரப்பி அதனைப் பெருக்குகிறார்கள். உதாரணமாக ஒரு அமைச்சர் குப்பையை ஓரிடத்தில் பரப்பி வைத்துவிட்டு பின்னர்…

  • |

    The Core

    2003 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இயக்கம் Jon Amiel. நடிப்பு Aaron Eckhart, Hilary Swank மற்றும் பலர். சில நகரங்களில் நடைபெறும் சில‌ விசித்திர நிகழ்வுகளால் ஆச்சரியமடையும் Dr.Josh Keyes மற்றும் Dr.Serge Leveque இருவரும் பூமியின் காந்தப்புலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றமே இதற்கான காரணம் என அறிகிறார்கள். காந்தப்புல மாற்றத்திற்கான‌ காரணம் பூமியின் ஆழ் மையத்தில் உள்ள உலோக குழம்பு சுழல்வதை நிறுத்தியதே எனவும், அது பூமியின் நிலைத்தன்மையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும்,…

  • |

    வைகறை மேகங்கள் ‍- வைரமுத்து

    வைரமுத்து அவர்களால் எழுதப்பெற்று, அவருடைய 17 ஆம் வயதில் வெளிவந்த கவிதைத் தொகுப்பு. வெளிவந்த ஆண்டு 1972. பல்வேறு பதிப்புகள் கண்டு தற்போது முப்பதாம் பதிப்பாக வெளிவந்துள்ளது 2011 ஆம் ஆண்டில். அதற்குப் பின்னர் எத்தனை பதிப்புகள் வந்துள்ளன எனத் தெரியவில்லை. வைரமுத்துவை சிறந்த பாடலாசிரியர் எனவும் அவர் கவிஞர் அல்ல எனவும் ஒரு பார்வை நீண்டகாலமாக முன்வைக்கப்படுகிறது. கவிதையை வாசிப்பவன் என்ற அளவில் எனக்கும் அப்படித்தான் தோன்றியிருக்கிறது. நமக்குத் தெரிந்த ஏதோ ஒன்றின், தெரியாத அல்லது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.