|

கயம் – குமார செல்வா

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த குமாரசெல்வாவினால் எழுதப்பெற்ற ஆறு சிறுகதைகளின் தொகுப்பு. காலச்சுவடு பதிப்பகம். 2009 ஆம் ஆண்டு வெளிவந்தது.

நாகமலை
குறுவெட்டி
உயிர்மரணம்
கயம்
கிணறு
விடாலு

இவையே அந்த ஆறு சிறுகதைகள். இவற்றுள் என்னை மிகவும் கவர்ந்த கதை உயிர்மரணம். கடாட்சம் தன் தந்தை சொன்ன சொல்லுக்காக தன் இரண்டு வயது மகன் றாபியைத் தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு மனைவி அஞ்சம்மாளோடு வெளியேறுகிறார். ஒன்றுக்கும் உதவாது என ஊர் நினைக்கும் ஓர் நிலத்தில் உழைத்து முன்னேறுகிறார். அவர் அடையும் உச்சம் அவர் மகன் காலத்திலேயே அழிகிறது. அதனை நினைக்கும் அவரின் எண்ண‌ ஓட்டங்கள், அவருக்கும் அவரது மனைவிக்குமான உறவின் ஆழம் என கதை விரிகிறது. கண்ணீர் வரவழைக்கும் கதை.

மற்றொரு கதை குறுவெட்டி. பாலியல் நோய் வந்ததாக எண்ணும் ஒருவனின் மன அலைச்சல்கள் தான் கதை. அரசாங்க மருத்துவமனையில் அவன் எவ்வாறு நடத்தப்படுகிறான், அங்கிருக்கும் டாக்டர், நர்ஸ்கள் அவனை எவ்வாறு ஏளனம் செய்கிறார்கள், அலட்சியமாகப் பார்க்கிறார்கள் என்பதையெல்லாம் ஆழ விவரிக்கும் சிறுகதை.

மற்றபடி கிணறு,விடாலு இரண்டும் குறிப்பிடத்தகுந்த கதைகள். இதன் ஆசிரியரின் உண்மையான பெயர் தெரியவில்லை. குமார செல்வா என்பது புனைப்பெயர் போலும். இணையத்தில் தேடினேன், காணவில்லை.

வாசிக்க வேண்டிய சிறுகதைகள்.

Similar Posts

  • |

    THE ANTHROPOCENE REVIEWED – JOHN GREEN (புத்தகம் – 2)

    John Green என்பவரால் எழுதப்பெற்ற புத்தகம். வலையொளியில் podcast ஆக வெளிவந்த ஒலித் தொகுப்புகள் புத்தமாக வெளிவந்துள்ளது. இப்புத்தகத்தின் தலைப்பு THE ANTHROPOCENE REVIEWED. அது நிகழ் யுகத்தினைக் குறிக்கக்கூடிய ஒரு சொல். ஏறத்தாழ மனிதனின் செயல்பாடுகள் பூமியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தத்தொடங்கிய காலத்திலிருந்து தொடங்கும் காலம் அது. இக்காலக்கட்டத்தில் இப்பூமியில் உள்ள, மனிதனால் உருவாக்கப்பட்ட பலதரப்பட்டவற்றைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சினிமா,உணவகம்,இடம் என‌ எல்லாவற்றையும் நட்சத்திர குறியீட்டு அளவினால் அளவிடும் காலகட்டதிற்கு நாம் வந்துவிட்டதால்,…

  • மகாபாரதம்:அறத்தின் குரல் – நா.பார்த்தசாரதி

    நா.பார்த்தசாரதி அவர்களால் 1964 ஆம் ஆண்டு தமிழில் எழுதப்பெற்ற காவியம். அரைகுறையாகத் தெரிந்த மகாபாரதத்தினை முழுமையாகத் தெரிந்து கொள்ள விரும்பி வாசித்த நூல். வாசிப்பின் முடிவில் புலப்படுவதென்னவோ முழு மகாபாரதத்தையும் புரிந்து கொள்வதென்பது இயலாத ஒன்று என்பதையே.  எந்த ஒரு மகாபாரதப் பதிப்பினையும் எழுதப்பெற்ற ஆசிரியரின் பார்வையில் மகாபாரதம் எனப் பொருள் கொள்வதே சரி எனலாம். அத்துணை பெரிய காவியம். எண்ணிலடங்கா கதாபாத்திரங்கள். படிக்க படிக்க திகட்டாத, தீராத காவியம். இந்து மரபின் உயரிய கருத்தான அறத்தை…

  • |

    The Core

    2003 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இயக்கம் Jon Amiel. நடிப்பு Aaron Eckhart, Hilary Swank மற்றும் பலர். சில நகரங்களில் நடைபெறும் சில‌ விசித்திர நிகழ்வுகளால் ஆச்சரியமடையும் Dr.Josh Keyes மற்றும் Dr.Serge Leveque இருவரும் பூமியின் காந்தப்புலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றமே இதற்கான காரணம் என அறிகிறார்கள். காந்தப்புல மாற்றத்திற்கான‌ காரணம் பூமியின் ஆழ் மையத்தில் உள்ள உலோக குழம்பு சுழல்வதை நிறுத்தியதே எனவும், அது பூமியின் நிலைத்தன்மையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும்,…

  • | |

    The Boss Baby – குழந்தை முதலாளி

    2017 ஆம் ஆண்டு வெளிவந்த அனிமேஷன் திரைப்படம். 2010 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த The Boss Baby என்ற புத்தகத்தினை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. கதைச்சுருக்கம் இதுதான். கதை எதிர்காலத்தில் நடைபெறுகிறது. டிம் தன்னுடைய குழந்தைக்கு தன்னுடைய சிறு வயதுக்கதையைக் கூறுவதாகப் படம் தொடங்குகிறது. டிம் தன்னுடைய பெற்றோருக்கு ஒரே பையன். செல்லமாகவும் புத்திசாலித்தனமாகவும் வளர்ந்து வருகிறான். டிம்மின் பெற்றோர் பப்பிஸ் கார்ப் என்ற‌ நாய்க்குட்டிகளை விற்பனை செய்யும் கம்பெனியில் பணியாற்றுகின்றனர். பரபரப்பான வேலைக்கு மத்தியிலும்…

  • ஜே ஜே சில குறிப்புகள்

    சுந்தர ராமசாமியால் எழுதப்பட்டது. 1981 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அக்காலகட்டத்தில் மிகப்பெரிய விவாதங்களை ஏற்படுத்திய நாவல். ஓர் இளம் எழுத்தாளன் தன்னுடைய ஆளுமையாக எண்ணும் ஓர் எழுத்தாளனைப் பற்றி எழுதும் குறிப்புகள், அதுவே நாவல்.மிகச்சிறந்த அங்கதம். சுந்தர ராமசாமி தன் வாழ்நாளில் சந்தித்த, பழகிய‌ உண்மை நபர்களை வைத்தே நாவலை வடிவமைத்ததாக ஓர் விமர்சனம் உண்டு. உதாரணமாக மையக்கதாபாத்திரமான ஜேம்ஸ் ஜோசப். வழக்கமான நாவல்களின் கட்டமைப்பை உடைத்து புதியதோர் நாவல் வடிவத்தை தமிழில் உருவாக்கிய‌ நாவல். ஆரம்பகால…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.