மான்களுக்கும் கோபம் வரும் – மரபின் மைந்தன் முத்தையா

மரபின் மைந்தன் முத்தையா அவர்களால் எழுதப்பெற்ற மற்றும் கவிதையரங்குகளில் வாசிக்கப்பெற்ற கவிதைகளின் தொகுப்பு. 2005 ஆம் ஆண்டு வெளிவந்தது. கற்பகம் புத்தகாலயம் வெளியீடு.

இத்தொகுப்பில் என்னை ஈர்த்த கவிதை ‘புகார்கள் மற்றும் ஆலோசனைகள்’.

எந்தப்புகாரும் இல்லையென்றில்லை
எழுதும் தரமாய் இல்லையெம் புகார்கள்

ஏதேனும் நடைபெறுமிடத்திலேயே புகார் அளிக்க இயலும். ஆனால் இங்கே புகாரளிக்கும் அளவிற்கூ கூட செயல்கள் நடைபெறவில்லை என்பதன் அங்கதம் வெளிப்படும் தொணி என்னைக்கவர்ந்தது.

அதே கவிதையில்

ஆனால் நண்பரே உம்மிடம் சொல்ல‌
ஆலோசனைகள் உள்ளன எம்மிடம்
கண்துடைப்புக்காக இங்கே இருக்கும்
இந்தப் பெட்டியை அகற்றலாமென்று…

என்றும்

‘இந்தக் கவிதை படித்ததும் வருகிற‌
வேகத்தை வேலையில் காட்டலாமென்று…’

என்றும் வரும் வரிகளும் என்னைக் கவர்ந்தவை.

இந்நூலின் இறுதியில் சில ஆங்கில கவிதைகள் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் முத்தையா. அதில்

The Child’s first grief என்னும் கவிதையின் மொழிபெயர்ப்பில்

Oh! while my brother played with me
Would I have loved him more?

என்பதனை

ஆடி மகிழ என் தம்பி இல்லையே,
யாரிடம் அன்பைச் செலுத்தட்டும்

என்று மொழிபெயர்த்திருக்கிறார். ‘என் தம்பியோடு விளையாடிய காலங்களில் நான் இன்னும் அவனை நேசித்திருக்கலாமோ?‘ என்று தானே வரவேண்டும். வரிக்கு வரி மொழி பெயர்க்க வேண்டியதில்லை என்றாலும் மொழி பெயர்ப்பிற்கும் உண்மையான அர்த்தத்திற்கும் பெரிய வேறுபாடாக இருக்கிறது அந்த மொழிபெயர்ப்பு.

வாசிக்கலாம்.

Similar Posts

  • ஆசானிடமிருந்து

    அன்புள்ள ராஜேஷ் இப்போது உணர்ச்சிவசப்பட்டு நீதி எங்கே என்பவர்கள் தினகரன் வழக்கோ, தா கிருஷ்ணன் கொலை வழக்கோ என்னாயிற்று என்று கேட்கமாட்டார்கள். சன் டிவி மீது வழக்குப்பதியவே ஏன் இத்தனை நாட்களாயிற்று என்று கேட்கமாட்டார்கள். இப்போது நீதி வென்றது என்பவர்கள் நாளை திமுக காரர்கள் விடுதலைசெய்யப்படும்போது நீதி தேவதை அருள்புரிந்தாள் என்பார்கள். கட்சிசார்பான உணர்ச்சிக்கொந்தளிப்புகளுக்கு உண்மையில் ஒரு பொருளும் இல்லை. அதற்கு அப்பால் சென்று யோசிப்பதே ஒரு சமநிலையை அளிக்கும் .ஆகவேதான் நான் குன்ஹா தீர்ப்பிலும் ஒன்றும்…

  • |

    காரல் மார்க்ஸ் – பட்டத்தி மைந்தன்

    2008 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம். கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக விவரித்துள்ளார்கள். ராமையா பதிப்பகம் வெளியீடு. 1818 ஆம் ஆண்டில் ஜெர்மனியிலுள்ள ட்ரியர் என்னுமிடத்தில் பிறந்தார் மார்க்ஸ். யூத இனத்தைச் சேர்ந்தவர். மார்க்ஸின் தந்தை ஒரு வக்கீல். யூதர்கள் ஜெர்மனியில் அடக்குமுறைகளுக்கு ஆளாகி வந்ததால் யூத மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறிக்கொண்டார். அவர் மார்க்ஸ் படிக்கும் காலத்தில் தொடர்ச்சியாக கடிதம் எழுதும் வழக்கம் வைத்திருந்தார். மார்க்ஸ் தன் குடும்ப நண்பரின் மகளாக ஜென்னியைக் காதலித்து…

  • |

    Work Rules!: Insights from Inside Google

    கூகுள் நிறுவனத்தின் மனித வள மேலாண்மை அதிகாரி லாஸ்லோ போக்கால் எழுதப்பட்ட ஓர் சுய முன்னேற்ற நாவல். பெரும்பாலும் இந்நாவல் மற்ற நிறுவனத்தின் மேலாண்மை அதிகாரிகளை நோக்கியே எழுதப்பட்டிருக்கிறது. ஒரு மேலாண்மை அதிகாரியின் பார்வையில் எப்படியெல்லாம் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நலனைப் பேணலாம் என விளக்குவதே இப்புத்தக்கத்தின் அடிப்படை. பணியாளர் விரும்பும் நிறுவனங்களில் முன்னணியில் இருக்க‌க்கூடிய நிறுவனங்களில் கூகுள் ஒன்று. லாஸ்லோ போக் தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக எப்படி கூகுளை அந்த நிலையை அடைய…

  • |

    ஆரோக்ய நிகேதனம் – தாராசங்கர் பந்த்யோபாத்யாய

    1951 ஆம் ஆண்டில் தாராசங்கர் பந்த்யோபாத்யாய அவர்களால் வங்க மொழியில் எழுதப்பெற்ற நாவல். பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலை தமிழில் த.நா.குமாரசாமி அவர்கள் 1972 ல் மொழிபெயர்த்துள்ளார். இந்திய அரசின் சாகித்திய அகாதெமி மற்றும் மேற்கு வங்க அரசின் ரபீந்திர புரஷ்கார் விருதுகளை வென்ற நாவல். இந்நாவல் ஜீவன் மாஷாய் என்னும் வைத்தியரின் நினைவோட்டத்தின் வாயிலாக சொல்லப்படுகிறது. மூன்று தலைமுறைகளாக ஆயுர்வேத சிகிச்சை செய்துவரும் ஜீவன் மாஷாயின் வாழ்வு மற்றும் ஆயுர்வேத மருத்துவம் ஆங்கில மருத்துவ‌த்தின் வருகையினால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.