|

நவீன இந்தியாவின் சிற்பிகள் – ராமச்சந்திர குஹா

நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகள் இவர்கள் என பத்தொன்பது பேரைக் குறிப்பிட்டு அதற்கான காரணங்களாக அவர்களுடைய செயல்பாடுகள் மற்றும் அவர்கள் பல்வேறு சமயங்களில் ஆற்றிய உரைகள், எழுதிய கடிதங்கள் போன்றவற்றை ஆதாரங்களினோடு தொகுத்துள்ளார் ராமச்சந்திர குஹா. அதுவே இப்புத்தகம்.

அந்த பத்தொன்பது பேர் இவர்களே

மகாத்மா காந்தி
ஜவகர்லால் நேரு
பி.ஆர்.அம்பேத்கர்
ராம்மோகன் ராய்
ரவீந்திரநாத் தாகூர்
பாலகங்காதர திலகர்
ஈ.வே.ராமசாமி
முகம்மது அலி ஜின்னா
சி.ராஜகோபாலச்சாரி
ஜெயப்பிரகாஷ் நாராயணன்
கோபால கிருஷ்ண கோகலே
சையது அகமது கான்
ஜோதிராவ் ஃபுலே
தாராபாய் ஷிண்டே
கமலாதேவி சட்டோபாத்யாய்
எம்.எஸ்.கோல்வல்கர்
ராம் மனோகர் லோகியா
வெரியர் எல்வின்
ஹமீத் தல்வாய்

இப்புத்தகத்தின் ஆரம்பத்திலேயே குஹா “இப்புத்தகம் ஓர் அரசாங்கத்தின் இட ஒதுக்கீடு முறைபோல அனைத்து மாநிலங்களுக்கும் சீரான முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில் தொகுக்கப்படவில்லை. மாறாக கடந்த கால நிகழ்வுகளின் அடிப்படையிலும், வரலாற்று விளைவுகளின் அடிப்படையிலுமே சிற்பிகள் பத்தொன்பது பேரும் தொகுக்கப்பட்டிருக்கிறார்கள்” எனக் கூறிவிடுகிறார். புத்தகத்தின் ஆரம்ப நிலையில் இந்தப் புரிதல் அவசியமானது.

மற்றோர் சிறப்பம்சம், ஒவ்வொரு நபரைப் பற்றிய அத்தியாயங்களிலும் அவர்களுடைய உரைகளை சுருக்கி அல்லது அப்படியே தந்துள்ளார் குஹா. இதற்காக அவர் இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலுருமிருந்து தகவல்களையும், அவர்களுடைய‌ உரைகளையும், கடிதங்களையும் சேகரித்து ஒற்றை ஆவணமாக இப்புத்தகத்தினை தொகுத்துள்ளார். அத்தகைய முயற்சி அளப்பரிய போற்றுதலுக்குரியது.

அவ்வாறு தொகுத்ததன் பயன்கள் இரண்டு.
ஒன்று, ஒருவருடைய‌ காலத்திற்குப்பிறகு அவருடைய அனைத்து தகவல்களையும் ஒன்றாகத் திரட்டுவதால் அவருடைய ஒட்டுமொத்த தோற்றத்தை ஒருவாராக நாம் புரிந்து கொள்ளலாம்.

இரண்டாவது அவருடைய செயல்பாடுகள், உரைகள் போன்றவற்றை பிற்காலத்திய விளைவுகளோடு ஒப்பிட்டு அவருடைய‌ தொலைநோக்குப் பார்வை எத்தகையது, அவ்விளைவில் அவரின் பங்கு என்ன, அவரின் செயல்பாடுகள் எதிர்காலத்தினை நிர்ணயிக்கும் ஓர் காரணியாக இருந்ததா? இல்லையா? போன்றவற்றை அறியலாம். அதனை மிகச் சிறப்பாகச் செய்துள்ளார் குஹா. அதன் அடிப்படையிலேயே இந்த பத்தொன்பது பேரை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.

பாகிஸ்தான்
1937 ல் அப்படி ஒன்றே பேச்சில் கூட‌ கிடையாது அல்லது முற்றிலும் புறந்தள்ளக்கூடியது என்று இருந்த ஒன்று பாகிஸ்தான் என்ற தனித்தேசம். 1941 லேயே முகமது அலி ஜின்னா பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கையை முன் மொழிகிறார். 1947 ல் பாகிஸ்தான் பிறந்துவிடுகிறது. வெறும் பத்தே ஆண்டுகளில் பாகிஸ்தான் என்ற வார்த்தையே இல்லாமலிருந்த ஓர் நிலை தனி நாடு என்ற நிலையை அடைந்துவிட்டது. அதுவே வரலாற்றின் பாடம், மிகப்பெரிய‌ விளைவுகள் மிகச்சாதரணமான ஓர் நிகழ்வினில் தொடங்கிவிடுகின்றன‌.

இதனைப் போன்ற ஏகப்பட்ட நிகழ்வுகள், விளைவுகள் என புத்தகம் முழுமையும் அடர்த்தியான தகவல்களால் நிரம்பியுள்ளது. இப்புத்தகத்திலிருந்து ஓர் வரலாற்று உண்மையை ஒருவர் எளிதில் உணர முடியும், இப்பத்தொன்பது பேரும் தனி நபர்களே, அவர்கள் மற்றவர்கள் போல மிகச்சாதாரணமான‌ வாழ்க்கை வாழவில்லை. ஒருவேளை அப்படி வாழ்ந்திருந்தால் இயல்பாக வரலாற்றில் இருந்து மறைந்திருப்பார்கள். ஆனால் அவர்களின் கொள்கை மற்றும் அவர்கள் எடுத்த நிலை, பின்னாளில் மக்களின் வாழ்க்கையினை நிர்ணயிக்கும் ஒன்றாக‌ மாறியிருக்கின்றது, அது தனி தேசமாக இருக்கலாம், அல்லது அரசியலமைப்பு சட்டமாக இருக்கலாம் அல்லது வேறொன்றாகவோ இருக்கலாம்.

க‌ண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம். இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு புத்தகத்தினோடு சேர்ந்து படித்தால் பல வரலாற்றுத் தகவல்களோடு பொருத்திப்பார்த்து எளிதாக உள்வாங்கிக் கொள்ளலாம்.

Similar Posts

  • |

    சிம்ம சொப்பனம் – மருதன்

    மருதன் அவர்களால் எழுதப்பெற்ற புத்தகம். கியூபாவினுடைய‌ பிதாமகரான பிடல் காஸ்ட்ரோவினுடய வாழ்க்கை வரலாறு. கியூபா எதற்காக அமெரிக்காவிற்கு முக்கியமான ஒரு நாடு. இன்றுவரை அமெரிக்காவினால் கபளீகரம் செய்யப்படாமல் இந்த தேசம் இருப்பதற்கான காரணங்கள் என்னென்ன‌ என பலவற்றை இப்புத்தகம் விவரிக்கிறது. புத்தகம் பிடல் காஸ்ட்ரோவினுடைய தந்தையின் காலத்தில் இருந்து தொடங்கி இன்றைய பிடல் காஸ்ட்ரோ வரை வருகிறது. ஸ்பெயினினுடைய ஆதிக்கம், பின்னர் ஸ்பெயினின் ஆதிக்கம் தளர்ந்து அமெரிக்காவின் கை ஓங்குதல் என பல்வேறு காலகட்டங்களையும், அதனுள் எவ்வாறு…

  • |

    The Psychology of Money – Morgan Housel

    Morgan Housel ஆல் எழுதப்பெற்ற நூல். வெளிவந்த ஆண்டு 2020.நம்முடைய பொருளாதார முடிவுகளை எடுப்பதில் நம்முடைய உணர்வுகளும், நம்பிக்கையும், எண்ணங்களும் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதினை விளக்கக்கூடிய‌ நூல். குறிப்பாக நம்முடைய கடந்த கால அனுபவங்கள், நம்பிக்கைகளே பெரும்பாலும் நம்முடைய பொருளாதார முடிவுகளை எடுப்பதில் முக்கியப்பங்காற்றுகின்றன என்பதனை விளக்குகிறார். பணத்தினைப் பற்றிய நம்முடைய எண்ணங்களை மாற்றக்கூடிய ஒரு புத்தகம். உண்மையில் செல்வம் என்ற ஒன்று நம்மால் காண முடியாத ஒன்று. நம்மால் எதை செய்ய முடியும் என்பதற்கும்,…

  • |

    புத்தகம் 3 : உமார் கயாம் பாடல்கள்

    பாரசீகக் கவிஞர் உமார் கய்யாமின் பாடல்களை கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் தமிழில் மொழிபெயர்த்திருந்தார். அந்தப் பாடல்களையும் அதற்கான பொருள்களையும் கமலா முருகன் என்பவர் தொகுத்திருக்கும் நூல் இது. நேரடியான மொழிபெயர்ப்பு கிடையாது. அதாவது தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் அந்தக் கருவை நம் மொழியில் வடித்துள்ளார். ஒரு கவிதையில் கம்பராமயணம் பற்றிக் கூட உண்டு. பொதுவாக இந்த நூலில் உள்ள பாடல்கள் மூன்று வகையாக இருக்கின்றன. ஒன்று வாழிவின் நிலையாமை பற்றிய பாடல்கள். உதாரணமாக, புலர்ந்து…

  • இந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்

    ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள், அரசிலும், ஏனைய அரசு நிறுவனங்களிலும் புகுத்தும் இந்துத்துவ செயல்பாடுகளை விவரிக்கும் நூல். தனித்தனிக் கட்டுரைகளாக வெளிவந்தவற்றை ஒன்று சேர்த்து வெளியிட்டுள்ளனர். அதனால் இதற்கு ஒட்டுமொத்த வடிவமென்ற ஒன்று இல்லை. எந்தக் கட்டுரையை வேண்டுமானாலும் படிக்கலாம். இந்த நூலை அதன் தலைப்பின் பொருட்டே தேர்வு செய்தேன். காரணம் இந்நூல் இந்துத்துவத்தின் அனைத்து முகங்களையும் காட்டுமென்று. ஆனால் அதன் கோர முகத்தினை மட்டும் மிகவும் கோரமாகக் காட்டியிருக்கிறது. பெரும்பாலான தகவல்களும் குற்றச்சாட்டுக்களும் 1998…

  • |

    அசைவ உணவு அனுமதிக்கப்பட்டதா? தடுக்கப்பட்டதா? – டாக்டர் ஜாகிர் நாயக்

    இஸ்லாம் மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கும், ராஷ்மிபாய் ஸ‌வேரி அவர்களுக்கும் இடையில் நடந்த அசைவ உணவு அனுமதிக்கப்பட்டதா? தடுக்கப்பட்டதா? என்ற விவாதத்தின் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பகுதியினை சுருக்கமாக புத்தகவடிவில் வெளியிட்டிருக்கிறார்கள். அதுவே இப்புத்தகம். தமிழாக்கம் நூ.முகமது கனி. வெளியிடப்பட்ட வருடம் ஜனவரி 2011. அசைவ உணவு மனிதர்களுக்கு அனுமதிக்கப்பட்டது என்பதனை ஜாகிர் நாயக் குரான் மற்றும் பிற அறிவியல் இதழ்களின் ஆதாரம் கொண்டு விவரிக்கிறார். ஸவேரி அவர்களின் உரைவடிவம் இப்புத்தகத்தில் இல்லையாதலால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.