|

உப்பு வேலி – ராய் மாக்சிம் (தமிழில் சிறில் அலெக்ஸ்)

இந்தியாவின் குறுக்கே உப்பின்மீது சுங்கம் வசூலிப்பதற்காக ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட வேலியைப் பற்றி அறிந்துகொள்ளும் ஓர் ஆய்வாளர் அதனைத் தேடி தன்னுடைய பயணத்தை தொடங்குகிறார். ஆரம்ப ஆண்டுகளில் கண்டறிய முடியாமல் தன்னுடைய மூன்றாவது பயணத்தின் போது அதனைக் கண்டடைகிறார். அவருடைய அந்த ஒட்டு மொத்த பயணமும், அந்த வேலிக்குப் பின்னர் இருந்த ஆங்கிலேய வரலாற்று நிகழ்வுகளுமே இந்த உப்பு வேலி. இது ஓர் வரலாற்று நிகழ்வினை ஆவணப்படுத்தும் நாவல். கண்டிப்பாக இது வரை இது பற்றிய நாவலோ, ஆவணமோ நம்மிடம் இல்லை. கிட்டத்தட்ட 3000 மைல்கள் இந்தியாவுக்கு குறுக்காக ஒரு வேலி, பராமரிப்பிற்காக 12000 பணியாளர்கள். அத்தனை விலைமதிப்பற்ற பொருளா உப்பு? இவற்றுக்கெல்லாம் இப்புத்தகத்தை வாசிப்பதன் மூலம் விடை தெரிந்து கொள்ளலாம்.

உப்பு
சராசரியாக ஒரு மனிதனுக்கு ஒரு நாளைய உப்பின் தேவை 20 கிராம். இது ஒரு ஆடம்பரப் பொருள் அல்ல, அத்தியாவசியப்பொருள். எனவே எல்லோரும் வாங்கியாகவேண்டும். ஒட்டுமொத்த இந்தியாவுமே உப்பினை உற்பத்தி செய்யக்கூடியவை அல்ல. கடற்கரையே இல்லாத பல மாகாணங்கள் இருக்கின்றன. அதுவே ஆங்கிலேயர்களின் உப்பின் மீதான வரி வசூலிக்கும் திட்டத்தின் ஆரம்ப கால‌ காரணங்களில் ஒன்று. 1800 களில் ஒரு மனிதன் தன்னுடைய நான்கு மாத சம்பளத்தை உப்பிற்காகவே செலவு செய்ய வேண்டியிருந்திருக்கிறது. அதாவது இன்று 10000 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவன் 40000 ரூபாய் உப்பிற்காக மட்டும் செலவு செய்ய வேண்டும். எத்தனை கொடுமையாக இருந்திருக்கிறது?

பல்வேறு மாகணங்களும் பல்வேறு ஆங்கிலேய ஆளுநர்களால் ஆளப்பட்டமையால் ஒரு மாகாணத்திலிருந்து மற்றோர் மாகாணத்திறு உப்பின் விலை வேறுபட்டிருக்கிறது. அதனைக் கட்டுப்படுத்துவதற்காகவும், தங்களுடைய உப்பளங்களில் உற்பத்தியாகும் உப்பினை விற்பதற்காகவும், கடத்தலைத் தடுப்பதற்காகவும் ஆங்காங்கே சுங்கவேலிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன‌. பின்னர் வந்த ஆண்டுகளில் அவையெல்லாம் இணைக்கப்பட்டு ஓர் ஒட்டுமொத்த வேலியாக மாற்றப்பட்டிருக்கிறது.

அதில் முக்கியாமன ஓர் தகவல் அது ஓர் உயிர் வேலி. வெறும் கம்புகளைக் கொண்டு அமைக்கப்படும் வேலிகள் இயற்கைச் சீற்றங்களால் அழிந்து விடுவதாலும், பராமரிப்புச் செலவு அதிகமாக இருந்ததாலும் அவற்றை உயிர் வேலிகளாக மாற்ற முடிவு செய்து முள்வேலி மரங்களை நட்டு அவற்றை உயிருள்ள முள்கொடிகளால் இணைத்துக் கட்டி உருவாக்கியுள்ளனர். அவ்வேலி முழுமை பெற்ற போது அதன் உயரம் 12 அடியாகவும், அகலம் 10 அடியாகவும் இருந்திருக்கிறது. அவ்வாறு அமைக்கப்பட்ட வேலிக்கு ஆண்டு பராமரிப்பு செலவு கிட்டத்தட்ட 16 லட்சம் ரூபாயாக இருந்திருக்கிறது. ஆனால் வருமானமோ 4 கோடியாக இருந்திருக்கிறது. இவ்வேலியின் பயனாக மற்ற பொருள்கள் மீதும் சுங்கம் விதிக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக கோதுமை,சர்க்கரை,நெல். இதனால் பெருமளவு உணவுப்பொருள்கள் நகர்வது தடுக்கப்பட்டு அது பின்னாளில் வங்கப்பஞ்சத்தில் மிகப்பெரிய அளவில் மக்கள் மரணம் அடைவதற்கு ஓர் முக்கிய காரணமாக ஆகியிருக்கின்றது.

பிக்காலகட்டத்தில் அனைத்து மாகணங்களும் ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டு வரப்பட்டமை, வரிகளுக்கான வேறு வழிகளை ஆங்கிலேயர்கள் கண்டுகொண்டமை போன்றவைகளால் இவ்வேலி 1890 களில் கைவிடப்பட தொடங்கி பின்னர் முற்றிலுமாக அழிந்து போனது. இன்றும் உப்பினை பல கிராமத்து சொல‌வடைகளில் காணலாம். அதன் பின்னணி அத்தனை கொடுமையானது. பின்னர் வந்த சுதந்திர போராட்ட காலகட்டத்தில் இவ்வரலாறு முற்றிலும் மறந்து போனது. காந்தி உப்பு சத்தியா கிரகம் நடத்தியபோது 1800 களின் ஆரம்பத்தில் இருந்தது போல அத்துனை கொடுமையான காலகட்டமாக இருக்கவில்லை. அதனால் அதுவும் மிகப்பெரும் தாக்கத்தையும்,வரலாற்றை மீண்டும் நினைவுக்கு கொண்டு வரவும் முடியவில்லை. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல்.

இப்புத்தகத்தினைப் பற்றி ஆசான் எழுதியுள்ள ஓர் அருமையான கட்டுரை இங்கே.

Similar Posts

  • தாயம் – ரங்கராஜன்

    சுயமுன்னேற்ற நூல் என இந்நூலை வகைப்படுத்தினால் மற்ற சுய முன்னேற்ற நூல்களுக்கான இடமே மனதில் இதற்கும் கிடைக்குமென்றால் இது சுய முன்னேற்ற‌ நூலன்று. எப்பொழுதெல்லாம் தன்னம்பிக்கை, ஒழுக்கத்தில் பிழை ஏற்படுவதாக எண்ணினாலும் உடனே வாசிக்க வேண்டிய‌ நூல் இது.  எத்தனை முறை வாசித்தாலும் ஒவ்வொரு முறையும் புதியதொரு புத்துணர்ச்சியைத் தரும் நூல். எப்பொழுது வேண்டுமானலும் எந்த அதிகாரத்தை வேண்டுமானாலும் படிக்கக்கூடிய வடிவமைப்பு. மிக எளிய மொழிநடை. எக்காலத்திற்கும் மனதில் நிற்கும் சிறந்த நூல்களில் ஒன்று. நன்றி.

  • The Siren’s Feast – Benjamin Hulme-Cross

    Benjamin Hulme-Cross என்பவரால் எழுதப்பட்டது. சாத்தான்களை ஓட்டும் கதை. சிறுகதை என‌லாம். குழந்தைகள் மற்றும் ஆரம்பகால வாசிப்பு நிலைகளில் உள்ளவர்களின் வாசிக்கும் பழக்கத்தினை ஊக்குவிக்கக்கூடிய‌ புத்தகம். அதற்காகவே புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைவான வார்த்தைகள், பெரிய எழுத்துக்கள். ப்லட் சாத்தான்களை ஓட்டுபவ‌ர். அவருக்கு உதவக்கூடிய சிறுவர்கள் எட்ஜும் மேரியும்.ஒருமுறை அவர்கள் ஓரிடத்தைக் கடக்கும்பொழுது ஓர் கிராமம் அதீத வறுமையில் இருப்பதைக் கண்டு தங்களிடமுள்ள உணவுப்பொருள்களைக் கொடுக்கின்றனர். அதனைத் தொடர்ந்து அந்தக் கிராமத்தில் உள்ள மற்ற‌ அனைவரும் இவர்களிடம் உணவுப்பொருள்களை எதிர்பார்க்கின்றனர்….

  • |

    Home Deus – Yuval Noah Harari

    This books follows the popular book ‘The Sapiens’ from the same author Yuval Noah Harari. If you have not read the book ‘The Sapiens’ it should be read first. So that it will give better picture on understanding this book. The Sapiens talks on how the homo sapiens evolved as human being in detail. This…

  • |

    காவி கார்ப்பரேட் மோடி

    மோடி அவர்களைப் பற்றி பல்வேறு காலகட்டங்களில் வினவு இணையதளம் மற்றும் புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நூல். நூலகத்தின் காட்சிப்பலகையில் வைக்கப்பட்டிருந்ததால் இப்புத்தகத்தை வாசித்தேன். முற்றிலும் ஒற்றைச்சார்பு கொண்ட கட்டுரைகள். ஒற்றை வரி இதுதான். மோடி வெறுப்பு. அதற்கான சம்பவங்களையெல்லாம் எடுத்து கட்டுரையாக்கியிருக்கிறார்கள். அதிலும் கீழ்த்தரமான வார்த்தைகள். இரண்டாவது நோக்கம் புத்தகம் வெளிவந்த காலம் 2013 ஆம் ஆண்டு. அப்போதைக்குத்தான் மோடி அவர்களை பிரதமராக அறிவிப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகிக்கொண்டிருந்த நேரம். அதனால் மோடியின் மதிப்பினைக்த…

  • ஃபாரன்ஹீட் 451

    கதை எதிர்காலத்தில் நடைபெறுவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் போர் ஏற்படுவது போன்ற சூழல். ஆதலால் அரசாங்கம் யாரும் புத்தகங்களை வைத்திருப்பதையும், வாசிப்பதையும் தடை செய்கிறது. மோண்டாக் ஒரு தீயணைப்புத் தொழிலாளி. அவனுடைய மேலாளர் பியாட்டி. அவர்களது பணி யார் வீட்டிலெல்லாம் புத்தகங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதோ அவற்றைக்கண்டுபிடித்து எரிக்க வேண்டும். அதுவே அவர்களுக்கு இடப்பட்ட ஆணை. மக்கள் பெரும்பாலானவர்கள் வாசிக்கும் பழக்கத்தையே விட்டுவிட்டவர்களாக இருக்கிறார்கள். அன்றைய தொலைக்காட்சிகள் பார்ப்பவர்களோடு உரையாடும் தொழில்நுட்பம் கொண்டவைகளாக இருக்கின்றன. எனவே எல்லோரும் முற்றிலும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.