| | | |

இந்தியாவில் முகலாயர்கள் ‍- 1

16 ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரையிலான‌ ஏறத்தாழ 350 ஆண்டுகள் இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சிக்காலம். அதுவரை இந்தியாவினை ஆண்டு வந்தவர்கள் ஆப்கானிய‌ வம்சத்தைச் சேர்ந்த சுல்தானியர்கள். சுல்தானியர்களும் இன்றைய இந்திய நிலப்பரப்பு முழுவதையும் ஆளவில்லை. இன்றைய வட இந்திய நிலப்பகுதி, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை உள்ளடக்கிய ஓர் நிலப்பகுதியினை ஆண்டு வந்தார்கள். அவர்களைத் தோற்கடித்தே முகலாயப் பேரரசினை பாபர் தொடங்கி வைத்தார்.

File:Sultan-Ibrahim-Lodhi.jpg
இப்ராஹிம் லோடி

மங்கோலிய இன‌ செங்கிஸ்கான் வழி வந்தவர் தைமூர். தைமூர் மங்கோலிய, துருக்கிய இனக்கலப்பினை பூர்வீகமாகக் கொண்டவர். அவர் உருவாக்கியது தைமூர் பேரரசு. அவருடைய‌ தைமூர் வம்சம் 1300 களிலிருந்து 1500 வரை மத்திய ஆசியாவை ஆண்ட தைமூர் பேரரசையும், பின்னர் 1500 களிலிருந்து 1800 வரை இந்தியாவை ஆண்ட முகலாயப் பேரரசையும் உருவாக்கியது. தைமூரின் பேரனின் பேரன்தான் பாப‌ர்.

இன்றைய உஸ்பெகிஸ்தானின் ஃபெர்கானாவில் பிறந்த பாபர், தன்னுடைய 12 வது வயதில் அரியணை ஏறுகிறார். பின்னர் சாமர்கண்டைக் கைப்பற்றுகிறார். அதன் பின்னர் முகமது சாய்பனியினால் உஸ்பெகிஸ்தானில் தோற்கடிக்கப்பட அங்கிருந்து வெளியேறுகிறார். மீண்டும் சாமர்கண்டை அடைய முயன்று தோல்வி அடைய, ஆப்கானிஸ்தானின் காபூலைக் கைப்பற்றுகிறார்.

File:Babur of India.jpg
பாபர்

அதன் பின்னர் த‌ன்னுடைய கவனத்தை இந்தியா பக்கம் திருப்பும் பாபர் கைபர் கணவாய் வழியாக இந்தியாவில் நுழைந்து 1526 ஆம் ஆண்டு டெல்லியை ஆண்டு வந்த‌ இப்ராஹிம் லோடியைத் தோற்கடிக்கிறார். அது முதலாம் பானிபட் போர். சுல்தான் லோடி ஆப்கன் வம்சத்தினைச் சேர்ந்தவர். அதனைத் தொடர்ந்து ஆட்சி அமைக்கும் பாபர் 1530 ல் இறக்கிறார். பாபருக்குப் பின்னர் அரசாள வரும் அவருடைய‌ மகன் ஹியுமாயுனுக்கு அவருடைய சகோதரர்களுடனேயே பகை உருவாகிறது. அதனால் அவருடைய ஒரு சகோதரர் கொல்லப்படுகிறார். ஷெர் ஷாவிடம் தோல்வியடையும் ஹியுமாயுன் இந்தியாவிலிருந்து வெளியேறுகிறார். பின்னர் 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஷெர்ஷாவைத் தோற்க்டித்து டெல்லியைக் கைப்பற்றுகிறார்.

File:Emperor Humayun.JPG
ஹியுமாயுன்

ஹியுமாயுனுக்குப் பிறகு ஆட்சிக்கு அவருடைய மகன் அக்பர் வருகிறார். அக்பரின் காலகட்டத்திலேயே முந்தைய அரசர்களைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் மத நல்லிணக்கம் பேணப்பட்டது. ஆட்சி எல்லை தென்னிந்தியாவிற்கும் நீட்டிக்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு அவருடைய மகன் ஜஹாங்கீர், ஜஹாங்கீரின் மகன் ஷாஜகான், ஷாஜகானின் மகன் அவுரங்கசிப் வருகின்றனர்.

Govardhan. Akbar With Lion and Calf ca. 1630, Metmuseum (cropped).jpg
அக்பர்

அவுரங்கசீப் காலத்தில் கடுமையான அரசு சட்டங்களும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. ஷரியத் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அவர் காலத்திலேயே முகலாய அரசு தன்னுடைய அதிகபட்ச ஆட்சி எல்லையை விரிவுபடுத்தியது. உலகின் ஒட்டுமொத்த உற்பத்தியில் கால்பங்கு இந்தியாவிலிருந்தே உற்பத்தியான காலகட்டம் அது. அவரின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளே பின்னாளில் முகலாய பேரரசிற்கு எதிரான பல்வேறு கலவரங்களுக்கு வழிவகுத்தன. அவுரங்கசிப்பின் மகன் ஷா ஆலம் ஆட்சியில், அவுரங்கசிப்பினால் அமல்படுத்தப்பட்ட‌ பல்வேறு சட்டங்கள் நீக்கப்பட்டாலும் அவை ஏற்கனவே போதுமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தன.

'Jujhar Singh Bundela Kneels in Submission to Shah Jahan', painted by Bichitr, c. 1630, Chester Beatty Library (cropped).jpg
ஷாஜகான்

அதன் பின்னர் ஆண்ட பல்வேறு முகலாய மன்னர்கள், குறுகிய காலம் அல்லது முன்போல் அல்லாத சிறிய‌ நிலப்பரப்பினை மட்டுமே ஆண்டு வந்தனர். கிழக்கிந்திய கம்பெனியின் வளர்ச்சியும், மராத்தியர்களின் எழுச்சியும் அவர்களின் நில எல்லையைக் குறுக்கிக் கொண்டே வந்தன‌.

Aurangzeb-portrait.jpg
அவுரங்கசிப்
Bahadur Shah II of India.jpg
இரண்டாம் பகதூர் ஷா

கடைசியாக‌ இரண்டாம் பகதூர் ஷாவின் ஆட்சியின் போது ஏற்பட்ட சிப்பாய்க் கலகத்தின் விளைவாக 1857 இல் இந்தியா முற்றிலுமாக இங்கிலாந்து அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

Similar Posts

  • கற்போம்

    கல்வி என்பது என்ன? இன்றைய நிலையில் கல்வி என்பது தனிமனித பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்யும் ஒரு கருவி என்பதாகிவிட்டது.அதாவது ஒருவன் தனது கல்வியினால் தன்னுடைய பொருளாதாரத்தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியாமல் போனால் அவன் கற்ற கல்வி தவறானது என்றே பொருள் கொள்ளப்படும். அது கல்வி அல்ல. பயிற்சி. ஒரு குறிப்பிட்ட எதிபார்ப்போடு செய்யப்படக்கூடிய ஒரு செய்முறை என்பது பயிற்சியே. கல்வி என்பது அதுவல்ல.  கல்வி என்பது கற்றல். அது நாம் பள்ளி, கல்லூரிகளில் மட்டுமே…

  • |

    வாசிப்பில்

    தற்போது இந்த மூன்று புத்தகங்களையும் ஒரு சேர வாசித்து வருகிறேன். 1. இந்துத்துவத்தின் பன்முகங்கள் 2. Adolf Hitler: A Life From Beginning to End 3. Pride and Prejudice மூன்று விதமான புத்தகங்கள் ஒருசேர…

  • இசையும் பாடலும்

    நம் மனநிலையை மாற்றும் சக்தி இசைக்கும் பாடலுக்கும் எப்போதுமே உண்டு. இசையும் பாடலும் ஆரம்ப காலம் தொட்டே நம்மோடு இணைந்து வருகிறது. முற்றிலும் படிப்பறிவில்லாத காலகட்டத்திலும் கூட நாட்டுப்புற பாடல்களை பாடியபடியே கிராம மக்கள் வேலை செய்ததை இலக்கியங்களில் காணலாம். இன்றும் சில கிராமங்களில் வேலை நேரங்களின் போது வேலையாட்கள் பாடுவதைக் கேட்கலாம். நன்கு உற்று கவனித்தால் அவர்கள் முதியவர்களாக இருப்பார்கள். ஆனால் இசை என்பது உயர்குடி மக்களுக்கு மட்டுமே என்ற நிலையை பிற்கால உயர்குடி மக்கள்…

  • இந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்

    ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள், அரசிலும், ஏனைய அரசு நிறுவனங்களிலும் புகுத்தும் இந்துத்துவ செயல்பாடுகளை விவரிக்கும் நூல். தனித்தனிக் கட்டுரைகளாக வெளிவந்தவற்றை ஒன்று சேர்த்து வெளியிட்டுள்ளனர். அதனால் இதற்கு ஒட்டுமொத்த வடிவமென்ற ஒன்று இல்லை. எந்தக் கட்டுரையை வேண்டுமானாலும் படிக்கலாம். இந்த நூலை அதன் தலைப்பின் பொருட்டே தேர்வு செய்தேன். காரணம் இந்நூல் இந்துத்துவத்தின் அனைத்து முகங்களையும் காட்டுமென்று. ஆனால் அதன் கோர முகத்தினை மட்டும் மிகவும் கோரமாகக் காட்டியிருக்கிறது. பெரும்பாலான தகவல்களும் குற்றச்சாட்டுக்களும் 1998…

  • |

    குடி அரசு

    தமிழகத்தில் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விட்டது. அரசாங்கம் தன்னுடைய பொருளாதார நிலைக்கு இது மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்று நினைத்து பல வருடங்களாகி விட்டது. அதனால் மதுக்கடைகள் அரசு மூடிவிடும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. ஒருவேளை சமூக ஊடகங்களிலும், செய்தித் தொலைக்காட்சிகளிலும் இதனை ஒரு கருப்பொருளாகக் கொண்டு விவாதம் நடத்தலாம். சில கிண்டல் செய்திகளை பரப்பி மகிழலாம். அவ்வளவே. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு கள்,சாராயம் போன்றவை தமிழகத்தில் ஆங்காங்கே விற்பனை செய்யப்பட்டுக்கொண்டிருந்த போது, 1886 ஆம்…

  • |

    Home Deus – Yuval Noah Harari

    This books follows the popular book ‘The Sapiens’ from the same author Yuval Noah Harari. If you have not read the book ‘The Sapiens’ it should be read first. So that it will give better picture on understanding this book. The Sapiens talks on how the homo sapiens evolved as human being in detail. This…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.