அதிக பணம் அச்சடித்தால் என்ன?

inr_currencyபொருளாதாரம் பற்றி அறியத்துவங்கிய காலத்தின் ஆரம்பகாலக் கேள்விகளுள் ஒன்று. இந்தக் கேள்வியோடிருப்பவர் நீங்களென்றால் உங்களுக்கே இந்தப் பதிவு.

இந்தியாவின் கடன் தொகை பல லட்சம் கோடிகளில். ரூபாய் மதிப்பு சரிவு. இதைச் சரிசெய்ய அதிக பணம் அச்சடித்தால் என்ன? அடிப்படைக்கேள்வி.

அடிக்கலாம். என்ன நடக்கும்? அரசாங்கம் அதிக பணம் அச்சடிக்கும். அதை புழக்கத்தில் விடும். புழக்கத்தில் விட வேண்டுமென்றால் அரசு திட்டங்களுக்காக செலவிடலாம், அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக தரலாம் அல்லது மக்களுக்கு  மணியார்டர் செய்யலாம். எப்படியோ மக்களிடம் சேர்ந்துவிடும். நினைவில் கொள்ளுங்கள். அரசு திடீரென்று பணத்தை அச்சடித்திருக்கிறது. ஆனால உற்பத்தி எப்போதும்போல்தான் இருக்கிறது.

 சரி பணத்தை புழக்கத்தில் விட்டாயிற்று. அடுத்தென்ன நடக்கும்? ஒட்டு மொத்த மக்களிடம் முன்பு 50000 ரூபாய் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போது அரசு ஒரு 50000 ரூபாய் அச்சடிப்பதாகவும் வைத்துக்கொள்வோம். புழக்கத்தில் விட்டபின் மக்களிடம் மொத்தம் 1 லட்சம் ரூபாய் இருக்கும்.

மக்கள் முன்பு 50 ஆயிரம் ரூபாய் இருந்தபோது வாங்க முயற்சித்த பொருள்களை இப்போது 1 லட்சம் ரூபாயைக்கொண்டு வாங்க முயற்சிப்பர். பொருள்களின் விலை தானாக உயரும். ஏனென்றால் பொருள்களின் உற்பத்தி திடீரென்று உயரவில்லை. ஆக‌ முன்பு 50 ரூபாய் கொடுத்து வாங்கிய ஒரு பொருளை இப்பொழுது 100 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். 

இப்படியாக‌ பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்துவிடும். முன்னைய 50 ரூபாயின் மதிப்பை இப்பழுதுள்ள 100 ரூபாயால் தான் அடைய முடியும். 

மேலும் நாம் இறக்குமதி செய்த பொருளுக்கு கொடுக்க வேண்டிய தொகையும் அதிகரித்திருக்கும். ஏனென்றால் மேற்கூறிய தகவல்தான், 50 ரூபாய் கொடுக்க வேண்டிய ஒருவருக்கு இனி 100 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும். ஏனென்றால் முந்தைய 50 ரூபாயின் மதிப்பும், இப்போதைய 100 ரூபாயின் மதிப்பும் சமம்.

அதனால்தான் பணமதிப்பு வீழ்ச்சி ஏற்றுமதிக்கு இலாபமெனவும், இறக்குமதிக்கு நட்டமெனவும் கூறுகின்றனர்.

Similar Posts

  • தமிழ் மலாய் சொல் அரங்கம்

    மலேசிய ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் க.கந்தசாமி அவர்களால் எழுதப்பெற்றுள்ள நூல். மலாய் மொழியில் வழங்கப்படும் தமிழ்ச் சொற்களைப் பற்றிய ஆய்வு நூல் இது. மொத்தம் 164 தமிழ்சொற்கள் நேரடியாகவும், 500 க்கும் மேலான‌ சொற்கள் 5 முதல் 10 விழுக்காடு திரிதலோடு மலாய் மொழியில் இன்றும் நடைமுறையில் இருப்பதை விளக்கியிருக்கின்றார். அதற்காகவே வணக்கங்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்னே வணிகத்தின் பொருட்டு கடல் கடந்து சென்ற தமிழர்களால் மலாய் மொழியின் இயல்பிலே கலந்துவிட்ட பல வார்த்தைகளுள்…

  • அறிதலின் துவக்கம்

    அறிதலின் அடிப்படைத்துவக்கமே தன் குறைகளைத் தன்னளவில் ஏற்றுக்கொள்வதே. தன் செயலை சரியாக செய்யக்கூடிய ஒருவன் அதனை மேம்படுத்தும் வழியைத் தேடுகிறான். தன்னால் செயலையே செய்து முடிக்க‌ முடியாத ஒருவன் அச்செயலை செய்து முடிப்பதையே பெரிய சாதனையாகக் கருதும்பொழுது அங்கே மேம்படுத்துவது என்ற‌ சொல்லே பொருளற்றுப் போகிறது.

  • எங்கே இந்தியக் கல்வி?

    நான் கடைசியில் கூறப்போவதை இப்போதே சொல்லிவிடுகிறேன். “இந்தியக்கல்வி பில்கேட்ஸிடம் வேலை செய்ய 1000 பேரை உருவாக்கும். ஆனால் ஒரு பில்கேட்ஸை கூட உருவாக்காது” இந்தியா:—–>மனித சக்தியில் உலக அளவில் இரண்டாம் இடம். பரப்பளவில் ஏழாம் இடம். பொருளாதாரத்தில் பத்தாம் இடம். ஆனால் கல்வியில் வரிசைப்படித்தினால் உலகின் முதல் 200 பல்கலைக்கழகங்களில் ஒன்று கூட இந்தியாவில் இல்லை. ஆம் உண்மை அதுதான். இந்தியாவில் உள்ள 568 பல்கலைக்கழகங்களில் ஒன்று கூட உலகின் தலைசிறந்த 200 பல்கலைக் கழகங்களில் இல்லை.இதன்…

  • |

    சுதந்திர தின‌ வாழ்த்துக்கள்

    70 ஆவது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின‌ வாழ்த்துக்கள். முதலில் நம் அனைவரிடமும் ஓர் கேள்வி. நாம் உண்மையாகவே சுதந்திரதினத்தைக் கொண்டாடுகிறோமா, இல்லை அதனை ஓர் விடுமுறை நாளாக மட்டும் எடுத்துக்கொள்கிறோமா? உண்மையான பதில் நம்மில் பெரும்பாலானோர்க்கு உண்மையில் அது விடுமுறை தினம் மட்டுமே. நாம் மற்ற பண்டிகைகளான தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போலவா சுதந்திர தினத்தினைக் கொண்டாடுகிறோம்? இல்லவே இல்லை. நண்பர்களே! நாம் பெற்ற அந்த சுதந்திரத்தால்தான் இன்று நாம் நாம்…

  • | | |

    ஜெயலலிதா கைதும், மக்களின் மனநிலையும்

    ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் ஜாமின் பெற்று வெளியே வந்துவிட்டார். அதனைப் பற்றிய பேச்சு முற்றிலுமாக அடங்கிவிட்டது. அது தொடர்பான நிகழ்வுகளின் போதே இப்பதிவை இட வேண்டுமெனத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அப்போது ஏற்பட்ட இரைச்சலுக்கு மத்தியில் இதற்கு இடமில்லாது போகுமென்பதால் அவ்விவாதங்கள் முற்றிலுமாக அடங்கும் வரைக் காத்திருந்து இப்பதிவை இடுகின்றேன். ஜெயலலிதா கைது ஆன பின்னர் அதனைப் பற்றி அளவுக்கு அதிகமாக விவாதித்து கட்டுரைகளை எழுதியவர்களோ, அதனைப்பற்றி செய்திகளைப் படித்துவிட்டு அப்போதைய நாட்களில் மட்டும் நண்பர்கள் மத்தியில் தனக்கு…

  • கற்போம்

    கல்வி என்பது என்ன? இன்றைய நிலையில் கல்வி என்பது தனிமனித பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்யும் ஒரு கருவி என்பதாகிவிட்டது.அதாவது ஒருவன் தனது கல்வியினால் தன்னுடைய பொருளாதாரத்தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியாமல் போனால் அவன் கற்ற கல்வி தவறானது என்றே பொருள் கொள்ளப்படும். அது கல்வி அல்ல. பயிற்சி. ஒரு குறிப்பிட்ட எதிபார்ப்போடு செய்யப்படக்கூடிய ஒரு செய்முறை என்பது பயிற்சியே. கல்வி என்பது அதுவல்ல.  கல்வி என்பது கற்றல். அது நாம் பள்ளி, கல்லூரிகளில் மட்டுமே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.