எடிசன் போட்ட வெளிச்சம்!

அமெரிக்காவைச் சேர்ந்தவர், பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன். 1083 புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றவர்.

எரிந்து சாம்பலாகாத இழைகளைக் கொண்ட மின்சார பல்பை உருவாக்க அயராது உழைத்துக் கொண்டிருந்தார்.

பல ஆண்டுகள் இரவும் பகலும் அரும்பாடுபட்டு கடைசியில் ஒரு நாள் தன் முயற்சியில் முழு வெற்றியும் பெற்றார்.

அப்போது அதிகாலை மூன்று மணி.

மின்சார பல்பு பிரகாசமாக எரிவதைக் கண்டு மகிழ்ச்சியில் திளைத்த அவர், தூங்கிக்கொண்டிருந்த தன் மனைவியைத் தட்டி எழுப்பினார்.

“ஏய்! பார் இந்த அதிசயத்தை!”

“என்ன?”

“இருட்டை வெளிச்சமாக்கி விட்டேன்!”

கண்களைத் திறந்த அவர் மனைவி, ‘சட்’டென்று மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள்.

“என்ன இது ஒரே வெளிச்சம்! கண்கள் கூசுகின்றன. தூக்கம் கெடுகிறது. உடனே விளக்கை அணைத்து விட்டுப் பேசாமல் படுங்கள்!” என்று கூறிவிட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

தாமஸ் ஆல்வா எடிசன் அசைவற்று நின்றார்.

பிறகு சிரித்தார்.

நிறைவான சிரிப்பு!

Similar Posts

  • உலகாளும் ஒரு மொழி

    உலகமெங்கும் மக்களால் ஒரே மொழிதான் பேசப்படப்போகிறது, எழுதப்படப்போகிறது. இதனைச் சிலர் மறுத்தும் சிலர் ஏற்றும் பேசலாம். ஆனால் அதுதான் நடைபெறுகிறது. எந்த ஒரு மொழியும் அதன் வாழும் காலத்தை அதன் மாற்றங்களைக் கொண்டே நிர்ணயம் செய்து கொள்கிறது. காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டே, புதுப்பித்துக்கொண்டே வரக்கூடிய மொழிகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன,எஞ்சியிருக்கும். இன்றைய நிலையில் உலகம் முழுவது ஏறத்தாழ 7000 மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால் அவற்றுள் உலக மக்கள் தொகையில் ஒரு விழுக்காட்டுக்கு மேற்பட்ட மக்களால் பேசப்படும் மொழிகள் 20…

  • சிங்கப்பூர் கலவரம்

    சிங்கப்பூர் கலவரம் தொடர்பாக சீமான அவர்களின் குரலும் அதற்கான பதிலும். சீமான் உரை அய்யா சீமான் அவர்களே! நான் அதே புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து இங்கு வந்து வேலை செய்பவன். அத‌னால் இந்த சிங்கப்பூர் நிகழ்வு தொடர்பாக தங்களுக்கு விளக்கம் அளிக்க விரும்புறேன். நீங்கள் தங்கள் பேச்சில் குறிப்பிட்டுள்ள‌ மற்ற நிகழ்வுகளைப் பற்றிய   முழுமையான தகவல் (பத்திரிக்கை செய்திகளைத் தவிர) என்னிடம் இல்லை.  தயவு செய்து இது போன்ற பத்திரிக்கை செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டோ அல்லது செய்திகளில்…

  • |

    குடி அரசு

    தமிழகத்தில் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விட்டது. அரசாங்கம் தன்னுடைய பொருளாதார நிலைக்கு இது மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்று நினைத்து பல வருடங்களாகி விட்டது. அதனால் மதுக்கடைகள் அரசு மூடிவிடும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. ஒருவேளை சமூக ஊடகங்களிலும், செய்தித் தொலைக்காட்சிகளிலும் இதனை ஒரு கருப்பொருளாகக் கொண்டு விவாதம் நடத்தலாம். சில கிண்டல் செய்திகளை பரப்பி மகிழலாம். அவ்வளவே. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு கள்,சாராயம் போன்றவை தமிழகத்தில் ஆங்காங்கே விற்பனை செய்யப்பட்டுக்கொண்டிருந்த போது, 1886 ஆம்…

  • அறிதலின் துவக்கம்

    அறிதலின் அடிப்படைத்துவக்கமே தன் குறைகளைத் தன்னளவில் ஏற்றுக்கொள்வதே. தன் செயலை சரியாக செய்யக்கூடிய ஒருவன் அதனை மேம்படுத்தும் வழியைத் தேடுகிறான். தன்னால் செயலையே செய்து முடிக்க‌ முடியாத ஒருவன் அச்செயலை செய்து முடிப்பதையே பெரிய சாதனையாகக் கருதும்பொழுது அங்கே மேம்படுத்துவது என்ற‌ சொல்லே பொருளற்றுப் போகிறது.

  • கற்போம்

    கல்வி என்பது என்ன? இன்றைய நிலையில் கல்வி என்பது தனிமனித பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்யும் ஒரு கருவி என்பதாகிவிட்டது.அதாவது ஒருவன் தனது கல்வியினால் தன்னுடைய பொருளாதாரத்தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியாமல் போனால் அவன் கற்ற கல்வி தவறானது என்றே பொருள் கொள்ளப்படும். அது கல்வி அல்ல. பயிற்சி. ஒரு குறிப்பிட்ட எதிபார்ப்போடு செய்யப்படக்கூடிய ஒரு செய்முறை என்பது பயிற்சியே. கல்வி என்பது அதுவல்ல.  கல்வி என்பது கற்றல். அது நாம் பள்ளி, கல்லூரிகளில் மட்டுமே…

  • இசையும் பாடலும்

    நம் மனநிலையை மாற்றும் சக்தி இசைக்கும் பாடலுக்கும் எப்போதுமே உண்டு. இசையும் பாடலும் ஆரம்ப காலம் தொட்டே நம்மோடு இணைந்து வருகிறது. முற்றிலும் படிப்பறிவில்லாத காலகட்டத்திலும் கூட நாட்டுப்புற பாடல்களை பாடியபடியே கிராம மக்கள் வேலை செய்ததை இலக்கியங்களில் காணலாம். இன்றும் சில கிராமங்களில் வேலை நேரங்களின் போது வேலையாட்கள் பாடுவதைக் கேட்கலாம். நன்கு உற்று கவனித்தால் அவர்கள் முதியவர்களாக இருப்பார்கள். ஆனால் இசை என்பது உயர்குடி மக்களுக்கு மட்டுமே என்ற நிலையை பிற்கால உயர்குடி மக்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.