| |

மாதொருபாகன்

மாதொருபாகன் நாவலை முன்வைத்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று அதன் விளைவாக எழுத்தாளர் பெருமாள் முருகன் தன் எழுத்துக்களை திரும்பப் பெற்று விட்டார். இனிமேல் தான் எழுத‌ப்போவதில்லை எனவும் தான் எழுதிய அனைத்து நாவல்களையும் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் அறிவித்து விட்டார். எதிர்ப்பாளர்கள் மறுப்பை வெளிப்படுத்திய விதம் முற்றிலும் தவறு. இதில் மாற்றுக்கருத்து கிடையாது.

எதிர்ப்பாளர்கள், மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் சொன்னபடி பதிலுக்கு ஒரு மறு நாவலையோ அல்லது விளக்கவுரையோ எழுதி கடுமையாக எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கலாம். அதனைவிடுத்து மூன்றாம் தர எதிர்ப்பை காட்டத் தொடங்கியதால் இன்று இது மிகப்பெரும் பூதாகரமாகி உலகம் கவனிக்கும் செய்தியாகி விட்டது.

அரசு அவரது புத்தகங்களை தடை செய்யாமல் இருக்கிறது என்று எதிர்ப்பாளர்களும்,எதிர்ப்பாளர்களை அரசு முற்றிலுமாக‌ ஒடுக்காமல் விட்டு விட்டது என எழுத்தாளர்களும் அரசைக் குற்றஞ்சாட்டுகின்றனர். இதில் அரசின் தற்போதைய நிலையே சரியென எனக்குப்படுகிறது. ஏனெனில் எழுத்தாளர்கள் உலகை தங்களை நோக்கி, புது யுகத்தை நோக்கி விரைவாக இழுக்கிறார்கள். மற்றோர் புற மக்கள் தத்தம் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் காக்கப்படவேண்டுமென தங்கள் பக்கம் இழுக்கிறார்கள். ஆனால் அரசாங்கம் இவர்கள் இருவரையும் போன்று ஒற்றைத்தன்மையான‌ நிலையை எடுக்க இயலாது. குடிகளைப் பாதுகாப்பதுவே அரசின் முதல் கடமை. ஏனெனில் ஒரு அரசாங்கம் ஒரு எழுத்தாளனைப்போல் அதீத அளவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ள இயலாது. நல்ல நோக்கம் கருதியே கூட ஒரு புது முயற்சி செய்யினும் அது பிழையாகப் போகுமெனின் அவ்வரசின் கீழுள்ள அனைவரையும் பாதிக்கும்.  அதனால் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களும் தனியேதான் முயற்சி செய்தாக வேண்டும். இதுவே இன்றைய நிலை. அதனைப் போலவே மற்றவர்களும் அவர்கள் வழி நோக்கி உலகை இழுக்கட்டும். உலகம் தன‌க்கான இடத்தை கண்டுகொள்ளட்டும். அந்நிலைப்புள்ளியில் வாழ்வோரை அரசு பாதுகாக்கட்டும்.

Similar Posts

  • |

    ஆரோக்ய நிகேதனம் – தாராசங்கர் பந்த்யோபாத்யாய

    1951 ஆம் ஆண்டில் தாராசங்கர் பந்த்யோபாத்யாய அவர்களால் வங்க மொழியில் எழுதப்பெற்ற நாவல். பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலை தமிழில் த.நா.குமாரசாமி அவர்கள் 1972 ல் மொழிபெயர்த்துள்ளார். இந்திய அரசின் சாகித்திய அகாதெமி மற்றும் மேற்கு வங்க அரசின் ரபீந்திர புரஷ்கார் விருதுகளை வென்ற நாவல். இந்நாவல் ஜீவன் மாஷாய் என்னும் வைத்தியரின் நினைவோட்டத்தின் வாயிலாக சொல்லப்படுகிறது. மூன்று தலைமுறைகளாக ஆயுர்வேத சிகிச்சை செய்துவரும் ஜீவன் மாஷாயின் வாழ்வு மற்றும் ஆயுர்வேத மருத்துவம் ஆங்கில மருத்துவ‌த்தின் வருகையினால்…

  • | | |

    இந்திய உளவுத்துறை RAW எவ்வாறு இயங்குகிறது – குகன்

    ஒவ்வொரு நாட்டிற்கும் ராணுவ பாதுகாப்பு எத்தனை முக்கியமானதோ அந்த அளவிற்கு உளவு நிறுவனமும் முக்கியமானது. உளவு நிறுவனங்களின் தேவை முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களுக்குப் பின்னர் அதீத முக்கியத்துவம் பெற்றதனை குறைந்தபட்ச வரலாற்று அறிதல் கொண்ட எவரும் உணர முடியும். அத்தகைய பணியை செய்யும் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ ஓர் அமைப்பே ரா. ஐபி எனப்படும் உளவு அமைப்பு ஆங்கிலேயர் காலம் முதல் இந்தியாவில் இருந்து வந்தது. சுதந்திர இந்தியாவிலும் அதுவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவுப்…

  • | |

    புத்தகம் 1 : சூதாடி

    ரஷ்ய மொழியில் தஸ்தோயேவ்ஸ்கியால் எழுதப்பெற்று 1867 ல் வெளிவந்த‌ The Gambler நாவலின் தமிழாக்கம். தமிழாக்கம் ரா.கிருஷ்ணையா. இந்நாவலின் மையக் கதாபாத்திரம் Alexei Ivanovich, தன்னுடைய அனுபவங்களை கூறுவது போன்ற நாவல். ரஷ்ய ஜெனரலின் குழந்தைகளுக்கு பாடம் கற்றுத் தரும் ஆசிரியராக வேலை செய்கிறான் Alexei Ivanovich. அவன் ஒருதலையாக‌ ஜெனரலின் சகோதரர் மகள் Polina மீது காதல் கொள்கிறான். அவளுக்கு அவனுடைய காதல் தெரிந்தாலும் அதனை ஏற்காமலும் மறுக்காமலும் அவனுடன் பழகி வருகிறாள். அவளுடைய சிற்றப்பாவாகிய…

  • |

    மஞ்சு விரட்டு

    நான் சென்ற வருடம் (2015) பொங்கல் முடிந்ததும் எழுதிய ஓர் கட்டுரை. இன்றும் அதே நிலைதான். மஞ்சு விரட்டு இப்போதைக்கு இல்லை. முடிவாகிவிட்டது. பொங்கல் சமயத்தில் வழக்கம் போல அனைத்துக் கட்சிகளும், சில சாதி அமைப்புகளும் குரலெழுப்பிவிட்டு தங்களின் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டார்கள்.ஒருவேளை இவ்வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வரும்பொழுதோ அல்லது வேறு ஏதும் அறிக்கை விடுவதற்கு இல்லையெனும்போதோ களத்தில் இவர்களின் குரலைக் கேட்கலாம். பொங்கல் சமயத்திலேயே இப்பதிவை எழுதியிருந்தால் வழக்கம் போல வெற்றுக்கூச்சலாகவே போயிருக்கும்…

  • | | |

    முதல் உலகப்போர் மருதன்

    முதல் உலக‌ப்போர் (1914‍-1918). 1 கோடியே 70 லட்சம் பேர் மரணம்.2 கோடி பேர் காயம். இந்த உலகையே முதல் உலகப்போருக்கு முன் பின் என பிரிக்கும் அளவுக்கு உலக நாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்திய ஓர் போர். பீரங்கி, நச்சு வாயுக்கள் போன்ற உத்திகளைப் பயன்படுத்தி கொத்துக் கொத்தாக மனித உயிர்கள் பறிக்கப்பட்ட முதல் பெரும் போர். ஓரிரு நாட்களில் அல்ல‌து மாதங்களில் முடிந்துவிடும் என்ற எண்ணத்தில்தான் உலக‌ப்போர் தொடங்கியது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. 4 ஆண்டுகள்…

  • Words at Work

    இந்த புத்தகத்தினை தலைப்பினைக்கொண்டு வேலை செய்யும் இடத்தில் சொற்களைக் கையாள்வது எப்படி என்ற எண்ணத்தில் வாசிக்கத்தொடங்கினேன். ஆனால் இந்த புத்தகம் அதைப்பற்றி அல்லாமல் ஒவ்வொரு துறை சார்ந்த இடத்திலும் பயன்பாட்டில் உள்ள வார்த்தைகள், அதற்கு அவர்கள் மொழியிலான பொருள் ஆகியவற்றைப் பற்றி விவரிக்கிறது. மிக எளிய நூலாக இருப்பினும் மிகுந்த சிரத்தையின் ப‌லனாகவே இந்த எளிமை சாத்தியமாயிருக்கிறது. எந்த ஒரு புத்தகத்திலும் கற்றுக்கொள்வதற்கு தக‌வல்கள் உண்டு என்ற என் எண்ணம் மீண்டும் இந்த புத்தகத்தை வாசிக்கும் பொழுது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.