|

Get To The Top – Suhel Seth (புத்தகம் – 1)

Get To The Top – Suhel Seth

இந்திய தொழிலதிபர் சுஹெல் சேத் அவர்களால் எழுதப்பெற்ற சுயமுன்னேற்ற‌ நூல். இந்தப்புத்தகம் பெரும்பாலும் நண்பர்களைப் பெறுவது எவ்வாறு, அவர்களை பேணுவது எவ்வாறு என்பதனை விளக்கும் ஒரு புத்தகம். சுஹெல் தொழிலதிபர் மட்டுமல்லாமல், பத்திரிக்கைகளில் தலையங்கம் எழுதக்கூடியவரும், தொலைக்காட்சித் தொகுப்பாளரும், பேச்சாளரும் கூட. ஆதலால் அவருக்கு இருக்கும் தொடர்புகள் மேல்மட்டத்திலானவையாக இருக்கின்றன. உதாரணமாக அருண் ஜேட்லி, விஜய் மல்லையா, மம்தா பானர்ஜி என. அத்தகைய அவருடைய மேல்தட்டு அனுபவங்களின் நிகழ்வுகளை விவரித்து அவற்றிலிருந்து இப்புத்தகத்திற்கான கருத்துக்களை ஒருங்கிணைத்துள்ளார். ஒரு இந்தியர் அல்லாத வாசகருக்கு இந்த உதாரணங்களில் குறிப்பிடப்படும் நபர்களைப் பற்றிய அறிமுகம் இல்லையெனில் இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள உதாரணங்களின் தீவிரத்தை உள்வாங்கிக்கொள்வது கடினமே.

SUHEL SETH

ஆகச்சிறந்த புத்தகம் என்றெல்லாம் இந்தப் புத்தகம் அல்ல. எளிமையான அனுபவக் கருத்துக்கள். அவருடைய நண்பர்களின் தொடர்புகளை இன்னும் உறுதியாக்கிக்கொள்ள அவருக்கு இந்த நூல் உதவலாம். ஏனெனில் ஆங்காங்கே புகழ் வசனங்கள். எளிய மனிதர்களின் உதாரணங்கள் இந்தபுத்தகத்தில் இல்லையென்றே கூறலாம். இந்தப்புத்தகத்தில் குறிப்பிடப்படும் என்னைக் கவர்ந்த ஒரு கருத்து இதுதான்.

நாம் நம்முடைய கருத்தினை உறுதியாக வெளிப்படுத்த வேண்டும் என்பதே. மற்றவர்கள் எவ்வாறு கருத்து கொண்டிருக்கிறார்கள் என எண்ணி நம்முடைய கருத்தினை மாற்றுவதோ, அல்லது வெளிப்படுத்த வேண்டிய தருணத்தில் மழுப்பலாக வெளிப்படுத்துவதோ நம் ஆளுமையைக் குறைவாகக் காட்டக்கூடும். நாம் நம்முடைய கருத்துக்களை பிற்பாடு மாற்றிக்கொள்ளக் கூடும் என எண்ணி வெளிப்படுத்தாமல் இருப்பதும் நம்முடைய ஆளுமையில் எதிர்மறைத் தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடும். இங்கே கவனிக்க வேண்டியது உறுதியாக கருத்தினை வெளிப்படுத்தலாம் என்பதே, கடுமையாக என்பதல்ல. அக்கருத்தினை நாம் பின்னாளில் மாற்றிக்கொள்ளக் கூடும் என் எண்ண வேண்டியதில்லை. ஏனெனில் அறிவார்ந்தவர்களுக்குத் தெரியும், நாம் நமக்குக் கிடைக்கும் அனுபவங்களிலிருந்தும், பெறும் அறிவிலிருந்துமே நம்முடைய கருத்துக்களை உருவாக்கிக்கொள்கிறோம். அனுபவங்களும், அறிவும் இன்னும் விரிவடையும் பொழுது நம்முடைய கருத்துக்கள் மேலும் உறுதியாகலாம் அல்லது சற்றேனும் மாறலாம் அல்லது முற்றிலுமாக மாறலாம். அதுதானே பரிமாணம். அதனால் தானே குரங்கிலிருந்து மனிதானயிருக்கிறோம். ஒரே கருத்தோடு இருந்திருந்தால் இன்னும் மரத்தில்தான் இருந்திருப்பொம் இல்லையா?

வாசிக்கலாம்.

Similar Posts

  • |

    இந்திய வரலாறு ‍ – ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்

    ஆரியர்கள் வருகை முதலாக இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத அரசு கேரளத்தில் அமைந்தது வரையிலான இந்திய வரலாற்றை மார்க்சிய நோக்கில் விவரிக்கும் நூல். கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் முதலமைச்சரான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்களால் எழுதப்பெற்றது. எழுதப்பெற்ற ஆண்டு 1977. கிட்டத்தட்ட 3500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் நுழையும் ஆரியர்கள் இங்கு வாழ்ந்து வரும் சிந்து சமவெளி மக்களை வென்று தங்கள் ஆட்சியைத் தொடங்குகிறார்கள். அக்காலக் கட்டத்திலேயே ரிக் வேதம் இயற்றப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மெளரியர்கள்,குப்தர்கள்,…

  • | |

    கொரோனா தோல்வி

    கொரோனாவைக் கையாள்வதில் இந்திய அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. இத்தோல்விக்கான முழுப்பொறுப்பும் பாரதிய ஜனதா அரசினையே சாரும். தேர்தல் ஆணையத்திற்கும், இந்தியக் கட்சிகளுக்கும் கணிசமான பங்கும் உண்டு. முதலில் உலக நாடுகளில் முதலாம் கட்ட அலை ஏற்பட்ட போது வெறும் 34 வெளிநாட்டு விமான நிலையங்களைக் கட்டுப்படுத்த முடியாத நாம் 32 லட்சம் சதுர கிலோமீட்டர் கொண்ட நிலப்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என நினைத்தது மகா முட்டாள்தனம். நம் அதிகாரிகள் அப்படித்தான் நினைத்தார்கள். அதுவும் மிகப்பிந்தியே…

  • ரஷ்யப்புரட்சி – என்.ராமகிருஷ்ணன்

    ரஷ்யாவின் ஜார் மன்னர்களின் ஆட்சி புரட்சியின் மூலம் ஒடுக்கப்பட்டு கம்யூனிச அரசு புரட்சியின் வழியாக 1917 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நிகழ்வே ரஷ்யப்புரட்சி. ஒற்றை வரியில் கடந்து சென்றாலும் 1900 களின் ஆரம்பகால ஆண்டுகளிலேயே ஜார் மன்னர்களுக்கு எதிரான கலகங்கள் தொடங்கி அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்று வந்தன. குறிப்பாக பண்ணையடிமை முறைக்கு எதிரான கலகங்கள். இதற்கிடையில் ஆங்காங்கே சில பெயர்களில் சில குழுக்கள் போராட்டங்களை ஒருங்கிணைத்தன. ஆனாலும் அவையெல்லாம் ஒருங்கிணையாமல் நடைபெற்றன. அச்சமயத்தில் மார்க்ஸ் ‍ எங்கல்ஸ்…

  • |

    Work Rules!: Insights from Inside Google

    கூகுள் நிறுவனத்தின் மனித வள மேலாண்மை அதிகாரி லாஸ்லோ போக்கால் எழுதப்பட்ட ஓர் சுய முன்னேற்ற நாவல். பெரும்பாலும் இந்நாவல் மற்ற நிறுவனத்தின் மேலாண்மை அதிகாரிகளை நோக்கியே எழுதப்பட்டிருக்கிறது. ஒரு மேலாண்மை அதிகாரியின் பார்வையில் எப்படியெல்லாம் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நலனைப் பேணலாம் என விளக்குவதே இப்புத்தக்கத்தின் அடிப்படை. பணியாளர் விரும்பும் நிறுவனங்களில் முன்னணியில் இருக்க‌க்கூடிய நிறுவனங்களில் கூகுள் ஒன்று. லாஸ்லோ போக் தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக எப்படி கூகுளை அந்த நிலையை அடைய…

  • |

    மயான காண்டம் – ல‌க்ஷ்மி சரவணகுமார்

    லக்ஷ்மி சரவணகுமாரால் எழுதப்பெற்ற பத்து சிறுகதைகளின் தொகுப்பு. உயிர்மை பதிப்பக வெளியீடு. அஜ்ஜி மயான காண்டம் ஜீஸசின் முத்தம் ஒரு துண்டு வானம் டெய்ஸி Fake அப்பாவும் அம்மாவும் காதலிக்காத கதை கப்பல்காரர் வீடு ஒரு அவசர கடிதம் வள்ளி திருமணம் இவையே அக்கதைகள். மனித வாழ்வின் வெவ்வேறு நிலைகளை வெவ்வேறு மனிதர்களின் வெவ்வேறு நிலைகளில் இருந்து நோக்குபவை என இக்கதைகளை பொதுவாக வரையறுக்கலாம். சிறுகதைகளுக்கான வடிவமைப்புகளுக்காக பொதுவாக அளிக்க்ப்படும் ஒரு விளக்கம், விவரித்து சொல்லப்படும் ஒரு…

  • |

    நெல்சன் மண்டேலா – தா.பாண்டியன்

    தா பாண்டியன் அவர்களால் எழுதப்பட்டது. நெல்சன் மண்டேலா அவர்களின் சிறுவயது முதல் தென்னாப்ரிக்காவில் ஜனநாயகம் மலர்ந்தது வரையிலான காலகட்ட நிகழ்வுகளின் தொகுப்பு. 1918 ஆம் ஆண்டு ஜூலை 18ல் பிறந்த நெல்சன் மண்டேலாவிற்கு அவரது தந்தை இட்ட பெயர் ரோலிலாலா. அவரது பள்ளி ஆசிரியர் இட்டபெயரே நெல்சன். சோசோ இனக்குழுவில் பிறந்த மண்டேலாவின் தந்தை காட்லா ஹென்றி அவ்வினக்குழுவின் தலைவர். அதனால் ஓரளவுக்கு வசதியாகவும், பெயருடனும் வாழ்ந்து வந்தனர். அப்பதவிக்கு அங்கு ஆண்டுவந்த வெள்ளையர்களின் அங்கீகாரம் முக்கியமானது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.