சிங்கப்பூர் இலக்கிய முகாம் ‍ 2016

participants

ஜெயமோகன் சிங்கப்பூரில் உடனுறை எழுத்தாளர் திட்டத்தின் கீழ் இருமாதங்கள் பணியாற்றினார். பள்ளி மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தினை மேம்படுத்தவும், எழுதப் பயிற்சி அளிக்கவுமான ஓர் திட்டம்.

அவர் சிங்கப்பூரில் இருப்பதனால் இந்த வருட இலக்கிய முகாமை சிங்கப்பூரில் நடத்த திட்டமிட்டனர். இரண்டு நாள் நிகழ்வு. செப்டம்பர் 17 மற்றும் 18. 19ம் தேதி கண்டிப்பாக முடித்தாக வேண்டிய பணி எனக்கிருந்தது. வெள்ளிக்கிழமை இரவு பன்னிரண்டு மணி வரை வேலை செய்தேன். முடிக்க முடியவில்லை. செல்வதா இல்லை பணியைத் தொடர்வதா என பெரிய குழப்பம். இருப்பினும் செல்வது என முடிவெடுத்துவிட்டேன். மாலை ஐந்து மணிக்கு நிகழ்வு முடிந்ததும் மீண்டும் வேலையைத் தொடர்ந்து செய்தேன். இரவு பதினோரு மணி வரை. மறுநாள் காலையில் சீக்கிரம் எழுந்து மீண்டும் வேலை செய்தேன். எட்டரைக்கு முடித்துவிட்டு அடித்துப் பிடித்துக்கொண்டு ஓடினேன். இதில் ஆறுதலான விஷயம் என்னவென்றால் நிகழ்ச்சி நடைபெற்ற இடம் எனது வீட்டின் அருகில். சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவு. அப்படி என்னதான் இருந்தது அந்நிகழ்வில்?

மிகச்சிறந்த நிகழ்வு. மிக சிறப்பாக ஒருங்கமைத்திருந்தார்க‌ள். ஆரம்பத்தில் எனக்கு இரண்டு நாள் நிகழ்வென்பதனால் சற்றேனும் சலிப்படைந்து விடுமோ என்ற எண்ணமிருந்தது. ஆனால் முதல்நாள் கம்பராமயணப் பாடல்கள் முடிவடைந்த உடனேயே அந்த எண்ணம் முற்றாக அகன்றது. குறிப்பாக ஜெயமோகன் அவர்கள், அவ்வப்பொழுது இயல்பாக எழும் சோம்பலை இல்லாமலாக்குவதற்காக நகைச்சுவைத்துணுக்குகளை கூறிக்கொண்டே இருந்தார். அவர் மட்டுமல்லாமல் அரங்கசாமி மற்றும் குறிப்பாக ஈரோடு செந்தில் ஆகியோரது நகைச்சுவைத்துணுக்குகளும் நாள் முழுவதையும் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக ஆக்கிக்கொண்டே இருந்தன‌. அத்தோடு இரண்டு நாள் உணவும் மிகச்சிறப்பு. அதில் பாயாசம் உச்சம். அன்னமிட்ட நண்பருக்கு ஆயிரம் நன்றிகள்.

அடுத்து இரண்டு நாட்களின் அறிதல்கள். ஜெயமோகன் கூறுவதுபோல குறைவாகக் கூறி பின்னதை ஊகிக்கவிடுவதாகவே அமைந்தது. இந்த இரண்டு நாட்களிலும் நிகழ்வுகளின் அமர்வுகளிலும், தனிப்பட்ட உரையாடல்களிலும் நமக்கு அறிவு அளிக்கப்பட்டதைவிட அதற்கான வாயில்கள் காட்டப்பட்டன என்றே நான் எண்ணுகிறேன். உதாரணமாக கம்பராமாயணம். அதன் இனிமையின் ஒரு துளி நமக்கு புகட்டப்பட்டது. நாம் மயங்கினோம். அடுத்தது தற்போது கிடைக்கும் பதிப்புகளில் கோவைப்பதிப்பு விளக்கவுரையுடன் மிகச்சிறப்பான ஒன்று என்ற தகவல். அவ்வளவுதான். மற்றவை நம் கையில்.

அது மட்டுமின்றி சிறுகதைகள், கவிதை, வரலாறு, இலக்கியம் எனப் பல தளங்களிலும் விவாதம் நீண்டது. ஆனால் எந்த தருணத்திலும் சலிப்பே தோன்றவில்லை. அத்துனை ஆர்வமாகவும், ஈர்ப்பாகவும் இருந்தது.

Similar Posts

  • ஆசானிடமிருந்து

    அன்புள்ள ராஜேஷ் இப்போது உணர்ச்சிவசப்பட்டு நீதி எங்கே என்பவர்கள் தினகரன் வழக்கோ, தா கிருஷ்ணன் கொலை வழக்கோ என்னாயிற்று என்று கேட்கமாட்டார்கள். சன் டிவி மீது வழக்குப்பதியவே ஏன் இத்தனை நாட்களாயிற்று என்று கேட்கமாட்டார்கள். இப்போது நீதி வென்றது என்பவர்கள் நாளை திமுக காரர்கள் விடுதலைசெய்யப்படும்போது நீதி தேவதை அருள்புரிந்தாள் என்பார்கள். கட்சிசார்பான உணர்ச்சிக்கொந்தளிப்புகளுக்கு உண்மையில் ஒரு பொருளும் இல்லை. அதற்கு அப்பால் சென்று யோசிப்பதே ஒரு சமநிலையை அளிக்கும் .ஆகவேதான் நான் குன்ஹா தீர்ப்பிலும் ஒன்றும்…

  • | |

    Upholding Brotherhood in a Restless World 🌍🤝

    We live in an age of motion—of people, ideas, and identities crossing borders faster than ever before 🚶🏽‍♂️✈️🚢. Yet, paradoxically, this is also an age of fear. Across continents, migrants are viewed with suspicion, difference is politicized, and the old instinct of “Us versus Them” resurfaces 🔥. At moments like this, humanity is tested—not by…

  • விஷ்ணுபுரம் விழா – 2024

    மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு இந்த ஆண்டே நான் முதன் முதலாக விஷ்ணுபுரம் விழாவில் கலந்து கொண்டேன். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தங்களை வாசித்து வருபவன். சிங்கப்பூரில் பணிபுரிவதால் இந்த வருடம் என்னுடைய பயணத்தை விஷ்ணுபுரம் நிகழ்வினை ஒட்டி அமைத்து கலந்து கொண்டேன். மிகச்சிறப்பான நிகழ்வு. நிகழ்வின் நிரல்களுக்கு வெளியே நடைபெற்றவற்றைப் பற்றி மட்டுமே மிக நீண்ட கட்டுரைகளை எழுதலாம். அந்த அளவிற்கு சிறப்பானதொரு நிகழ்வு. அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல. குடி,சிகரெட் இல்லாமல் நடந்த ஓர்…

  • Continental Drift

    நாம் இன்று வசிக்கும் இப்பூமியானது 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஒற்றை நிலமாக இருந்து பின்னர் தொடர்ச்சியான நகருதலின் மூலமாக இன்றைய நிலையை அடைந்ததை விளக்கும் வெக்னரின் ஓர்   எளிய காணொளி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.