மீண்டும் ஆசானுக்கு

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம். மீண்டும் வெண்முகில் நகருக்கு வந்து விட்டேன். ஆம் சில மாதங்களுக்கு முன்னர் வண்ணக்கடல் படிக்கும்போது தினமும் வாசிப்பதனைவிட ஒரே மூச்சாக ஒவ்வொரு புத்தகமாக வெளிவரும்பொழுது வாசிக்கலாம் என்ற எண்ணத்தை அடைந்தேன். அதன் காரணமாக தினசரி வாசிப்பை வெண்முரசில் இருந்து வேறு சில புத்தகங்களுக்கு மாற்றினேன். அதே சமயம் வெண்முரசு அல்லாத தங்களின் பதிவுகளையும், மற்ற புத்தகங்களையும் தொடர்ந்து வாசித்துக்கொண்டே இருந்தேன். மாதங்கள் கடந்தன‌.

முதற்கனல், மழைப்பாடலின் வாசிப்பின் விளைவாக மென்பொருள் துறையில் மிக ஆழமான இடத்தில் வேலை செய்யக்கூடிய இடத்தில் இந்த வாசிப்பனுவத்தின் விளைவாக மிகச் சரியான அல்லது முந்திய எனது சொற்களுக்கு மேலான சொற்களை சமைத்து பேசுவதை இயல்பாக்கிக் கொண்டேன் என்னை அறியாமலே. தினசரி வெண்முரசு வாசிப்பை நிறுத்திய இந்த சில மாதங்களில் அது போல சரியான வார்த்தைகளைக் கொண்டு சரியான தொடர்களை அமைக்கும் வ‌ல்லமை குறைந்தது போல உணரத்தொடங்கினேன். காரணத்தை திரும்பத்திரும்ப சிந்திக்க அது வெண்முரசு எனத் தெரிந்தது.

முன்பொருமுறை நீங்கள் வெண்முரசுவின் தினசரி வாசிப்பும் முக்கியமானது, புத்தக வாசிப்பும் முக்கியமானது எனக் கூறியிருந்தீர்கள். அப்பொழுது அதன் மீது எனக்கு உடன்பாடு எட்டவில்லை. ஆனால் இப்போது உண்மையாகவே கூறுகிறேன். வெண்முரசு நிகழ்காலத்தின் குரல், எனக்கான செய்தி, அற‌ம். வரும் ஒவ்வொரு பாத்திரமும் ஏதோ எனக்கான ஒரு செய்தியை உரைக்கிறது, இன்றைய விறலி உட்பட. என்னுடைய தினசரி வாழ்வினை மகிழ்ச்சியானதாக்க, மிகச்சிறந்த வார்த்தைகளை அமைக்க அது எனக்கு தினமும் உதவுகிறது. மீண்டும் என்னுடைய தினசரித் திட்டத்தில் வெண்முரசை இணைத்து விட்டேன். இம்முறை நான் இருவனாக‌, ஒருவன் வண்ணக்கடலில் விடுபட்ட அத்தியாயத்திலிருந்து, மற்றொருவன் இங்கே வெண்முகில் நகரிலிருந்து. ஒருநாள் இருவரையும் ஒன்றாக்கி விடுவேன். நான் சோம்பேறித்தனத்தால் தினசரி வாசிப்பை நிறுத்தவில்லை. திட்டமிட்டே நிறுத்தினேன். அதனால் என்னால் கண்டிப்பாக மீண்டும் விடுபட்ட அனைத்தையும் வாசிக்க முடியும் என்றே எண்ணுகிறேன்.

ஒரு தொழில்நுட்பத்தின் சரியான பயன் அதனைப் பற்றி முற்றிலும் அறிதலில்லாத ஒருவருக்கும் உபயோகப்படவேண்டும் என்பதே என்று எங்கோ படித்த நியாபகம். ஆனால் எனக்கு வெண்முரசு மேனேஜ்மென்ட் மீட்டிங்கில் என்னை சிறப்பாக வழி நடத்துகிறது. தங்களுக்கு உளமாற நன்றி.

Similar Posts

  • 2019 – ஓர் மீள்பார்வை

    2019 ஆண்டில் மூன்று செயல்பாடுகளை திட்டமிட்டிருந்தேன். அதனை என்னுடைய தளத்திலும் பதிவிட்டும் இருந்தேன் (http://www.mahiznan.com/2019/01/06/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e2%80%8d-2019/) . வெளிப்படையாக பதிவிட்ட‌தற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று, வருட இறுதியில் அவ்வாண்டில் திட்டமிட்டவற்றில் எவ்வளவை முடிக்க முடிந்திருக்கிறது, திட்டமிடுதலுக்கும் அடைவதற்குமான இடைவெளி எவ்வளவு இருக்கிறது என்பதனை துல்லியமாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதுதான். 2019 ல் திட்டமிடப்பட்ட மூன்று செயல்பாடுகள். 50 புத்தகங்களினை வாசித்தல் 50 கட்டுரைகளைப் பதிவிடுதல் தெலுங்கு மொழியினை பேசவும் எழுதவும் வாசிக்கவும் செய்வது திட்டமிட்ட 50 புத்தகங்களில் 7…

  • |

    தரம் தாழும் செய்திகள்

      செய்திகளை செய்தி சானல்களின் வழியாக அறிந்து கொள்ள முயலக்கூடாது என்பது நான் 24 மணி நேர செய்தி சானல்கள் வந்த சில காலங்களிலேயே எடுத்த முடிவு. இருப்பினும் கலைஞர் மரணித்த நாளின் நேரலை நிகழ்வுகளைப் காண்பதற்காக‌ செய்தி சானல்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். காலை சில மணி நேரங்களுக்கு வெறும் பின்னணி இசையுடன் மட்டும் ராஜாஜி ஹாலில் நடைபெற்ற நிகழ்வுகள் ஒளிபரப்பப்பட்டன. சில மணி நேரங்களிலேயே அனைத்து செய்திச்சேனல்களிலும் நெறியாளரும், பத்திரிக்கையாள‌ர், அரசியல் செயல்பாட்டாளர், சமூக ஆர்வலர் என்ற…

  • |

    கோடா டிங்கீ – தேசாரு கடற்கரை

    கோடா டிங்கீ மலேசியாவின் ஜோகோர் மாகாணாத்திலுள்ள ஓர் சுற்றுலாத் தளம். முக்கியமான இடம் அங்குள்ள அருவி. சமீபத்தில் அங்கு சென்றிருந்தேன். இயற்கை எழில் மிகுந்த ஓர் இடம். சிறப்பான முறையில் பராமரித்து வருகிறார்கள். இந்த கோடையிலும் அங்கு தண்ணீர் நன்றாக வருகிறது. மிகவும் சுவையான அருவி நீர். இனிப்பானதாக இருக்கிறது. அருவி வழிந்தோடும் வழியெங்கும் மக்கள் ஆங்காங்கே அமர்ந்து நீரில் விளையாடுகிறார்கள். ஏனென்றால் சில முக்கியமான இடங்களுக்கு மட்டுமே நுழைவுக்கட்டணம். மற்ற இடங்களில் இல்லை. பெரும்பாலும் அங்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.