தமிழ் மலாய் சொல் அரங்கம்

மலேசிய ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் க.கந்தசாமி அவர்களால் எழுதப்பெற்றுள்ள நூல்.tamil-maly

மலாய் மொழியில் வழங்கப்படும் தமிழ்ச் சொற்களைப் பற்றிய ஆய்வு நூல் இது. மொத்தம் 164 தமிழ்சொற்கள் நேரடியாகவும், 500 க்கும் மேலான‌ சொற்கள் 5 முதல் 10 விழுக்காடு திரிதலோடு மலாய் மொழியில் இன்றும் நடைமுறையில் இருப்பதை விளக்கியிருக்கின்றார். அதற்காகவே வணக்கங்கள்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னே வணிகத்தின் பொருட்டு கடல் கடந்து சென்ற தமிழர்களால் மலாய் மொழியின் இயல்பிலே கலந்துவிட்ட பல வார்த்தைகளுள் இயன்றவற்றையெல்லாம் ஆய்வு செய்து விளக்கியிருக்கிறார்.

தமிழ் மீது தீராக்காதல் கொண்டவர்களுக்கு இந்நூல் அக்காதலை மென்மேலும் அதிகரிக்கச் செய்யுமென்பதில் ஐயமில்லை.

நூலின் நோக்கமும், தமிழ் மலாய் வார்த்தைகளும் மட்டும் போதுமென்றால் முன்னுரையையும், கடைசி மூன்று பக்கங்களையும் படித்தால் போதும். ஆனால் இந்நூலின் சிறப்பே  மலாய் மொழியில் உள்ள தமிழ்வார்த்தைகளைக் குறிப்பிடும்பொழுது அந்த தமிழ் வார்த்தை தமிழ் இலக்கியங்களில், நடைமுறை வாழ்க்கையில் எவ்வாறு கலந்திருக்கிறது என்பதையும் விளக்கியிருப்பதே.

மேலும் வார்த்தைகளோடு நின்றுவிடாமல் அவ்வார்த்தை தொடர்பான ஒரு வரலாற்று நிகழ்வினையோ, இலக்கிய நிகழ்வினையோ கூறியிருப்பது நூலின் நோக்கத்தோடு பொருந்துவதாக இல்லாமல் போனாலும், படிப்போர் நெஞ்சில் தொய்வு ஏற்படாவண்ணம் சுவாரசியமாக கொண்டு செல்ல உதவுகிறது.

ஆக மொத்தத்தில்

 மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை.
திறமான புலமையெனில் வெளிநாட்டார்
அதை வணங்கச்செய்தல் வேண்டும்”

என்ற பாரதியின் வரிக்கான செயல் வடிவத்தின் முயற்சி இது.

Similar Posts

  • கேள்வியும் பதிலும்

    நம்மிடம் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் நம்மிடம் பதில் இருக்கிறது. அது சரியானதா இல்லையா என்பதை விட என்னால் பதிலளிக்க முடிகிறது என்பதனையே நம் திறமையாக எண்ணுகிறோம். நமக்குத் தெரிந்த தகவல்களின் அடிப்படையிலோ, கேள்வி ஞானத்தின் அடிப்படையிலோ இப்போதைய கேள்விக்கான பதிலை உருவாக்குகிறோம். பின்னர் அதை மெய்ப்பிப்பதற்கான ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் நம் மனம் இறங்கி விடுகிறது. கற்றலின் முதல் நிலையென்பதே நமக்குத் தெரியாத ஒன்றை தெரியாது என ஒப்புக் கொள்வதிலிருந்தே தொடங்குகிறது. நாம் ஒருவருடைய கேள்விக்கு பதிலளிக்கும்போதே…

  • ஜெயமோகன் அவர்களிடமிருந்து

    மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நான் எழுதிய மடலுக்கான ஜெயமோகன் அவர்களுடைய‌ பதிலை இங்கே பதிவிடுகிறேன். நான் படித்த சில புத்தகங்கள் வாயிலாகவே என்னையறியாமல் வந்த தலைக்கனத்தின் மீது மீண்டும் ஒரு குட்டு. நான் செப்பனிடப்படுகிறேன். அன்புள்ள மகிழ்நன் உங்கள் முந்தைய கதைக்கான என் பதிவுக்கு நீங்கள் இப்படி எதிர்வினையாற்றியிருக்கிறீர்கள் என்றால் வருந்துகிறேன். நீங்கள் உங்கள் இடத்தை, நிலையை சற்றும் பரிசீலனைசெய்ய தயாராக இல்லை என்றுதான் அர்த்தம். எழுத்தாளர்களின் இயல்பு அது அல்ல. உங்கள் கடிதம் அதிலுள்ள கோபம்…

  • ஆசானுக்கு மீண்டும் ஒரு கடித‌ம்

    மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு சமீபத்திய ஆண்டுகளில் அதிகம் வாசிக்கத் தொடங்கிய பின்னர் என் வாழ்க்கை முறை இத்தனை மாற்றங்களை சந்தித்துள்ளதை எண்ணி வியக்காமல் இருக்க முடிவதில்லை. ஏதோ ஒரு கணத்தில் வாசிப்பால் கவரப்பட்டு தீவிர வாசிப்புக்கு ஆளான நாள் முதல் என்னுள் நிகழும் இந்த மாற்றங்களை உள்ளும் புறமும் வேறோருவனாக இருந்துகொண்டு கவனித்துக் கொண்டே இருக்கிறேன். என்னால் தினமும் காலை ஐந்து மணிக்கு எழ முடிகிறது. தினமும் என் சொந்த திட்டங்களுக்காக 5 மணி நேரங்களை ஒதுக்க…

  • அழிக்கப்பட‌ வேண்டியது சாதியா?

    கடந்த 10,20 ஆண்டுகளாகவே நாம் இதனை கேள்விப்பட்டிருக்கக்கூடும். “சாதிகள் அழிக்கப்பட வேண்டும்” என்று. அனைவரும் இதே கருத்தை மீண்டும் மீண்டும் கேட்பதனால் நாம் நம்மை சாதிக்கு எதிரானவராக காட்டிக்கொள்ள முயல்கிறோம். (எல்லோரும் அல்ல). நாம் உயர் வகுப்பினராகவோ, நடுத்தர வகுப்பினராகவோ, பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவோ குறிப்பிடப் படலாம். முதலில் நாம் ஒன்றை தெளிவுபடுத்திக் கொள்வோம். நாம் சாதிக்கு எதிரானவரா அல்லது சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரானவரா?

  • |

    தரம் தாழும் செய்திகள்

      செய்திகளை செய்தி சானல்களின் வழியாக அறிந்து கொள்ள முயலக்கூடாது என்பது நான் 24 மணி நேர செய்தி சானல்கள் வந்த சில காலங்களிலேயே எடுத்த முடிவு. இருப்பினும் கலைஞர் மரணித்த நாளின் நேரலை நிகழ்வுகளைப் காண்பதற்காக‌ செய்தி சானல்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். காலை சில மணி நேரங்களுக்கு வெறும் பின்னணி இசையுடன் மட்டும் ராஜாஜி ஹாலில் நடைபெற்ற நிகழ்வுகள் ஒளிபரப்பப்பட்டன. சில மணி நேரங்களிலேயே அனைத்து செய்திச்சேனல்களிலும் நெறியாளரும், பத்திரிக்கையாள‌ர், அரசியல் செயல்பாட்டாளர், சமூக ஆர்வலர் என்ற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.