பொருளாதாரம் பற்றிய புரிதல்
பொருளாதாரம் பற்றிய புரிதலுக்கான எளிமையான ஒரு காணொளி.
எசு.எசு.அருணகிரி நாதர் என்பவரால் 2007 ல் எழுதப்பெற்ற அறிவுரை நூல். பெரும்பாலும் வெளிப்படையான அறிவுரைகளின் தொகுப்பு. ஆசிரியரைப்பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் தன்னுடைய வயதான காலகட்டத்தில் எழுதியிருப்பதாகவே நூல் அமைப்பு உள்ளது. பொறாமை, அன்பு,காமம் போன்ற பல்வேறு தலைப்புகளில் மனிதர்களுக்கு அறிவுறை கூறுகின்றார். பெரும்பாலான அறிவுரைகளில் ஓ மனிதனே! என ஒட்டுமொத்த மனிதகுலம் நோக்கி தன்னுடைய அனுபவத்தை அறிவுரையாகத் தருகிறார். இதனை நாம் வயது முதிர்ந்த பல்வேறு பெரியவர்களிடம் கேட்கலாம். அப்பெரியவர்களின் சொற்கள் நூலாகியிருக்கிறது. ஒட்டுமொத்தமும் வெளிப்படையான…
முன்பொருமுறை இந்தியாவின் முன்னாள் திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா அவர்களிடம் ஒரு பேட்டியின் போது ஒரு கேள்வி கேட்கப்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளால் உலகின் ஆதிக்கசக்தியாக மாற இயலுமா? அதற்கு அவர் அளித்த பதில் இப்போதைய காலகட்டத்தில் தன் மக்கள் தொகையில் பாதி மக்களின் உழைப்பை உபயோகப்படுத்தாத ஒரு நாட்டிற்கு அது சாத்தியமில்லை என்பது. சாத்தியமுள்ள மக்களின் உழைப்பாற்றலை உபயோகிக்காமல் இருப்பது ஒரு தேசத்திற்கு இழப்பு என்பது அவரது கருத்து. அக்கண்ணோட்டத்தில் பார்க்கும்பொழுது இந்தியாவில் பெண்களின்…
நீண்ட நாட்களாக கேள்விப்பட்டுக்கொண்டு இருந்த, ஆனால் வாசித்திராத ஒரு நாவல். ஜெயகாந்தன் அவர்களால் எழுதப்பெற்று தொடர்கதையாக வெளிவந்தது. கதை நாயகி கங்கா பாலியல் ரீதியாகப் எதிர்பாராமல் பாதிக்கப்படுகிறாள். அதன் காரணமாக அவள் வாழ்வில் எதிர்கொள்ளும் நிகழ்வுகளே நாவலின் சுருக்கம். கங்கா முற்போக்கிற்கும், பிற்போக்கிற்கும் இடையில் அல்லாடும் ஒரு பெண். இந்நாவல் வெளிவந்தது 1970. பெண் கல்வி, வேலைக்கு செல்வது தொடர்பாக தீவிர விவாதங்கள் நடைபெற்ற கால கட்டம் அது. ஒரு தரப்பில் பெண் கல்வி கற்கச் செல்வதும்,…
இன்றைய இந்தியக்குடும்பங்களில் எத்தனை குடும்பங்கள் மருந்துப்பொருட்கள் வாங்காத குடும்பங்கள்? 5 விழுக்காட்டிற்கும் குறைவு. குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் அதிக அளவிலான மருந்து மாத்திரைகள் வாங்கப்படுகின்றன. இந்தியர்களின் சராசரி ஆயுள் உயர்ந்திருந்தாலும், பெரும்பாலானோர் தன் வாழ்நாளை ஏதாவது ஒரு நோயுடன் கழிக்கின்றனர். வயது குறைந்தோறும் பல நோய்களுக்கு ஆளாகின்றனர்.40 வயது உடையவர்களுக்கு சர்க்கரை நோய் வருவது இயல்பாகி விட்டிருக்கிறது. மருந்து மாத்திரைகள் இல்லாத வாழ்வென்பது இல்லாது போனது. இவையெல்லாம்தான் நவீன இந்தியா. இப்போதைய பிரச்சினை ஒவ்வொரு குடும்பத்திற்குமான மருத்துவச்செலவு. மாதந்தோறும்…
மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நான் எழுதிய மடலுக்கான ஜெயமோகன் அவர்களுடைய பதிலை இங்கே பதிவிடுகிறேன். நான் படித்த சில புத்தகங்கள் வாயிலாகவே என்னையறியாமல் வந்த தலைக்கனத்தின் மீது மீண்டும் ஒரு குட்டு. நான் செப்பனிடப்படுகிறேன். அன்புள்ள மகிழ்நன் உங்கள் முந்தைய கதைக்கான என் பதிவுக்கு நீங்கள் இப்படி எதிர்வினையாற்றியிருக்கிறீர்கள் என்றால் வருந்துகிறேன். நீங்கள் உங்கள் இடத்தை, நிலையை சற்றும் பரிசீலனைசெய்ய தயாராக இல்லை என்றுதான் அர்த்தம். எழுத்தாளர்களின் இயல்பு அது அல்ல. உங்கள் கடிதம் அதிலுள்ள கோபம்…
பெரும்பாலும் அதீத கேளிக்கைகள் நடைபெறும் நிகழ்வுகளுக்கு செல்லும் வழக்கம் இல்லாத நான் சமீபத்திய காலங்களில் அத்தகைய நிகழ்வுகளுக்குச் செல்கிறேன். அங்கே நான் கண்ட சில கேளிக்கை நிகழ்வுகள் சென்று வந்த சில நாட்களுக்குப் பின்னரும் என் மனதில் நீடித்துக்கொண்டே இருந்தது, முற்றிலும் கேளிக்கைக்காகவே இத்தனை வளம் வீணடிக்கப்படுகிறதே என. உதாரணமாக ஓர் மிகப்பிரமாண்டமான செயற்கை நீரூற்று. அங்கே அது கண்டிப்பாக தேவையில்லைதான். அதனைக் காண்பதனைத்தவிர வேறொன்றும் எவரும் எதுவும் செய்யவில்லை.மிக மோசமான நிலையில் வாழும் மக்களின் வாழ்க்கையினை…