அறம் – ஜெயமோகன்

உண்மை மனிதர்களின் கதைகள்.

ஜெயமோகன் அவர்களால் எழுதப்பட்டது. வம்சி பதிப்பக வெளியீடு.aram

ஒரு சில நூல்களின் மேல் நம் கருத்தையோ, எண்ணத்தையோ வைப்பதற்கு குறைந்த பட்ச த‌குதி என்ற ஒன்று எப்போதும் தேவை என்று நினைப்பவன் நான். இதனை எழுதும் இந்த வேளையில் அத்தகுதி இல்லாதவனாகவே உணர்கிறேன், இருக்கிறேன். ஆதலால் இந்த நூலைப் பற்றி எந்த பார்வையையும் நான் வைக்கமாட்டேன், இப்போதைக்கு.

ஆனால் காரணமில்லாமல் ஒரு எழுத்தின் வழியாக மட்டுமே என்னை அழ வைத்த நூல், இது. இந்நுலின் வாயிலாக நான் அடைந்த உணர்வுகளை, திறப்பை விளக்க இயலாத நிலையிலேயே இருக்கின்றேன். இக்கதையோடு நிறுத்திவிட வேண்டுமென்றே எல்லாக் கதைகளையும் வாசித்துவிட்டேன். இத்தனை விரைவாக, தொடர்ச்சியாக‌ ஒரு நூலை நான் இதுவரை வாசித்தது இல்லை. இந்த நிலையிலிருந்து நான் மீண்டு வர சில காலம் பிடிக்கும் என்றே நினைக்கிறேன். வாசியுங்கள், வாசியுங்கள். கண்டிப்பாக வாசியுங்கள்.

Similar Posts

  • | |

    மாதொருபாகன்

    மாதொருபாகன் நாவலை முன்வைத்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று அதன் விளைவாக எழுத்தாளர் பெருமாள் முருகன் தன் எழுத்துக்களை திரும்பப் பெற்று விட்டார். இனிமேல் தான் எழுத‌ப்போவதில்லை எனவும் தான் எழுதிய அனைத்து நாவல்களையும் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் அறிவித்து விட்டார். எதிர்ப்பாளர்கள் மறுப்பை வெளிப்படுத்திய விதம் முற்றிலும் தவறு. இதில் மாற்றுக்கருத்து கிடையாது. எதிர்ப்பாளர்கள், மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் சொன்னபடி பதிலுக்கு ஒரு மறு நாவலையோ அல்லது விளக்கவுரையோ எழுதி கடுமையாக எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கலாம். அதனைவிடுத்து மூன்றாம்…

  • |

    செங்கிஸ்கான் – முகில்

    ஆங்காங்கே சிதறிக்கிடந்த மங்கோலிய இனக்குழுக்களை ஒன்றினைத்த மாவீரன் செங்கிஸ்கான். அலெக்ஸாண்டரின் பேரரசைவிட நான்கு மடங்கு பெரிய மங்கோலியப் பேரரசை நிறுவியவர். அவரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது முகிலின் செங்கிஸ்கான். இப்புத்தகம் செங்கிஸ்கானுடைய தாயார் மற்றோர் இனக்குழுவால் கவரப்படுவதிலிருந்து துவங்கி செங்கிஸ்கானுடைய வாரிசுகளால் எவ்வாறு மங்கோலிய பேரரசு பிரிக்கப்பட்டு, வலுவிழக்கத் தொடங்கியது என்பது வரை விவரிக்கப்பட்டுள்ளது. டெஜிமுன் என்னும் இயற்பெயர் கொண்ட செங்கிஸ்கான் அனைத்து மங்கோலிய இனங்களையும் வென்று, சீனாவையும் வென்ற பின்னரே செங்கிஸ்கான் என பட்டம் ஏற்றிருக்கிறார்….

  • |

    வாசிப்பில்

    தற்போது இந்த மூன்று புத்தகங்களையும் ஒரு சேர வாசித்து வருகிறேன். 1. இந்துத்துவத்தின் பன்முகங்கள் 2. Adolf Hitler: A Life From Beginning to End 3. Pride and Prejudice மூன்று விதமான புத்தகங்கள் ஒருசேர…

  • |

    முத்துக்கள் பத்து – கு.அழகிரிசாமி

    அழகிரிசாமி அவர்களின் பத்து கதைகளை தொகுத்து அம்ருதா பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள சிறுகதை நூல். தொகுத்தவர் திலகவதி. ராஜா வந்திருக்கிறார்,அக்கினிக் கவசம்,திரிபுரம்,புன்னகை,புது உலகம்,தியாகம்,தரிசனம்,முருங்கைமர மோகினி,மனப்பால், சிறுமைக்கதை ஆகிய பத்துக்கதைகளை தேர்வு செய்துள்ளார். இதில் ராஜா வந்திருக்கிறார் தமிழக பள்ளிகளில் பாடத்திட்டமாக உள்ள கதை. பெரும்பாலானவர்கள் படித்திருக்கும் வாய்ப்பு உண்டு. மிக அழகாக ஓர் ஏழைக்குடும்பத்தின் சித்திரம் வெகு இயல்பாக அக்கதையினூடே ஓடுவது அக்கதையில் நான் மிகவும் ரசித்த ஒன்று. நான் மிகவும் ரசித்த மற்ற கதைகள் முருங்கை மர…

  • மூன்றாம் உலகப்போர் – வைரமுத்து

    கவிஞர் வைரமுத்துவினால் வரையப்பெற்ற நூல். எளிய கதைக்களத்தின் வழியே இன்றைய சூழ்நிலை அழிவுகளை எடுத்தியம்பும் நூல். எமிலி, சின்னப்பாண்டி எனக் கடல் கடந்த காதலும் உண்டு. கருத்தமாயி என நாம் அறிந்த நம்மோடு வாழும் ஒரு பாமர விவசாயியும் உண்டு. பாத்திரங்களின் ஊடே பாத்திரமாக வைரமுத்துவும் உண்டு. சூழ்நிலை தொடர்பான பொது அறிவுத் தகவல்களும் உண்டு. சூழல் தொடர்பான நம் மனப்பாங்கில் சம்மட்டியாய் அடிக்கும் எளிய காவியம் இந்த மூன்றாம் உலகப்போர். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.