Gambian Dalasi

காம்பியா நாட்டின் பணம் காம்பியன் டாலசி பற்றிய சில தகவல்கள்.

காம்பியா இங்கிலாந்து பிரிட்டீஷாரால் ஆளப்பட்ட ஒரு தேசம்.1965 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ல் சுதந்திரம் பெற்றது.சுதந்திரத்திற்கு பின்னர் 1971 ஆம் ஆண்டுவரை காம்பியா இங்கிலாந்து அரசின் பிரிட்டீஷ் வெஸ்ட் ஆப்ரிக்க பவுண்டையே (British West African pound) உபயோகித்து வந்தது.

இந்த (British West African pound) பிரிட்டீஷ் வெஸ்ட் ஆப்ரிக்க பவுண்ட் காம்பியா மட்டுமல்லாது பிரிட்டீஷ் கோஸ்ட் கார்டு (தற்போதைய கானா), நைஜீரியா, சியரா லியோன் போன்ற பிரிட்டீஷ் காலனி தேசங்களிலும் உபயோகப்படுத்தப்பட்டது.

1971 ஆம் ஆண்டு காம்பியா இங்கிலாந்தின் ஆப்ரிக்க பவுண்டை ஒரு பவுண்ட் ஐந்து டாலசிகள் என மாற்ற அனுமதித்து புதிய நோட்டுக்களை அறிமுகம் செய்தது.

ஒர் டாலசி என்பது 100 புடுட்களாக பிரிக்கப்படும்.முதலில் 1,5,10,25,50 புடுட் மற்றும் 1 டாலசி நாணயங்களும் 1,5,10,25,50,100 டாலசி நோட்டுக்களும் அறிமுகப்படுத்தபட்டன.

முதன் முதலாக அச்சடிக்கப்பட்ட நோட்டுக்களில் அந்நாட்டின் அதிபர் தவ்டா ஜவராவின் புகைப்படம் இடம் பெற்றது.1 டாலசி நோட்டுக்கள் 1987க்குப் பின்னர் நிறுத்தப்பட்டது.

1987,1998,1996,2006 என பல முறை நோட்டுக்களின் வடிவமைப்பும் பாதுகாப்பும் மாற்றம் செய்யப்பட்டன.இதன் சர்வதேச குறியீடு GMD.
அந்நாட்டு central bank of gambia நிர்வாகம் செய்கிறது

Similar Posts

  • | | | |

    இந்தியாவில் முகலாயர்கள் – 2

    முகலாயர்களின் ஆட்சியில் இந்தியாவில் ஏற்பட்ட கலாச்சார பாதகங்கள், பொருளாதார பாதகங்கள் பல இருப்பினும் அவர்களால் ஏற்பட்ட சில சமூக நன்மைகளும் உண்டு. முகலாய சாம்ராஜ்யத்தின் போதே இந்தியா நிர்வாக ரீதியில் இன்றைய‌ ஒருங்கிணைந்த வடிவை அடைந்தது. அதற்கு முன்புவரை வெவ்வேறு பகுதிகளும் வெவ்வேறு நிலச்சுவான்தாரர்களாலும், குறு மன்னர்களாலும் ஆளப்பட்டு வந்தது. முகலாயர்களே அவர்களை வென்று ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர். முகலாயர்களைத் தொடர்ந்து ஆங்கிலேயர்கள் அவ்வொருங்கிணைக்கும் பணியினையே செய்தனர். அவர்கள் இவற்றையெல்லாம் இந்தியா என்னும் தேசத்தை உருவாக்க…

  • டொலென்டினோ ஒப்பந்தம்

    டொலென்டினோ அமைதி ஒப்பந்தம் என்பது பிப்ரவரி 19, 1797 ல் நெப்போலியனால் ஆளப்பட்ட புரட்சிகர பிரான்ஸிற்கும் அப்போதைய போப்பால் ஆளப்பட்ட பப்பல் தேசத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட அமைதி ஒப்பந்தம் ஆகும். அமைதி ஒப்பந்தம் எனக்கூறப்பட்டாலும் இது பப்பல் நாடுகளுக்கு வேறு வழி இல்லாத ஒரு நிலையிலேயே கையெழுத்தானது. நெப்போலியனின் புரட்சிகளின் விளைவாக ஏற்பட்ட போர் வெற்றிகளைத் தொடர்ந்து ஆஸ்திரியா,ஆர்கோலா போன்ற நாடுகள் நெப்போலியனின் கீழ் வந்தன. அதனைத் தொடர்ந்து வடக்கு இத்தாலியில் நெப்போலியனுக்கு எதிரியே இல்லாத ஒரு…

  • |

    தேவாரம் – திருநாவுக்கரசர்

    நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்; நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்; ஏமாப்போம்; பிணி அறியோம், பணிவோம் அல்லோம்; இன்பமே எந்நாளும், துன்பமில்லை.   பொருள்: எம்பெருமான், பெம்மான், பொன்னர் மேனியன் இருக்கும் போது நாம் யாருக்கும் குடி அல்ல; அதாவது யாரும் எம்மைக் கட்டுப்படுத்தவோ, அத்து இடவோ முடியாது. நமனுக்கு அஞ்சமாட்டோம். அதாவது நமன்(யமதருமன்) எம்மிடத்து வரவே மாட்டார் என்பது இல்லை. எமன் வருவார். ஆயினும் யாம் அஞ்சமாட்டோம். எமக்கு மரணத்தைக் கண்டு அச்சமில்லை. சாகத் தயார்….

  • லிவ்ரே டூர்னாய்ஸ்

    லிவ்ரே டூர்னாய்ஸ் என்பது 1800 களின் பிற்பகுதியில் பிரான்சில் உபயோகப்படுத்தப்பட்ட பணமாகும். இது பிரான்சின் டூர்னாய்ன் மாகாணத்தில் உபயோகப்படுத்தப்பட்டது. இரண்டாம் பிலிப் மன்னன் இம்மாகாணத்தைக் கைப்பற்றியதும் அதுவரை புழக்கத்திலிருந்த லிவ்ரே பாரிசிஸிற்கு பதில் லிவ்ரே டூர்னாய்ஸை அதிகாரப்பூர்வ பணமாக அறிவித்தார். இருப்பினும் 1667 வரை லிவ்ரே பாரிசிஸும் புழக்கத்தில் இருந்தது. ஒரு லிவ்ரே ரூர்னாய்ஸ் என்பது 20 சூஸ்களாகவும் ஒரு சூஸ் என்பது 12 டினையர்ஸாகவும் பகுக்கப்படும். கடைசியாக 1720 ல் அச்சடிக்கப்பட்ட நோட்டுக்கள் வரை லிவ்ரே…

  • Parliment of Great Britain

    House of Common & House of Lords என்பவை இங்கிலாந்தின் பாராளுமன்றத்தின் இரு அவைகள் ஆகும். இந்திய அரசியலமைப்பும் இங்கிலாந்து அரசியலமைப்பைக் கொண்டே வடிவமைக்கப்பட்டது. இங்கிலாந்தின் பாரளுமன்றம் பற்றிய சில தகவல்கள். இங்கிலாந்து பாரளுமன்றம் House of Common & House of Lords எனும் இரு அவைகளால் நிர்ணயிக்கப்படுகிறது.House of Common எனும் அவை 650 உறுப்பினர்களைக் கொண்டது. அனைத்து உறுப்பினர்களும் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படுகின்றனர். 650 உறுப்பினர்களில் 533 உறுப்பினர்கள் இங்கிலாந்தில் இருந்தும் 40 உறுப்பினர்கள் வேல்ஸில் இருந்தும் 59 உறுப்பினர்கள் ஸ்காட்லாந்தில் இருந்தும், 18 உறுப்பினர்கள் வடக்கு…

  • | | |

    சட்டத்தை நிறைவேற்றுபவர்களின் ஆட்சி

    தமிழக,இந்திய‌ அரசியல் தொடர்பான எந்த ஒரு நிகழ்வையும் வரலாற்றுத்தகவல்களோடு அணுகவேண்டும், அன்றாட‌ வெற்று அரசியல் கூப்பாடுகளுக்கு செவி மடுக்கக்கூடாது என்ற நினைப்பு எனக்கு எப்பொழுதும் உண்டு. அதனால் பெரும்பாலான‌ நிகழ்கால அரசியல் விவாதங்களில் என்னுடைய கவனத்தை முற்றிலுமாக நான் தவிர்த்து விடுவதுண்டு. கடந்த ஒரு மாதங்களில் ஏதேனும் ஓர் ஊடகத்தில் வெளிவந்த விவாதங்களை ஒட்டுமொத்தமாக தொகுத்துப் பாருங்கள். அவையெல்லாம் வெற்றுக் குப்பைகள், அன்றன்றைய சொறிதலுக்கு மட்டுமேயானவை என்பது தெரியும். அதன் காரணமாகவே இந்த வெற்று நுரை கொப்புளிக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.