பெரியம்மை என்னும் உயிர்கொல்லி

இந்த நோயின் காரணமாக 1700 களின் பிற்பாதியில் ஐரோப்பாவில் மட்டும் 4 லட்சம் மக்கள் வருடத்திற்கு மாண்டனர். 20 ஆம் நூற்றாண்டில் 30 முதல் 50 கோடி மக்களின் மரணத்திற்கும் இந்த நோய் காரணமாக அமைந்தது. அந்நோய் smallpox எனப்படும் பெரியம்மை.

ஆரம்பகாலத்தில் இந்நோய் தாக்கினாலே மரணம் என்ற நிலை இருந்தது. ஆரம்பத்தில் அரிப்பு, காய்ச்சல் எனத்தொடங்கும் இந்நோய் கிட்டத்தட்ட 12 நாட்களில் உயிரைக் குடித்துவிடும்.இந்நோய் Variola Major மற்றும் Variola Minor என்னும் இருவகை கிருமிகளால் தோன்றுகிறது. Variola Major தொற்று ஏற்பட்டவர்களில் 30 முதல் 35 விழுக்காடு மக்கள் மாண்டனர். Variola Minor தொற்றினால் மாண்டவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அது முகத்திலும் உடம்பிலும் அழியாத் தழும்புகளை ஏற்படுத்தியது. Variola Major தொற்று ஏற்பட்டு பிழைத்தவர்கள் உடம்பெங்கும் மிக அதிக அளவில் தழும்புகள் ஏற்பட்டன. நாம் இன்றும் கூட உடம்பெங்கும் அம்மைத் தழும்பு உடைய பலரைக் காண முடியும்.

இந்நோய் அதிகமாக 20 ஆம் நூற்றாண்டில் பரவினாலும் கி.மு 10000 க்கும் முற்பட்ட ஒரு எகிப்திய அரசனின் மம்மியிலேயே இந்நோய்த் தழும்புகள் கண்டறியப்பட்டுள்ளன.இந்நோய்க்கிருமி Orthopox என்னும் ஒருவகை நுண்ணுயிரிக் குடும்பத்தைச் சார்ந்தது. இக்குடும்பத்தில் Variola, Vaccinia, Cowpox, Monkeypox என்னும் நான்கு வகை கிருமிகள் உண்டு. இவற்றுள் Variola மனிதனைத் மட்டும் தொற்றும். மற்றவை மனிதனையும் மிருகங்களையும் தொற்றும். 

இந்நோய்க்காக பல்வேறு மருத்துவ முறைகள் பின்பற்றப்பட்டாலும் எட்வர்டு ஜென்னர் என்பவர் கண்டறிந்த மருந்தே இந்நோய்க்கான நிரந்தர மருந்தாக பின்னாளில் அங்கீகரிக்கப்பட்டது.

Vaccinia என்னும் அதே Orthopox குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு கிருமியே இந்த கிருமிக்கான எதிர்ப்பு ஆற்றலை உண்டு பண்ணுகிறது என்பதனைக் கண்டறிந்தார் ஜென்னர். Cowpox என்னும் நோயுடைய பசுவிலிருந்து பெற்ற Vaccinia நுண்ணுயிரியை ஒரு சிறுவனின் உடலில் செலுத்தி பின் சில நாள் கழித்தி பெரியம்மை நோயை உண்டு பண்ணும் Variola நுண்ணுயிரியினை அச்சிறுவனின் உடலில் செலுத்தும் பொழுது அச்சிறுவனின் உடலில் அக்கிருமி எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதனை சோதனை மூலம் கண்டறிந்தார். பெரியம்மைக்கான மருந்து கண்டுபிக்கப்பட்டுவிட்டது

பின்னாளில் அம்மருந்து உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது. அனைத்து பிறந்த குழந்தைகளுக்கும் பெரியம்மை தடுப்பூசி என்ற பெயரில் போடப்பட்டது. கிட்டத்தட்ட பெரியம்மையே உலகில் இல்லாத நிலை ஏற்பட்டது. பெரியம்மை முற்றிலுமாக அழிக்கப்பட்டது.

இருப்பினும் ஆய்வுகளுக்காக சில நாடுகள் அக்கிருமியை வைத்திருந்தனர். இந்நிலையில் 1978 ல் பர்மிங்காம் மருத்துவக்கல்லூரியிலிருந்த‌ Janet Parker என்னும் மருத்துவ புகைப்படக் கலைஞர் இந்நோய்த் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார். அதற்கு காரணமான பேராசிரியர் Henry Bedson என்பவர் பின்னாளில் தற்கொலை செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து உலக சுகாதார மையம் உலகெங்கும் உள்ள அக்கிருமிகளை அழிக்க உத்தரவிட்டது. இருப்பினும் சில நாடுகள் ஆய்வுகளுக்குத் தேவை என வலியுறுத்தியதனால் மிக அதிக பாதுகாப்புடைய அமெரிக்க மற்றும் ரஷ்ய ஆய்வுக்கூடங்களில் மட்டும் வைத்துக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

இருப்பினும் இந்நோய்க்கிருமியை எனப்படும் போர் உத்தியாக நாடுகள் மற்றும் தீவிரவாத அமைப்புகள் பயன்படுத்தக் கூடும்; எனவே அவற்றை முற்றிலுமாக அழித்துவிட வேண்டும் என்றும் ஒரு சாரர் கூறுகின்றனர்.

நாம் நினைவில் கொள்ள வேண்டியதெல்லாம் பல கோடி மனிதர்கள் மாண்டு, பின்னர் நூற்றாண்டுகளாக ஆய்வு செய்து நமக்கான இவ்வாழ்வை அறிவியல் அழித்துள்ளது. எனவே அறிவியல் மக்களை அழித்துவிட்டது எனத் தூற்றாமல் அறிவியலைப் போற்றுவோம்.

Similar Posts

  • | |

    ஒரு வருட கொரோனா கற்றுத்தந்த பாடங்கள் – யுவல் நோவா ஹராரி

    FINANCIAL TIMES பத்திரிக்கையில் Yuval Noah Harari அவர்களால் எழுதப்பெற்ற கட்டுரையின் தமிழாக்கம். (https://www.ft.com/content/f1b30f2c-84aa-4595-84f2-7816796d6841) வரலாற்றின் பார்வையில் இந்த ஒரு வருட கொரோனா காலத்தை நாம் எப்படி மதிப்பிடலாம்? பெரும்பாலானவர்கள் கொரோனா இறப்புகள், இயற்கையின் முன் மனித குலத்தின் மனிதாபிமானமற்ற தன்மையையின் வெளிப்பாடு என எண்ணலாம். ஆனால் உண்மையில் மனிதகுலம் இன்னும் மனிதாபிமானத்தை முற்றிலுமாக விட்டுவிடவில்லை என்பதையே 2020 காட்டியிருக்கிறது. பெருந்தொற்றுக்கள் முந்தைய கால கட்டங்களைப் போல கட்டுப்படுத்தமுடியாதவைகளாக இப்போது இருக்கவில்லை. அறிவியல் அதனை கட்டுப்படுத்தக்கூடிய சவாலாக…

  • லிவ்ரே டூர்னாய்ஸ்

    லிவ்ரே டூர்னாய்ஸ் என்பது 1800 களின் பிற்பகுதியில் பிரான்சில் உபயோகப்படுத்தப்பட்ட பணமாகும். இது பிரான்சின் டூர்னாய்ன் மாகாணத்தில் உபயோகப்படுத்தப்பட்டது. இரண்டாம் பிலிப் மன்னன் இம்மாகாணத்தைக் கைப்பற்றியதும் அதுவரை புழக்கத்திலிருந்த லிவ்ரே பாரிசிஸிற்கு பதில் லிவ்ரே டூர்னாய்ஸை அதிகாரப்பூர்வ பணமாக அறிவித்தார். இருப்பினும் 1667 வரை லிவ்ரே பாரிசிஸும் புழக்கத்தில் இருந்தது. ஒரு லிவ்ரே ரூர்னாய்ஸ் என்பது 20 சூஸ்களாகவும் ஒரு சூஸ் என்பது 12 டினையர்ஸாகவும் பகுக்கப்படும். கடைசியாக 1720 ல் அச்சடிக்கப்பட்ட நோட்டுக்கள் வரை லிவ்ரே…

  • டொலென்டினோ ஒப்பந்தம்

    டொலென்டினோ அமைதி ஒப்பந்தம் என்பது பிப்ரவரி 19, 1797 ல் நெப்போலியனால் ஆளப்பட்ட புரட்சிகர பிரான்ஸிற்கும் அப்போதைய போப்பால் ஆளப்பட்ட பப்பல் தேசத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட அமைதி ஒப்பந்தம் ஆகும். அமைதி ஒப்பந்தம் எனக்கூறப்பட்டாலும் இது பப்பல் நாடுகளுக்கு வேறு வழி இல்லாத ஒரு நிலையிலேயே கையெழுத்தானது. நெப்போலியனின் புரட்சிகளின் விளைவாக ஏற்பட்ட போர் வெற்றிகளைத் தொடர்ந்து ஆஸ்திரியா,ஆர்கோலா போன்ற நாடுகள் நெப்போலியனின் கீழ் வந்தன. அதனைத் தொடர்ந்து வடக்கு இத்தாலியில் நெப்போலியனுக்கு எதிரியே இல்லாத ஒரு…

  • | | |

    சட்டத்தை நிறைவேற்றுபவர்களின் ஆட்சி

    தமிழக,இந்திய‌ அரசியல் தொடர்பான எந்த ஒரு நிகழ்வையும் வரலாற்றுத்தகவல்களோடு அணுகவேண்டும், அன்றாட‌ வெற்று அரசியல் கூப்பாடுகளுக்கு செவி மடுக்கக்கூடாது என்ற நினைப்பு எனக்கு எப்பொழுதும் உண்டு. அதனால் பெரும்பாலான‌ நிகழ்கால அரசியல் விவாதங்களில் என்னுடைய கவனத்தை முற்றிலுமாக நான் தவிர்த்து விடுவதுண்டு. கடந்த ஒரு மாதங்களில் ஏதேனும் ஓர் ஊடகத்தில் வெளிவந்த விவாதங்களை ஒட்டுமொத்தமாக தொகுத்துப் பாருங்கள். அவையெல்லாம் வெற்றுக் குப்பைகள், அன்றன்றைய சொறிதலுக்கு மட்டுமேயானவை என்பது தெரியும். அதன் காரணமாகவே இந்த வெற்று நுரை கொப்புளிக்கும்…

  • Gambian Dalasi

    காம்பியா நாட்டின் பணம் காம்பியன் டாலசி பற்றிய சில தகவல்கள். காம்பியா இங்கிலாந்து பிரிட்டீஷாரால் ஆளப்பட்ட ஒரு தேசம்.1965 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ல் சுதந்திரம் பெற்றது.சுதந்திரத்திற்கு பின்னர் 1971 ஆம் ஆண்டுவரை காம்பியா இங்கிலாந்து அரசின் பிரிட்டீஷ் வெஸ்ட் ஆப்ரிக்க பவுண்டையே (British West African pound) உபயோகித்து வந்தது. இந்த (British West African pound) பிரிட்டீஷ் வெஸ்ட் ஆப்ரிக்க பவுண்ட் காம்பியா மட்டுமல்லாது பிரிட்டீஷ் கோஸ்ட் கார்டு (தற்போதைய கானா), நைஜீரியா, சியரா…

  • லூவர் அருங்காட்சியகம்

    லூவர் அருங்காட்சியகம் பிரான்ஸிலுள்ள ஓரு உலகப்புகழ் பெற்ற அருங்காட்சியகம். அங்கு 4500 ஆண்டுகளுக்கு முன்னரிருந்த புராதானச்சின்னங்கள் முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையிலான பல்வேறு பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஒவியம் இங்குதான் உள்ளது. இந்த அருங்காட்சியகம் பற்றிய சில தகவல்கள். ‍இந்த அருங்காட்சியகம் 60 சதுர கிமீ பரப்பளவில் செய்ன் நதிக்கரையில் அமைந்துள்ளது. வருடத்திற்கு 97 லட்சம் மக்கள் இங்கு வருகின்றனர். உலகிலேயே அதிக மக்களால் கண்டுகளிக்கப்பட்ட‌ அருங்காட்சியகம் இதுதான். மொத்தம் 380000…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.