|

கேள்வி பதில்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

மிகப்பெரிய திட்டமிடலுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். அதனால் தங்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாமல் தூரத்து நிலவாகவே வைத்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். இருந்தாலும் இந்த கேள்வி சமீபத்திய நாட்களில் மிக அதிகமான முறை நினைவில் எழும்புவதால் இக்கடிதம்.

என்னுடைய வேலையும் என்னுடைய புத்தக வாசிப்பும் வேறு வேறு வழிகள். ஆனால் நான் வாசிக்கத் தொடங்கிய பின்னர் என் வேலையினை மிக எளிதாகமாற்றிக்கொண்டேன். வேலையின் அளவு ஐந்து மடங்கிற்கும் அதிகமாகி இருக்கிறது. மிக முக்கியமாக மகிழ்ச்சியாக இருக்கிறேன். எளிமையாக இருக்கிறேன். மகிழ்சியை அருகில் சென்று பார்த்து பெரிதுபடுத்தி மகிழ்கிறேன். துன்பங்களை தூரமாய்ப் பார்த்து சிறியதாய் ஆக்கிக்கொள்கிறேன். நீங்கள் கூறுவது போல சின்னச் சின்ன வாசகங்களை மனதில் அசைபோட்டு அசைபோட்டு ஒரு மிகப்பெரிய மன உலகை சமைத்து வைத்து வாழ்கிறேன். வாசிப்பைத் நாள்தோறும் தீவிரப்படுத்திக் கொண்டே இருக்கிறேன். எனக்கான வேலையையே தள்ளிப்போடும் நான் இன்று எந்நிலையிலும் தினமும் என்னால் சில மணி நேரங்களை ஒதுக்க முடியும் என்ற நிலைக்கு மாறியிருக்கிறேன். இதெல்லாம் என்னால் உறுதியாகக் கூற முடியும் வாசிப்பால் தான் என்று. ஆனால் எப்படி என் வேலையை மாற்றியது எனக்கேட்டால் கண்டிப்பாக என்னால் சொல்லத் தெரியாது.

என்னுடைய தற்போதைய நிலையை விளக்கவே மேற்கூறிய வரிகள் எல்லாம். என்னுடைய கேள்வியெதுவென்றால் தீவிர வாசகர்கள், எழுத்தாளர்கள் தமது படைப்புகள் தாண்டிய உரையாடல்களின் போது மிகவும் அவமதிப்பையோ, அல்லது துன்பங்களை தங்கள் வாழ்வில் சந்தித்ததாக கூறுகின்றனர். அதிக பட்ச அவமதிப்பையோ, துன்பங்களையோ சந்தித்தால் மட்டுமே ஒரு தீவிர வாசகராகவோ, எழுத்தாளராகவோ ஆக முடியுமா? இல்லை, அதிகபட்ச வாசிப்பு துன்பங்களை மிகைப்படுத்தச் செய்யுமா? மகிழ்ச்சியாக எளிமையாக வாசித்துக்கொண்டே இருக்க முடியாதா? [ நான் முழுக்க முழுக்க மகிழ்ச்சியான புத்தகங்களையே வாசிக்கிறேன் என்று கூறவில்லை. எல்லாவற்றையும் வாசிக்கிறேன். ஆனாலும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்நிலை மாறிவிடுமோ என தோன்றுவதாலேயே இக்கேள்வி]

அன்புள்ள ராஜேஷ்

நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் 3000 வருடம் முன்னரே அரிஸ்டாடிலால் சொல்லப்பட்டுவிட்டது. இப்படி யோசியுங்கள், உங்களுக்கு உண்மையிலேயே துயரம் தரும் ஒருவிஷயத்தை நீங்கள் நாடுவீர்களா? ஆனால் துயரம் நிறைந்த ஒரு நூலை, திரைப்படத்தை விரும்பி வாசிக்கிறீர்கள், பார்க்கிறீர்கள் அல்லவா? ஏனென்றால் அந்தத் துயரம் உண்மையானது அல்ல. அது மனதில் தலைகீழாகவே நிகழ்கிறது. துயரத்தை நடிப்பதன் மூலம் மனம் மகிழ்ச்சி அடைகிறது. சுந்தர ராமசாமியின் மொழியில் சொல்லப்போனால் திருப்பிப்போடப்பட்ட சட்டை, பை உள்ளே இருக்கும்.

இதை catharsis  என்கிறார் அரிஸ்டாடில். துயரத்தை புனைவுகளில் அனுபவிப்பது வழியாக மானுடமனம் தன்னை தூய்மைப்படுத்திக்கொள்கிறது. ஓர் உன்னதமாக்கல் நிகழ்கிறது. அது ஓர் இனிய அனுபவம். ஆகவேதான் உயர்ந்த படைப்புகள் பெரும்பாலும் துயரச்சுவை மிக்கவையாக இருக்கின்றன. அதுவும் இனிய அனுபவமே. மகிழ்ச்சியான மனநிலை என்பது நேர்நிலை. அதில் மனிதன் அதிகநேரம் நிற்க முடியாது. ஆகவேதன துயரம் கலந்த மகிழ்ச்சியை melancholy யை அடைகிறான். அந்த இனியதுயரமே இயற்கையை, இசையை, கலைகளை அழகாக ஆக்குகிறதுய். அது இல்லாவிட்டால் உலகில் இன்பமே இல்லை

ஜெ

Similar Posts

  • 2020 ஒரு மீள்பார்வை

    2020 ஆம் வருடம் இனிதே நிறைவுற்று விட்டது. கொரோனா பெருந்தொற்று இன்னும் முழுமையாக நம்மை விட்டு நீங்கவில்லை என்றாலும், பெரும்பாலான தொழில் செயல்பாட்டு முறைகளில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துவிட்டது. அரசுகளும் இது போன்ற சூழல்களினை எப்படிக் கையாள்வது போன்ற திட்டங்களை வகுக்கத்தொடங்கி விட்டன. இன்றைய உலகில் எந்த ஒரு நாடும் கிட்டத்தட்ட தனித்து இயங்க முடியாது என்ற நிலையில்தான் இருக்கின்றன. அதனால் கொரோனா போன்ற தொற்றுக்கள் ஒரு தேசத்தில் ஏற்படின் கண்டிப்பாக மற்ற நாடுகளுக்கும் நேரடியாகவோ…

  • | |

    ஆசானுக்கு

    மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு இந்த‌க்கடிதத்தினை தங்களுக்கு இன்னும் சில நாட்கள் கழித்தே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். இருப்பினும் முன்னரே எழுதினால் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பதில் எழுதுவீர்கள் என்று நம்பியே இப்பொழுதே எழுதுகிறேன். முதலில் சந்திரசேகர் அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தங்கள். எனக்கு அவரைப்பற்றி தெரியாது. தங்களின் மூலமே தெரியும். இருந்தாலும் சரியான தூக்கம் மிக அவசியம் என்ற ஒற்றை சொல் எனக்கு மிக முக்கியமானதாகப் பட்டது. சரியான அளவில் திட்டமிட்டு நாட்களை கடத்தும்…

  • தினம் ஒரு வார்த்தை 49 – weed

    weed – தேவையில்லாமல் வளரக்கூடிய ஒர் செடி போன்ற பொருள்களில். உவமையாகவும் சில நேரங்களில் மனிதர்களையும் சுட்டும். Sample Sentences: 1. keep the seedlings clear of weeds 2. He thought party games were for weeds and wets

  • |

    கோடா டிங்கீ – தேசாரு கடற்கரை

    கோடா டிங்கீ மலேசியாவின் ஜோகோர் மாகாணாத்திலுள்ள ஓர் சுற்றுலாத் தளம். முக்கியமான இடம் அங்குள்ள அருவி. சமீபத்தில் அங்கு சென்றிருந்தேன். இயற்கை எழில் மிகுந்த ஓர் இடம். சிறப்பான முறையில் பராமரித்து வருகிறார்கள். இந்த கோடையிலும் அங்கு தண்ணீர் நன்றாக வருகிறது. மிகவும் சுவையான அருவி நீர். இனிப்பானதாக இருக்கிறது. அருவி வழிந்தோடும் வழியெங்கும் மக்கள் ஆங்காங்கே அமர்ந்து நீரில் விளையாடுகிறார்கள். ஏனென்றால் சில முக்கியமான இடங்களுக்கு மட்டுமே நுழைவுக்கட்டணம். மற்ற இடங்களில் இல்லை. பெரும்பாலும் அங்கு…

  • தண்ணீர்

    சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த புகைப்படம் இது. நெல் வயலுக்கு டிராக்டரில் கொண்டுவந்து நீர் பாய்ச்சுகிறார்கள் இல்லை ஊட்டுகிறார்கள். தமிழகத்தின் தேனி மாவட்டத்தில்தான் இந்த நிலை. கேரள எல்லையை ஒட்டி மேற்கு மலைத்தொடருக்கு அருகே இருக்கும் மாவட்டத்திலேயே இந்நிலையென்றால் மற்ற மாவட்டங்களின் நிலைகளை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கிக்குடிப்பதையே மிகப்பெரிய ஆச்சரியமாகப் பார்த்தவன் நான். நெல்வயலுக்கு நீர் ஊட்டுவதைப் பார்க்கும்பொழுது இனம்புரியாத வலி இந்த நெஞ்சுக்குள். எப்பொழுதாவது எங்கள் கிராமத்தில் இருந்து சென்னைக்கோ அல்லது…

One Comment

  1. நல்லா எழுதுறீங்க, நல்ல ரசனையும் உள்ளவர் தான். ஆனால் அதுக்காக எல்லாம் இந்த கடிதம் அல்ல. தீர்ப்பு பற்றிய உங்கள் ஆதங்கம் தான் இந்தப் பதிவை அனுப்பத் தூண்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.