| | |

தேர்தல்

நான் இந்த தேர்தலில் வாக்களிக்கும்பொழுது இவற்றை நினைவில் கொள்வேன்.

1. பெரிய கட்சிகள் என்ற காரணத்திற்காக மட்டும் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டேன். ஏனெனில் அவர் தொகுதியின் பிரதிநிதியாக சட்டமன்றத்தில் செயல்படாமல் கட்சியின் பிரதிநிதியாக தொகுதியில் செயல்படும் வாய்ப்புகளே அதிகம்.

2. யார் வரவேண்டும் என நான் நினைக்கும் வேட்பாளருக்கு வாக்களிப்பேனேயன்றி யார் வரக்கூடாது என நினைக்கும் வேட்பாளரை வெல்லும் வாய்ப்புள்ளவருக்கு எக்காரணம் கொண்டு வாக்களிக்கமாட்டேன். ஏனெனில் நான் எந்த காரணத்திற்காக ஒரு வேட்பாளார் வரக்கூடாது என நினைக்கிறேனோ அதே காரணத்தினை அவரை வெல்லும் வாய்ப்பு உள்ளவர் அடுத்த தேர்தலில் அடையலாம். அதிமுக வேட்பாளரைத் தோற்கடிக்க நான் திமுக வேட்பாளருக்கு வாக்களித்தால் அடுத்த தேர்தலில் திமுக வேட்பாளரைத் தோற்கடிக்க அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டியிருக்கும். ஆக ஒரு நாளும் நான் விரும்பும் ஓர் வேட்பாளர் வெற்றி பெற‌மாட்டார். அதற்குப் பதில் நான் வெற்றி பெற விரும்பும் வேட்பாளருக்கு வாக்களித்தால் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை நான் ஒரு ஓட்டு அதிகப்படுத்துகிறேன். மாற்றத்தை நானே தொடங்குவேன்.

3. தொகுதிக்கு நன்கு பரிச்சயமான அல்ல‌து தொகுதி மக்களின் பிரச்சினைகளுக்காக தேர்தல் காலம் அல்லாமல் மற்ற காலங்களிலும் போராடும் ஒருவர் தேர்தலில் நிற்கும் பொழுது அவருக்கு கண்டிப்பாக முன்னுரிமை அளிப்பேன்.

4. இன்றைய நிலையில் எந்த பத்திரிக்கையின் கருத்துக்கணிப்பையும் நம்பி அவர்கள் கூறும் வெற்றி வாய்ப்புள்ளவருக்கு வாக்களிக்க முடிவு செய்யமாட்டேன். அவர்களது கணிப்பினை ஒரு தரப்பாக மட்டுமே எடுத்துக்கொள்வேன். கட்சி சார்ந்த பத்திரிக்கை செய்திகளின் கணிப்புகளை முற்றிலுமாக புறந்தள்ளுவேன்.

5. நான் வாக்களிக்கும் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்பதனால் அவருக்கு வாக்களிக்காமல் இருக்க மாட்டேன். நான், நான் வெற்றி பெற விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிப்பேனேயன்றி வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டேன். நான் வெற்றி பெற விரும்பும் வேட்பாளருக்கு நானே வாக்களிக்கவில்லையென்றால் வேறு யார் வாக்களிப்பார்?

6. என் தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் பற்றி அறிந்து கொள்ள முயல்வேன். நான் விரும்பும் ஒரு நல்ல வேட்பாளர் பொருளாதார காரணங்களால் பிரதான கட்சிகள் அளவிற்கு விளம்பரம் செய்ய முடியாதவராக இருக்கலாம். ஆனால் அதனையே நான் தகுதிக்குறைவாக எடுத்துக் கொள்ளமாட்டேன். மற்றவர்கள் 10 முறை பிரச்சாரத்திற்கு வந்தால் அந்த சுயமான வேட்பாளர் ஒருமுறை மட்டும் வரக்கூடியவராக இருப்பார். நான் அவரையும் அவரது திட்டங்களையும் முக்கியமாகக் கவனிப்பேன்.

7. நான் ஏற்றுக்கொள்ளக் கூடிய வேட்பாளர் இல்லாத பட்சத்தில் நான் NOTA விற்கே வாக்களிப்பேன். எக்காரணம் கொண்டும் வேறு ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டேன்.

Similar Posts

  • ஆசானிடமிருந்து

    அன்புள்ள ராஜேஷ் இப்போது உணர்ச்சிவசப்பட்டு நீதி எங்கே என்பவர்கள் தினகரன் வழக்கோ, தா கிருஷ்ணன் கொலை வழக்கோ என்னாயிற்று என்று கேட்கமாட்டார்கள். சன் டிவி மீது வழக்குப்பதியவே ஏன் இத்தனை நாட்களாயிற்று என்று கேட்கமாட்டார்கள். இப்போது நீதி வென்றது என்பவர்கள் நாளை திமுக காரர்கள் விடுதலைசெய்யப்படும்போது நீதி தேவதை அருள்புரிந்தாள் என்பார்கள். கட்சிசார்பான உணர்ச்சிக்கொந்தளிப்புகளுக்கு உண்மையில் ஒரு பொருளும் இல்லை. அதற்கு அப்பால் சென்று யோசிப்பதே ஒரு சமநிலையை அளிக்கும் .ஆகவேதான் நான் குன்ஹா தீர்ப்பிலும் ஒன்றும்…

  • உன்னதத்தின் பக்கம் ஒரு அங்குலம்

    ஒரு அரசு அதனுடைய பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமா என்று கேட்டால் அதற்கான பதிலாக நம்மில் பெரும்பாலானோர் மனதில் உதிப்பது ஆம் என்பதுதான். ஏனென்றால் இன்றைய நிலையில் பெரும்பாலான ஜனநாயக நாடுகளில் ஒரு அரசு என்பது அதன் மக்களாலேயே தேர்வு செய்யப்படுகிறது. அதனால் பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது ஒரு அரசின் கடமை என நினைக்கலாம். ஆனால்,எப்பொழுதும் பெரும்பான்மையின் விருப்பத்தினை மட்டும் நடைமுறைப்படுத்தும் ஒரு அரசு அதன் வளர்ச்சியின் சாத்தியத்தை இழக்கிறது. அச்சமூகத்திற்கு தீங்கினையே இழைக்கிறது….

  • புது வருடம் ‍- 2020

    இந்த ஆண்டில் 1. 52 புத்தகங்களை வாசிப்பது2. வாசித்த புத்தகங்களுக்கான அறிமுகத்தை தமிழில் காணொளியாக இணையத்தில் பதிவேற்றுவது3. தெலுங்கு மொழியினை சரளமாக பேசவும்,எழுதவும்,வாசிக்கவும் கற்றுக்கொள்வது என மூன்று செயல்களைத் திட்டமிடுகிறேன். சென்ற ஆண்டில் 50 புத்தகங்களை வாசிக்கத்திட்டமிட்டு 7 புத்தகங்களை மட்டுமே முழுமையாக வாசித்தேன். எந்த விதமான காரணம் கூறிக்கொண்டாலும் திட்டமிட்டதனை அடய முடியவில்லை என்பதே உண்மை. அதிலுள்ள குறைபாடுகளை திருத்திக்கொண்டு மீண்டும் முன் செல்லத் திட்டமிடுகிறேன். இரண்டாவதாக, வாசித்த புத்தகங்களைப்பற்றி இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்கான காரணம்…

  • விளையாட்டல்ல வியாபாரம்

    சமீபத்திய ஆண்டுகளில் பெரும்பாலானவர்களின் பேச்சுக்களில் இந்த வார்த்தை இடம் பிடித்திருக்கும். IPL அவர்கள் அனைவருக்கும் (எனக்கும் சேர்த்து) கேள்வி இதுதான். IPL ஆல் அடைந்த நன்மைகள் என்னென்ன? பட்டியலிடுங்கள். நன்மை என்பது உங்களுக்காகவோ நாட்டுக்காகவோ இருக்கலாம். சிறந்த பொழுதுபோக்கு என்பதை தவிர்த்து ஒரு சில நன்மைகளை மட்டும்தான் கூற முடியும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

  • |

    A Letter to President

    Dear Sir/Madam, I am Rajeshkumar, from a Village named Nattampatti, Pudukkottai, Tamil Nadu, India. I am a proud Indian who values our country’s rich heritage, culture, and traditions. I have a deep appreciation for the sacrifices our forefathers made to secure our freedom, and I am grateful for the democracy that we have today. I…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.