|

காவி கார்ப்பரேட் மோடி

kavi-corporate-modi

மோடி அவர்களைப் பற்றி பல்வேறு காலகட்டங்களில் வினவு இணையதளம் மற்றும் புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நூல். நூலகத்தின் காட்சிப்பலகையில் வைக்கப்பட்டிருந்ததால் இப்புத்தகத்தை வாசித்தேன். முற்றிலும் ஒற்றைச்சார்பு கொண்ட கட்டுரைகள். ஒற்றை வரி இதுதான். மோடி வெறுப்பு. அதற்கான சம்பவங்களையெல்லாம் எடுத்து கட்டுரையாக்கியிருக்கிறார்கள். அதிலும் கீழ்த்தரமான வார்த்தைகள். இரண்டாவது நோக்கம் புத்தகம் வெளிவந்த காலம் 2013 ஆம் ஆண்டு. அப்போதைக்குத்தான் மோடி அவர்களை பிரதமராக அறிவிப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகிக்கொண்டிருந்த நேரம். அதனால் மோடியின் மதிப்பினைக்த குறைக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட புத்தகம். பெரும்பாலான கட்டுரைகளில் தகவல்களை விட வசவுகளே உள்ளன. நம் நாட்டில் அனைவரையும் விமர்சிப்பதற்கான உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. அதற்காக இத்த‌னை கீழ்த்தரமான வார்த்தைகள் உபயோகப்படுத்த வேண்டியதில்லை. நாட்டிலுள்ள பெரும்பாலானோர் குஜராத்தில் நடைபெற்ற சம்பவங்களின் எதிர்ப்பாளர்களே. ஆனால் அவர்களையும் இந்துக்கள் என்று பொதுப்படுத்துவதன் மூலம் இந்து மத அடிப்படைவாதிகளோடு அனைத்து இந்துக்களையும் இணைக்கும் வேலையையே இந்த கட்டுரைகள் செய்கின்றன. தவிர்க்க வேண்டிய புத்தகம்.

Similar Posts

  • |

    அசைவ உணவு அனுமதிக்கப்பட்டதா? தடுக்கப்பட்டதா? – டாக்டர் ஜாகிர் நாயக்

    இஸ்லாம் மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கும், ராஷ்மிபாய் ஸ‌வேரி அவர்களுக்கும் இடையில் நடந்த அசைவ உணவு அனுமதிக்கப்பட்டதா? தடுக்கப்பட்டதா? என்ற விவாதத்தின் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பகுதியினை சுருக்கமாக புத்தகவடிவில் வெளியிட்டிருக்கிறார்கள். அதுவே இப்புத்தகம். தமிழாக்கம் நூ.முகமது கனி. வெளியிடப்பட்ட வருடம் ஜனவரி 2011. அசைவ உணவு மனிதர்களுக்கு அனுமதிக்கப்பட்டது என்பதனை ஜாகிர் நாயக் குரான் மற்றும் பிற அறிவியல் இதழ்களின் ஆதாரம் கொண்டு விவரிக்கிறார். ஸவேரி அவர்களின் உரைவடிவம் இப்புத்தகத்தில் இல்லையாதலால்…

  • |

    Home Deus – Yuval Noah Harari

    This books follows the popular book ‘The Sapiens’ from the same author Yuval Noah Harari. If you have not read the book ‘The Sapiens’ it should be read first. So that it will give better picture on understanding this book. The Sapiens talks on how the homo sapiens evolved as human being in detail. This…

  • சிறிது வெளிச்சம் – என் பார்வையில்

    சமீபத்தில் ராமகிருஷ்ணன் எழுதிய “சிறிது வெளிச்சம்” நூலைப் படித்தேன். ஆனந்த விகடனில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. நல்ல புத்தகம். நாம் அன்றாடம் சந்திக்கும் கவனிக்காது விட்ட பல்வேறு அவலங்களையும், மகிழ்வுகளையும் விவரித்திருக்கிறார். வாரம் தோறும் வெளியானதாலோ என்னவோ ஒவ்வொரு அத்தியாயமும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவையாகவே இருக்கின்றன. ஆனாலும் தனித்தனியே ஒவ்வொரு கட்டுரையும் ஒரு சமூகக் கருத்தை முன்வைக்கிறது. அனைத்து கட்டுரைகளும் ஏதாவது ஒரு வடிவில் நம் அறிவைத் தொடுகிறது.  அதில் முத்தாய்ப்பாய் “கைகள் இரண்டால்” கட்டுரை. ஆனால் இது…

  • 200 பிரபலங்கள் 200 மறக்க முடியாத நிகழ்ச்சிகள்

    அப்பாஸ் மந்திரியால் தொகுக்கப்பட்டது. நர்மதா பதிப்பகம் வெளியீடு. மிக எளிய புத்தகம். ஆரம்பகால வாசகர்கள் மற்றும் குழ‌ந்தைகளுக்கான சிறந்த தொடக்கமாக இந்நூலைக் கொள்ளலாம். எளிய மொழிநடை. அறம் பேணும் நிகழ்வுகள். தமிழக, இந்திய, உலக வரலாற்றின் உயர்ந்த மனிதர்களுடைய‌ வாழ்வியல் நிகழ்வுகளை மிக அழகாகவும், எளிமையாகவும் விளக்கும் புத்தகம். வாழ்வியல் நெறிகளைப் போதிக்கும் ஆசிரியர்கள் மிகச் சிறந்த உதாரணங்களைக் கூற‌ இந்நூலை உபயோகிக்கலாம்.

  • |

    கன்னி நிலம் – ஜெயமோகன்

    ஜெயமோகன் அவர்களால் எழுதப்பட்டது. மணிப்பூர் மாநில எல்லைப்பகுதியில் பணியாற்றும் ராணுவ அதிகாரி நெல்லையப்பனின் கதை, ஜெயமோகனுக்கே உரிய சொல்லாடல்களுடன். நெல்லையப்பன் மணிப்பூர் எல்லையில் பணியாற்றும் ராணுவத் தலைமை அதிகாரி. அவர்கள் ஒருநாள் தங்களுடைய வழக்கமான பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது காட்டுப்பகுதியில் ஒரு போராளிப்பெண்ணை கைது செய்கிறார்கள். அப்பெண்ணை கைது செய்து ராணுவ முகாமுக்கு கொண்டு வரும் வழியில் போராளிக்குழுக்களின் தாக்குதலுக்கு ஆளாகி, அவர்களில் சிலர் இறந்து விடுகின்றனர். இன்னும் சிலர் அவர்களிடம் கைதியாக மாட்டிக்கொள்கின்றனர். மீதமுள்ளவர்கள் ராணுவ…

  • புத்தகம் 2 : அப்புசாமியும் ஆப்ரிக்க அழகியும்

    பாக்கியம் ராமசாமியால் எழுதப்பெற்று குமுதத்தில் 1963 களில் தொடர்கதையாக வெளிவந்த நகைச்சுவைத் தொடர். பின்னர் மொத்த நாவலாக வெளியிடப்பட்டது. அப்புசாமித் தாத்தா தன்னுடைய மனைவி சீதாவுடன் நாள்தோறும் சண்டையிட்டு வருபவர். சாதாரண விளையாட்டுச் சண்டைகள். ஒருமுறை அவருடைய தாடியை அவர் மழிக்கவில்லை என்பதற்காக அவரைத் தன்னுடன் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லாமல் விடுகிறாள் சீதா. அதனால் தான் இனிமேல் தாடியை எடுக்கப்போவதில்லை என சபதம் செய்கிறார் அப்புசாமி. இந்நிலையில் இந்தியாவுக்கு வருகை தரும் ஒரு ஆப்ரிக்க இளவரசி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.