Rich Dad Poor Dad
|

Rich Dad Poor Dad – Robert Kiyosaki

Rich Dad Poor Dad

Robert Kiyosaki ஆல் எழுதப்பெற்று 1997 ஆம் ஆண்டில் வெளிவந்தது. வாழ்வில் பொருளாதார தன்னிறைவு அடைவதற்கு தனி மனித நுண்ணறிவு எத்தகைய முக்கியமான ஒன்று என்பதனை விவரிக்கும் நூல். 50 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகம் முழுவதும் 30 மில்லியனுக்கும் அதிகமாக விற்பனையான நூல்.

இந்நூல் வாசிப்பவர்கள் பொருளாதார தன்னிறைவினை அடைந்தார்கள் என்பதனை விட‌ Robert Kiyosaki கண்டிப்பாக இப்புத்தகத்தினால் பொருளாதார நிறைவினை அடைந்திருப்பார் என்பது நிதர்சனம். இப்புத்தகத்தினை பத்து தனி அத்தியாயங்களாக‌ Robert Kiyosaki பிரித்து விளக்கியுள்ளார். தான் தன்னுடைய தந்தை மற்றும் தன்னுடய நண்பனின் தந்தை இருவரிடம் கற்றுக்கொண்ட விஷயங்கள் எவ்வாறு தன்னுடைய வாழ்வில் உதவியது என்பதனை இந்த பத்து அத்தியாயங்களில் விளக்கியுள்ளார். அந்தப் பத்து விஷயங்கள் இவையே.

  1. The Rich Don’t Work for Money
  2. Why Teach Financial Literacy?
  3. Mind Your Own Business
  4. The History of Taxes and the Power of Corporations
  5. The Rich Invent Money
  6. Work to Learn – Don’t work for Money
  7. Overcoming Obstacles
  8. Getting Started
  9. Still Want More? Here Are some To Do’s
  10. Final Thoughts

ஒட்டுமொத்தமாக படிக்கும் பொழுது இந்த புத்தகத்தில் திரும்பத்திரும்ப சில விஷயங்கள் சொல்லப்படுகிறது. நீங்கள் பணத்திற்காக வேலை செய்யக்கூடாது. பணம் உங்களுக்காக வேலை செய்ய வேண்டும். அதற்கு ஏற்ற முதலீடுகளை ரியல் எஸ்டேட், பங்குகள் போன்றவற்றில் செய்யுங்கள். இழப்பு என்பது இல்லாமல் எந்த லாபத்தினையும் அடைய முடியாது. இழப்பிலிருந்து எப்படிக் கற்றுக்கொண்டு மேலே செல்வது என தெரிந்து கொள்ளுங்கள். இவைதான் திரும்பத்திரும்ப வருகிறது பெரும்பாலான அத்தியாயங்களில்.

அத்தோடு ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அவ்வத்தியாயம் மீண்டும் சுருக்கமாக சொல்லப்படுகிறது. உண்மையாகவே திரும்ப சொல்லப்படுகிறது. அத்தியாயம் 30 பக்கமெனில், இது 5 முதல் 10 பக்கம் வரை இருக்கும். இது படிப்பதனில் ஒரு சோர்வை உண்டாக்குகிறது. தனிப்பட்ட முறையில் இந்த புத்தகம் என்னளவில் பெரிய ஆச்சரியத்தை உண்டு பண்ணவில்லை எனினும் எந்த வாசிப்பும் நல்ல வாசிப்பே என்பதனால் இப்புத்தகத்தினை வாசிக்கலாம்.

Similar Posts

  • | | |

    இந்திய உளவுத்துறை RAW எவ்வாறு இயங்குகிறது – குகன்

    ஒவ்வொரு நாட்டிற்கும் ராணுவ பாதுகாப்பு எத்தனை முக்கியமானதோ அந்த அளவிற்கு உளவு நிறுவனமும் முக்கியமானது. உளவு நிறுவனங்களின் தேவை முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களுக்குப் பின்னர் அதீத முக்கியத்துவம் பெற்றதனை குறைந்தபட்ச வரலாற்று அறிதல் கொண்ட எவரும் உணர முடியும். அத்தகைய பணியை செய்யும் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ ஓர் அமைப்பே ரா. ஐபி எனப்படும் உளவு அமைப்பு ஆங்கிலேயர் காலம் முதல் இந்தியாவில் இருந்து வந்தது. சுதந்திர இந்தியாவிலும் அதுவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவுப்…

  • |

    சுந்தரராமசாமியின் கவிதைக் கலை – ராஜமார்த்தாண்டன்

    ராஜாமார்த்தாண்டன் அவர்களால் 2007 ஆம் ஆண்டில் எழுதப்பெற்றது. சுந்தரராமசாமி அவர்கள் எழுதிய கவிதைகள் மீதான விமர்சனமே இப்புத்தகம். பெரும்பாலும் கவிதைகள் பற்றிய விளக்கங்கள். ஏற்கனவே சுந்தரராமசாமியின் கவிதைகளை வாசித்தவர்கள் இப்புத்தகத்தினை வாசிக்கும்பொழுது அவர்கள் தொடாத சில பார்வைகைளை அறிந்து கொள்ள உதவும். வாசிக்கலாம்.

  • Adolf Hitler: A Life From Beginning to End

    ஹிட்லரின் இளமைக்காலம், முதலாம் உலகப்போரில் அவருடைய பங்கு, இரண்டாம் உலகப்போர் மற்றும் அதன் தொடக்கத்திற்கான‌ காரணங்கள், முடிவு போன்ற நிகழ்வுகளின் தொகுப்பே இந்நூல். ஹிட்லரின் மனதில் சிறுவயதிலேயே எப்படி யூதர்கள் மீதான வெறுப்பு உண்டானது என்பது ஆச்சரியமான ஒன்று. முதலாம் உலகப்போரின் போது இருந்த மற்ற ஜெர்மானியக் கட்சிகள் யூதர்களே ஜெர்மனியின் தோல்விக்கும், ஜெர்மனியின் வளர்ச்சிக்குத் தடையெனவும் முழங்கினர். அது அவர்களின் கட்சி வளர்ச்சிக்கு அவசியமான ஒன்றாக இருந்தது. அது ஹிட்லரின் மனதில் ஆழப்பதிந்ததன் தாக்கத்தினை பின்னாளில்…

  • | |

    லஜ்ஜா – அவமானம்

    1993 ஆம் ஆண்டு வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் அவர்களால் எழுதப்பட்ட நாவல். 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு வங்கதேசத்தில் நடைபெற்ற கலவரங்களின் போது ஒரு இந்து குடும்பத்தின் நிலையே நாவல். அந்தக்குடும்ப நபர்கள் கற்பனை எனக் கூறப்பட்டிருந்தாலும் விவரிக்கப்படும் சம்பவ‌ங்கள் அனைத்தும் உண்மை சம்பவங்களே. இதற்காக  சம்பவங்களை ஆதாரத்தோடு விளக்கியுள்ளார். கதை இதுதான். பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் சுதந்திரம் பெறுவதற்கான போராட்டங்களில் பங்கு பெற்ற பல இந்துக்களில் சுதாமயும் ஒருவர். பாகிஸ்தானிலிருந்து…

  • |

    கடலுக்கு அப்பால் – ப.சிங்காரம்

    1950 களில் ப.சிங்காரம் அவர்களால் எழுதப்பெற்ற நாவல். இந்தோனேசியாவில் வாழும் தமிழ் மக்களுடைய வாழ்வியலே கதையின் கரு. இந்த நாவலே முதன்முதலாக ப.சிங்காரத்தால் எழுதப்பெற்ற நாவல். இந்நாவலின் தொடர்ச்சியாகவே புயலிலே ஒரு தோணியை எழுதினார். ஆதலால் இந்த நாவலுக்கும் புயலிலே ஒரு தோணிக்கும் ஓர் இணைப்பை உணரலாம். அதே கதை மாந்தர்கள், அதே காலகட்டம். ஆனால் சற்றே வேறான கதைக்களம். வேலைக்காக இந்தோனேசியாவிலுள்ள ஒரு செட்டியாரிடம் அடுத்தாள் வேலைக்கு செல்கிறான் செல்லையா. அவனுடைய செட்டியார் முதலாளியும் அவனுடைய…

  • |

    சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்

    நீண்ட நாட்களாக கேள்விப்பட்டுக்கொண்டு இருந்த, ஆனால் வாசித்திராத ஒரு நாவல். ஜெயகாந்தன் அவர்களால் எழுதப்பெற்று தொடர்கதையாக வெளிவந்தது. கதை நாயகி கங்கா பாலியல் ரீதியாகப் எதிர்பாராமல் பாதிக்கப்படுகிறாள். அதன் காரணமாக அவள் வாழ்வில் எதிர்கொள்ளும் நிகழ்வுகளே நாவலின் சுருக்கம். கங்கா முற்போக்கிற்கும், பிற்போக்கிற்கும் இடையில் அல்லாடும் ஒரு பெண். இந்நாவல் வெளிவந்தது 1970. பெண் கல்வி, வேலைக்கு செல்வது தொடர்பாக தீவிர விவாதங்கள் நடைபெற்ற கால கட்டம் அது. ஒரு தரப்பில் பெண் கல்வி கற்கச் செல்வதும்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.