|

ரஷ்யப் புரட்சி – மருதன்

1917 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் ஜார் மன்னரின் ஆட்சி போராட்டத்தின் மூலம் கவிழ்க்கப்பட்டு, லெனின் தலைமையில் கம்யூனிச அரசு அமைந்ததை விவரிக்கும் சிறு புத்தகம். மருதன் அவர்களால் எழுதப்பெற்றது. ஜார் மன்னராட்சியில் தொழிலாளர்களின் வாழ்வு பேணப்படாமால் கீழ் நிலைக்கு சென்று கொண்டிருந்ததே போராட்டத்தின் ஆரம்பகாலக் காரணம். சரியான ஊதியமின்மை, முறைப்படுத்தப்படாத வேலை நேரங்கள் எனப் பல துன்புறல்களுக்கு ஆளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட அதன் ஒருபகுதியாக லெனினின் சகோதரனும் அரசாங்கத்தால் கொல்லப்படுகிறார். அதன் பின்னர் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் லெனின், கார்ல் மார்க்ஸின் மூலதனம் நூலையே ரஷ்ய மக்களுக்கான சாசனமாகக் கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறார். அப்புத்தகத்தினை நன்கு கற்று ரஷ்ய மக்களுக்கான எளிய மொழியில் கட்டுரைகளாக வெளியிடுகிறார். இதுபோன்ற பல்வேறு நிகழ்வுகள் வழியாக ரஷ்யத் தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த தொழிலாளர் அமைப்பு உருவாகிறது. பின்னர் பல்வேறு கட்ட அடக்குமுறைகள் மற்றும் முதல் உலகப்போரின் ர‌ஷ்யாவின் தலையீடு போன்றவற்றால் தொழிலாளர்களும் ரஷ்ய மக்களும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதனைத் தொடர்ந்து பெரும் அளவிலான புரட்சி 1917 ஆம் ஆண்டில் வெடிக்கிறது.அப்புரட்சியின் மூலமாக‌ ஜார் மன்னரான இரண்டாம் நிக்கோலஸ் தூக்கியடிக்கப்பட்டு மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு லெனின் தலைமயில் கம்யூனிச அரசு மலர்கிறது. ரஷ்யப்புரட்சி பற்றி அறிந்து கொள்ள ஓர் தொடக்கமாக இந்நூலை வாசிக்கலாம்.

Similar Posts

  • |

    காவி கார்ப்பரேட் மோடி

    மோடி அவர்களைப் பற்றி பல்வேறு காலகட்டங்களில் வினவு இணையதளம் மற்றும் புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நூல். நூலகத்தின் காட்சிப்பலகையில் வைக்கப்பட்டிருந்ததால் இப்புத்தகத்தை வாசித்தேன். முற்றிலும் ஒற்றைச்சார்பு கொண்ட கட்டுரைகள். ஒற்றை வரி இதுதான். மோடி வெறுப்பு. அதற்கான சம்பவங்களையெல்லாம் எடுத்து கட்டுரையாக்கியிருக்கிறார்கள். அதிலும் கீழ்த்தரமான வார்த்தைகள். இரண்டாவது நோக்கம் புத்தகம் வெளிவந்த காலம் 2013 ஆம் ஆண்டு. அப்போதைக்குத்தான் மோடி அவர்களை பிரதமராக அறிவிப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகிக்கொண்டிருந்த நேரம். அதனால் மோடியின் மதிப்பினைக்த…

  • உபபாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன்

    மகாபாரதக் கதாபாத்திரங்களை அக்காலக் கட்டத்தில் அவர்களின் ஊடே பயணிக்கும் ஒருவன் விளக்குவதைப் போல விவரிக்கும் நூல். மகாபாரதத்தின் மீதான ஆர்வம் தணியாததால் இந்த நூலை வாசித்தேன். மகாபாரதக் கதை நிகழ்ந்த இடங்களுக்கு பயணம் செய்து அதன் விளைவாக தான் உணர்ந்தவற்றை கதாபாத்திரங்களின் ஊடே பயணம் செல்வது போல் விளக்கியிருக்கின்றார் ராமகிருஷ்ணன். படித்து முடிக்கும் பொழுது மகாபாரதத்தினை நம் கண்முன்னே கண்டதுபோல, அந்தக் காலக் கட்டத்திலே வாழ்ந்தது போல ஒரு உணர்வை ஏற்படுத்துவதே இந்நூலின் வெற்றி. இப்படியெல்லாம் மகாபாரதத்தினை…

  • மான்களுக்கும் கோபம் வரும் – மரபின் மைந்தன் முத்தையா

    மரபின் மைந்தன் முத்தையா அவர்களால் எழுதப்பெற்ற மற்றும் கவிதையரங்குகளில் வாசிக்கப்பெற்ற கவிதைகளின் தொகுப்பு. 2005 ஆம் ஆண்டு வெளிவந்தது. கற்பகம் புத்தகாலயம் வெளியீடு. இத்தொகுப்பில் என்னை ஈர்த்த கவிதை ‘புகார்கள் மற்றும் ஆலோசனைகள்’. ‘எந்தப்புகாரும் இல்லையென்றில்லைஎழுதும் தரமாய் இல்லையெம் புகார்கள்‘ ஏதேனும் நடைபெறுமிடத்திலேயே புகார் அளிக்க இயலும். ஆனால் இங்கே புகாரளிக்கும் அளவிற்கூ கூட செயல்கள் நடைபெறவில்லை என்பதன் அங்கதம் வெளிப்படும் தொணி என்னைக்கவர்ந்தது. அதே கவிதையில் ‘ஆனால் நண்பரே உம்மிடம் சொல்ல‌ஆலோசனைகள் உள்ளன எம்மிடம்கண்துடைப்புக்காக இங்கே…

  • | |

    இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு பாகம் 2

    India After Gandhi புத்தகத்தின் தமிழ்ப்பதிப்பின் இரண்டாம் பாகம். இப்புத்தகம் 1960 களிலிருந்து தொடங்குகிறது. 1964 ல் பிரதமர் நேருவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானது, அதனைத் தொடர்ந்து இந்திரா காந்தி பிரதமரானது, நேருவுக்கும் இந்திரா காந்திக்குமான முரண்பாடுகள், அதன் விளைவாக ஏற்பட்ட அவசரநிலைப் பிரகடனம், நிலையில்லாத ஆட்சிகள், மீண்டும் இந்திரா காந்தி, அவரது இளைய மகன் சஞ்சயின் அரசியல் பிரவேசம், அவருடைய சறுக்கல்கள் மற்றும் மரணம், பின்னர் ஏற்பட்ட கலவரங்கள்,…

  • |

    வாசிப்பில்

    தற்போது இந்த மூன்று புத்தகங்களையும் ஒரு சேர வாசித்து வருகிறேன். 1. இந்துத்துவத்தின் பன்முகங்கள் 2. Adolf Hitler: A Life From Beginning to End 3. Pride and Prejudice மூன்று விதமான புத்தகங்கள் ஒருசேர…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.