|

குர் ஆனும் நவீன விஞ்ஞானமும் ‍ – டாக்டர் ஜாகிர் நாயக்

நவீன விஞ்ஞானம் கண்டறிந்து நிறுவிய பல்வேறு உண்மைகள் ஏற்கனவே எவ்வாறு குர் ஆனில் விளக்கப்பட்டுள்ளது என்பதனை விவரிக்கும் புத்தகம். சாஜிதா புக் சென்டர் வெளியீடு. தமிழாக்கம் இப்னு ஹூசைன்.

விண்ணியல்,இயற்பியல்,புவியியல்,மண்ணியல்,சமுத்திரவியல்,உயிரியல், தாவரவியல், விலங்கியல், மருத்துவம், உடல் செயலியல், கருவியல், பொது விஞ்ஞானம் ஆகிய துறைகளின் இந்நூற்றாண்டு கண்டுபிடிப்புகளும் அறிதல்களும் எவ்வாறு ஏற்கனவே குர் ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதனை புத்தகம் முழுவதும் விவரிக்கிறார் ஜாகிர் நாயக்.

பெருவெடிப்புக் கோட்பாடு, பூமி தட்டையானது அல்ல‌ உருண்டையானது, கோள்கள் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றுகிறது, நீர் சுழற்சி முறை, அனைத்து உயிர்களும் தண்ணீரில் இருந்து உருவானது, நிலவின் ஒளி பிரதிபலிக்கப்பட்ட ஒளி, சூரியன் தன்னைத்தானே சுற்றுவது, விரிவடையும் பிரபஞ்சம், தாவர இனங்களிலும் பாலினம் உண்டு, கரு எவ்வாறு உருவாகின்றது, கருவிற்கு முதலில் செவித்திறனும் அதன் பின்னர் பார்வைத்திறனும் உண்டாகிறது போன்ற அறிவியல் உண்மைகள் பெரும்பாலும் கடந்த இரு நூற்றாண்டுகளுக்குள்ளாகவே நிருபிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றைப் பற்றியெல்லாம் ஏழாம் நூற்றாண்டிலேயே குர் ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளதை ஜாகிர் நாயக் அவர்கள் விவரிக்கிறார்.

மத நம்பிக்கை உள்ளவராகவோ அல்லது இல்லாதவராகவோ இருப்பினும் இப்புத்தகத்தில் உள்ள தகவல்களுக்காகவேனும் இப்புத்தகத்தினை கண்டிப்பாக வாசிக்கலாம். தேனிக்களின் நடனம், எறும்புகளின் வாழ்க்கை முறை, பறவைகளின் இடம்பெயர்வு போன்ற பல்வேறு தகவல்கள் இந்நூலில் உண்டு.

வாசிக்கவேண்டிய புத்தகம்.

Similar Posts

  • |

    கன்னி நிலம் – ஜெயமோகன்

    ஜெயமோகன் அவர்களால் எழுதப்பட்டது. மணிப்பூர் மாநில எல்லைப்பகுதியில் பணியாற்றும் ராணுவ அதிகாரி நெல்லையப்பனின் கதை, ஜெயமோகனுக்கே உரிய சொல்லாடல்களுடன். நெல்லையப்பன் மணிப்பூர் எல்லையில் பணியாற்றும் ராணுவத் தலைமை அதிகாரி. அவர்கள் ஒருநாள் தங்களுடைய வழக்கமான பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது காட்டுப்பகுதியில் ஒரு போராளிப்பெண்ணை கைது செய்கிறார்கள். அப்பெண்ணை கைது செய்து ராணுவ முகாமுக்கு கொண்டு வரும் வழியில் போராளிக்குழுக்களின் தாக்குதலுக்கு ஆளாகி, அவர்களில் சிலர் இறந்து விடுகின்றனர். இன்னும் சிலர் அவர்களிடம் கைதியாக மாட்டிக்கொள்கின்றனர். மீதமுள்ளவர்கள் ராணுவ…

  • ரஷ்யப்புரட்சி – என்.ராமகிருஷ்ணன்

    ரஷ்யாவின் ஜார் மன்னர்களின் ஆட்சி புரட்சியின் மூலம் ஒடுக்கப்பட்டு கம்யூனிச அரசு புரட்சியின் வழியாக 1917 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நிகழ்வே ரஷ்யப்புரட்சி. ஒற்றை வரியில் கடந்து சென்றாலும் 1900 களின் ஆரம்பகால ஆண்டுகளிலேயே ஜார் மன்னர்களுக்கு எதிரான கலகங்கள் தொடங்கி அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்று வந்தன. குறிப்பாக பண்ணையடிமை முறைக்கு எதிரான கலகங்கள். இதற்கிடையில் ஆங்காங்கே சில பெயர்களில் சில குழுக்கள் போராட்டங்களை ஒருங்கிணைத்தன. ஆனாலும் அவையெல்லாம் ஒருங்கிணையாமல் நடைபெற்றன. அச்சமயத்தில் மார்க்ஸ் ‍ எங்கல்ஸ்…

  • |

    மெளனத்தூதன் – வத்ஸலா விஜயகுமார்

    ஜெர்மனியக் கவிதைகளின் அறிமுகமும், ஜெர்மனியக் கவிதைகளின் மொழி பெயர்ப்புமே இந்நூல். வெளியீடு சந்தியா பதிப்பகம். ஆக்கம் வத்ஸலா விஜயகுமார். இப்புத்தகம் இரண்டு பாகங்களால் ஆனது. முதல் பாகம் ஜெர்மனி கவிதைகளின் வரலாறு குறித்தும் அதன் வெவ்வேறு காலத்தைய கவிஞர்கள் குறித்தும் அறிமுகம் செய்கிறது. இரண்டாவது பாகம் அவற்றுள் குறிப்பிடத்தக்க கவிதகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதனுடன் அக்கவிதைகளின் ஆசிரியர் பற்றிய சிறுகுறிப்பும் தரப்படுகிறது. இரண்டாவது பாகம் கவிதையின் மொழிபெயர்ப்பு ஆதலால் ஆர்வமுடன் வாசிக்க முடிகிறது. ஆனால் முதல் பாகம்…

  • |

    பாவம் இவள் ஒரு பாப்பாத்தி – ஜெயகாந்தன்

    ஜெயகாந்தன் அவர்களால் 1979 ஆம் ஆண்டில் எழுதப்பெற்ற குறு நாவல். ஊருக்கு வெளியேயுள்ள கரும்பு ஆலைக்கு அருகில் பல‌காரக்கடை நடத்தி வரும் பாப்பாத்தியம்மாளின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. அவள் ஓர் அனாதை. அவளுக்கென்ற இப்போது யாரும் இல்லை. அங்கு வரும் அனாதை எவரையும் தன்னோடு வைத்துக்கொள்கிறாள். அவர்கள் சில நாட்கள் இருந்த பின்னர் ஏதேதோ காரணங்களுக்காக சென்று விடுகின்றர். அவர்கள் சென்ற பின்னர் வெறோர் அனாதை வந்து சேர்கிறார்கள். பிராமணக்குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருப்பதாலும், ஆச்சாரங்களை தவறாது கடைபிடிப்பதாலும்…

  • எக்சைல் – சாரு நிவேதிதா

    தன்னுடைய வாசகர் வட்டத்தில் சேர்வதற்கு குறைந்தபட்சம் தன்னுடைய எக்சைல் நாவலைப் படித்திருக்க வேண்டும் என்ற அவருடைய தகுதி வரையறையின் காரணமாகப் படித்த நாவல். வாசிப்பின் முடிவில் என் மனநிலை, இப்போதைக்கு சாருவின் வாசகர் வட்டத்தின் இணைய முயல வேண்டாம் என்பதே. ஒருவேளை இதற்குத்தான் அந்த நாவலை வாசிக்கச் சொல்லியிருப்பாரோ என்னவோ? நாவலின் கரு இதுதான். மற்ற ஒருவரின் மனைவியை காதலிக்கும், உறவுகொள்ளும் ஒருவனின் வாழ்வியல் நிகழ்வுகள். அக்காலக் கட்டத்தில் நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் நாவலாக்கியிருக்கிறார். சாரு இந்நாவலில்…

  • |

    இந்திய வரலாறு ‍ – ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்

    ஆரியர்கள் வருகை முதலாக இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத அரசு கேரளத்தில் அமைந்தது வரையிலான இந்திய வரலாற்றை மார்க்சிய நோக்கில் விவரிக்கும் நூல். கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் முதலமைச்சரான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்களால் எழுதப்பெற்றது. எழுதப்பெற்ற ஆண்டு 1977. கிட்டத்தட்ட 3500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் நுழையும் ஆரியர்கள் இங்கு வாழ்ந்து வரும் சிந்து சமவெளி மக்களை வென்று தங்கள் ஆட்சியைத் தொடங்குகிறார்கள். அக்காலக் கட்டத்திலேயே ரிக் வேதம் இயற்றப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மெளரியர்கள்,குப்தர்கள்,…

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.