|

மெளனத்தூதன் – வத்ஸலா விஜயகுமார்

ஜெர்மனியக் கவிதைகளின் அறிமுகமும், ஜெர்மனியக் கவிதைகளின் மொழி பெயர்ப்புமே இந்நூல். வெளியீடு சந்தியா பதிப்பகம். ஆக்கம் வத்ஸலா விஜயகுமார். இப்புத்தகம் இரண்டு பாகங்களால் ஆனது. முதல் பாகம் ஜெர்மனி கவிதைகளின் வரலாறு குறித்தும் அதன் வெவ்வேறு காலத்தைய கவிஞர்கள் குறித்தும் அறிமுகம் செய்கிறது. இரண்டாவது பாகம் அவற்றுள் குறிப்பிடத்தக்க கவிதகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதனுடன் அக்கவிதைகளின் ஆசிரியர் பற்றிய சிறுகுறிப்பும் தரப்படுகிறது.

இரண்டாவது பாகம் கவிதையின் மொழிபெயர்ப்பு ஆதலால் ஆர்வமுடன் வாசிக்க முடிகிறது. ஆனால் முதல் பாகம் முற்றிலும் வாசிக்கவே முடியாத நடையில் உள்ளது. தகவல்களுக்காக ம‌ட்டும் வேண்டுமானால் வாசிக்கலாம் என்றாலும், அதற்கான சாத்தியமும் மிகக் குறைவு. ஏனெனில் தகவல்களுக்காக வாசிக்க விரும்பும் ஒருவர் இன்னும் ஆழமான ஒரு புத்தகத்தை வாசிப்பார். இந்நூலை வாசிக்க மாட்டார், ஏனெனில் இது அறிமுக நூலென கூறப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தின் நடை முற்றிலும் வாசிப்பதற்கான நடையே அல்ல. ஒரு துளிகூட ஆர்வம் தராத எழுத்து நடை.

நேரடியாக இரண்டாம் பாகத்தை வாசிக்கலாம்.

Similar Posts

  • |

    அர்த்தமுள்ள இந்து மதம் – கண்ணதாசன்

    கண்ணதாசன் அவர்களால் எழுதப்பெற்ற பத்து தனித்தனி பாகங்களின் மொத்த தொகுப்பு. தன் அனுபவத்தினைக் கொண்டு அதன் மூலம் இந்து மதத்தினை மனித வாழ்வின் செயல்களுக்கும், விளைவுகளுக்கும் விளக்கம் தருகிறார். ஒருவேளை இப்புத்தகத்தினை ஆரம்ப கால வாசகர்களும், ஆன்மீக வாசகர்களும் பெரிதும் விரும்பலாம். ஆனால் தீவிர இலக்கிய வாசிப்புக் கொண்டவர்கள் சலிப்படையவைக்கும் தட்டையான எழுத்து. சாதரணமாக வயதில் மூத்தவர்கள் கூறும் அறிவுரைகளின் தொகுப்பு எனக்கூறலாம், மற்றபடி இது இந்து மதத்தினை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் என்றெல்லாம் கிடையாது….

  • |

    திருப்பம் – கேசவதேவ்

    மலையாளத்தில் வெளிவந்த கேசவதேவின் ஒரு குறுநாவலையும், மாதவிக்குட்டியின் ஒரு சிறுகதையையும் தமிழில் சுரா அவர்கள் மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கிறார். அவ்விரண்டுமே இப்புத்தகம். முதல் குறுநாவல் திருப்பம், அப்போதைய சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தினை ஒட்டிய நாவல். கேரள ஈழவ சாதிகளுக்குள் நிகழும் ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. மாலேத்து சாணார் வீட்டில் வேலை செய்கிறார் கண்டப்பன். அவர்கள் இடத்தில்தான் இவன் வீடு கட்டிக்குடியிருந்தான். அவர்கள் தரும் கூலியோடு அவர்கள் தரும் எச்சில் சாப்பாடும் அவர்களுக்கு கிடைக்கும். அவரோடு அவர் மகன்…

  • |

    கயம் – குமார செல்வா

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த குமாரசெல்வாவினால் எழுதப்பெற்ற ஆறு சிறுகதைகளின் தொகுப்பு. காலச்சுவடு பதிப்பகம். 2009 ஆம் ஆண்டு வெளிவந்தது. நாகமலைகுறுவெட்டிஉயிர்மரணம்கயம்கிணறுவிடாலு இவையே அந்த ஆறு சிறுகதைகள். இவற்றுள் என்னை மிகவும் கவர்ந்த கதை உயிர்மரணம். கடாட்சம் தன் தந்தை சொன்ன சொல்லுக்காக தன் இரண்டு வயது மகன் றாபியைத் தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு மனைவி அஞ்சம்மாளோடு வெளியேறுகிறார். ஒன்றுக்கும் உதவாது என ஊர் நினைக்கும் ஓர் நிலத்தில் உழைத்து முன்னேறுகிறார். அவர் அடையும் உச்சம் அவர்…

  • | |

    மறைக்கப்பட்ட இந்தியா – எஸ்.ராமகிருஷ்ணன்

    எழுத்தாளர் ராமகிருஷ்ணனால் எழுதப்பெற்றது. ஆனந்த விகடனில் தொடர்ச்சியாக‌ வெளிவந்த க‌ட்டுரைகளின் தொகுப்பு. இந்திய வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையிலான கட்டுரைகள். இதுவே சாராம்சம். தனித்தனியாக வெளிவந்ததால் ஒட்டுமொத்த புத்தகத்திற்கு என்று ஒரு கச்சித வடிவம் கிடையாது. ஓர் ஆரம்பகால அல்லது இதுவரை வாசிப்பு பழக்கம் இல்லாத ஒருவருக்கான புத்தகம். ஏனெனில் வெறுமனே தட்டையான எழுத்து நடை. ஏற்கனவே வாசிக்கும் பழக்கம் உள்ளவருக்கு சலிப்பையே தரும். அதிலுள்ள தகவல்களும் அப்படியே. எந்த தகவலும் தினசரி செய்தித்தாள்களில் வரக்கூடிய அளவிற்கானவையே….

  • |

    கன்னி நிலம் – ஜெயமோகன்

    ஜெயமோகன் அவர்களால் எழுதப்பட்டது. மணிப்பூர் மாநில எல்லைப்பகுதியில் பணியாற்றும் ராணுவ அதிகாரி நெல்லையப்பனின் கதை, ஜெயமோகனுக்கே உரிய சொல்லாடல்களுடன். நெல்லையப்பன் மணிப்பூர் எல்லையில் பணியாற்றும் ராணுவத் தலைமை அதிகாரி. அவர்கள் ஒருநாள் தங்களுடைய வழக்கமான பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது காட்டுப்பகுதியில் ஒரு போராளிப்பெண்ணை கைது செய்கிறார்கள். அப்பெண்ணை கைது செய்து ராணுவ முகாமுக்கு கொண்டு வரும் வழியில் போராளிக்குழுக்களின் தாக்குதலுக்கு ஆளாகி, அவர்களில் சிலர் இறந்து விடுகின்றனர். இன்னும் சிலர் அவர்களிடம் கைதியாக மாட்டிக்கொள்கின்றனர். மீதமுள்ளவர்கள் ராணுவ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.