| |

உதிரிப்பூக்கள் – மகேந்திரன்

இயக்குநர் மகேந்திரன் அவர்களின் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த உதிரிப்பூக்கள் திரைப்படத்தின் ஒட்டுமொத்த திரைக்கதை வடிவம். 2004 ஆம் ஆண்டு மகேந்திரன் அவர்களாலேயே எழுதப்பெற்றது. அவரே நூலின் தொடக்கத்தில் கூறியது போல இந்தப்புத்தகத்தினை அத்திரைப்படத்தைப் பார்த்துப் பார்த்து எழுதியிருக்கிறார். அதனால் படத்தின் ஒவ்வொரு காட்சியும் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த புத்தகமும் உரையாடல் வடிவிலேயே உள்ளது. இடையிடையில் கதைசொல்லியாக வெளியில் வந்து காட்சியினை விளக்குகிறார் மகேந்திரன்.

இத்திரைப்படம், புதுமைப்பித்தனின் சிற்றன்னை குறுநாவலினைத் தழுவி எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் அது வெளிவந்த காலத்தில் மிகப்பெரிய பாராட்டுதல்களைப் பெற்றதாக இருந்திருக்கிறது. அப்பொழுது வெளிவந்த பாராட்டுச் செய்திகளை புத்தகத்தின் இறுதிப்பகுதியில் தொகுத்திருக்கிறார்கள். இயக்குநரே இப்புத்தகத்தினை எழுதியிருப்பதால், நாம் கவனிக்காமல் விட்ட காட்சிகளையும், அதன் உள்ளர்த்தங்களையும் இப்புத்தகத்தினை வாசிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வாசிக்கலாம்.

Similar Posts

  • இந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்

    ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள், அரசிலும், ஏனைய அரசு நிறுவனங்களிலும் புகுத்தும் இந்துத்துவ செயல்பாடுகளை விவரிக்கும் நூல். தனித்தனிக் கட்டுரைகளாக வெளிவந்தவற்றை ஒன்று சேர்த்து வெளியிட்டுள்ளனர். அதனால் இதற்கு ஒட்டுமொத்த வடிவமென்ற ஒன்று இல்லை. எந்தக் கட்டுரையை வேண்டுமானாலும் படிக்கலாம். இந்த நூலை அதன் தலைப்பின் பொருட்டே தேர்வு செய்தேன். காரணம் இந்நூல் இந்துத்துவத்தின் அனைத்து முகங்களையும் காட்டுமென்று. ஆனால் அதன் கோர முகத்தினை மட்டும் மிகவும் கோரமாகக் காட்டியிருக்கிறது. பெரும்பாலான தகவல்களும் குற்றச்சாட்டுக்களும் 1998…

  • Captain Phillips (film)

    Paul Greengrass ன் இயக்கத்தில் 2013 ல் வெளிவந்த திரைப்படம். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற அலாபாமா சரக்குக் கப்பல் கடத்தல் சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். Captain Richard Phillips ஆக நடித்திருப்பவர்  Tom Hanks. கொள்ளையர்களின் தலைவனான‌ Abduwali Muse ன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர்  Barkhad Abdi. தனக்கு இட்ட வேலைப்படி ஆயுதங்களில்லாத சரக்குக் கப்பலை ஓமனின் சாலாலா துறைமுகத்திலிருந்து கென்யாவின் மொம்பாசா துறைமுகத்திற்கு கொண்டு செல்ல பணியாளர்களுடன் புறப்படுகிறார் பிலிப்ஸ். சோமாலியக்…

  • |

    திருப்பம் – கேசவதேவ்

    மலையாளத்தில் வெளிவந்த கேசவதேவின் ஒரு குறுநாவலையும், மாதவிக்குட்டியின் ஒரு சிறுகதையையும் தமிழில் சுரா அவர்கள் மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கிறார். அவ்விரண்டுமே இப்புத்தகம். முதல் குறுநாவல் திருப்பம், அப்போதைய சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தினை ஒட்டிய நாவல். கேரள ஈழவ சாதிகளுக்குள் நிகழும் ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. மாலேத்து சாணார் வீட்டில் வேலை செய்கிறார் கண்டப்பன். அவர்கள் இடத்தில்தான் இவன் வீடு கட்டிக்குடியிருந்தான். அவர்கள் தரும் கூலியோடு அவர்கள் தரும் எச்சில் சாப்பாடும் அவர்களுக்கு கிடைக்கும். அவரோடு அவர் மகன்…

  • |

    சுந்தரராமசாமியின் கவிதைக் கலை – ராஜமார்த்தாண்டன்

    ராஜாமார்த்தாண்டன் அவர்களால் 2007 ஆம் ஆண்டில் எழுதப்பெற்றது. சுந்தரராமசாமி அவர்கள் எழுதிய கவிதைகள் மீதான விமர்சனமே இப்புத்தகம். பெரும்பாலும் கவிதைகள் பற்றிய விளக்கங்கள். ஏற்கனவே சுந்தரராமசாமியின் கவிதைகளை வாசித்தவர்கள் இப்புத்தகத்தினை வாசிக்கும்பொழுது அவர்கள் தொடாத சில பார்வைகைளை அறிந்து கொள்ள உதவும். வாசிக்கலாம்.

  • |

    Get To The Top – Suhel Seth (புத்தகம் – 1)

    இந்திய தொழிலதிபர் சுஹெல் சேத் அவர்களால் எழுதப்பெற்ற சுயமுன்னேற்ற‌ நூல். இந்தப்புத்தகம் பெரும்பாலும் நண்பர்களைப் பெறுவது எவ்வாறு, அவர்களை பேணுவது எவ்வாறு என்பதனை விளக்கும் ஒரு புத்தகம். சுஹெல் தொழிலதிபர் மட்டுமல்லாமல், பத்திரிக்கைகளில் தலையங்கம் எழுதக்கூடியவரும், தொலைக்காட்சித் தொகுப்பாளரும், பேச்சாளரும் கூட. ஆதலால் அவருக்கு இருக்கும் தொடர்புகள் மேல்மட்டத்திலானவையாக இருக்கின்றன. உதாரணமாக அருண் ஜேட்லி, விஜய் மல்லையா, மம்தா பானர்ஜி என. அத்தகைய அவருடைய மேல்தட்டு அனுபவங்களின் நிகழ்வுகளை விவரித்து அவற்றிலிருந்து இப்புத்தகத்திற்கான கருத்துக்களை ஒருங்கிணைத்துள்ளார். ஒரு…

  • |

    கடலுக்கு அப்பால் – ப.சிங்காரம்

    1950 களில் ப.சிங்காரம் அவர்களால் எழுதப்பெற்ற நாவல். இந்தோனேசியாவில் வாழும் தமிழ் மக்களுடைய வாழ்வியலே கதையின் கரு. இந்த நாவலே முதன்முதலாக ப.சிங்காரத்தால் எழுதப்பெற்ற நாவல். இந்நாவலின் தொடர்ச்சியாகவே புயலிலே ஒரு தோணியை எழுதினார். ஆதலால் இந்த நாவலுக்கும் புயலிலே ஒரு தோணிக்கும் ஓர் இணைப்பை உணரலாம். அதே கதை மாந்தர்கள், அதே காலகட்டம். ஆனால் சற்றே வேறான கதைக்களம். வேலைக்காக இந்தோனேசியாவிலுள்ள ஒரு செட்டியாரிடம் அடுத்தாள் வேலைக்கு செல்கிறான் செல்லையா. அவனுடைய செட்டியார் முதலாளியும் அவனுடைய…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.