Fail Fast Fail Often

ரியான் பாபினக்ஸ் மற்றும் ஜான் க்ரும்போட்ஸ் என்ற இருவரால்  எழுதப்பெற்ற சுய முன்னேற்ற புத்தகம் Fail Fast Fail Often. தற்போதைய அறிவியல் உலகின் செயல்பாடுகளின் தாரக மந்திரம் என்பது உடனடி செயல்பாடு, பின்னர் மேம்பாடு என்பதே. இதுவே கூகுள், ஃபேஸ்புக் போன்ற தலைசிறந்த நிறுவனங்களின் இன்றைய செயல்முறை. அதாவது முற்றிலும் திட்டமிட்டு அல்லது முழுமையாக தயார் செய்துவிட்ட பின்னர்தான் ஒரு செயலைத் தொடங்கவேண்டும் என்ற செயல்பாடு இக்காலத்திற்கு ஏற்றதல்ல என நிறுவப்பட்டு விட்டது. அதனால் உடனடியாக வேலை செய்யத்துவங்குங்கள், அதிலுள்ள குறைகளைக் களைந்து மீண்டும் மேம்படுத்துங்கள். ஒவ்வோர் தோல்வியிலிருந்தும் மேலே முன்னேறிச் செல்லுங்கள் என்பதே இப்புத்தகத்தின் ஒட்டுமொத்தக் கருத்து. அதனை பல்வேறு உதாரணங்கள் மற்றும் சிறு பயிற்சிகள் மூலம் இப்புத்தகம் விவரிக்கிறது. வாசிப்பதற்கான புத்தகம்.

Similar Posts

  • |

    கடல்புரத்தில் – வண்ணநிலவன்

    வண்ணநிலவன் அவர்களால் எழுதப்பெற்றது. பிலோமி என்ற ஓர் கடற்கரை கிராமத்துப் பெண் மற்றும் அவளது உறவுகள் நண்பர்கள் பற்றிய நாவல். என்னை மிகவும் கவர்ந்த ஓர் அம்சம் கதாபாத்திரங்களை லட்சியவாதிகளாக எல்லாத் தருணங்களிலும் காட்டும் பொய்மை இந்த நாவலில் இல்லை. மிக இயல்பான மனிதர்களைப் போல சில சமயம் லட்சியம் பேசும் மனிதர்கள் வேறு சில சமயங்களில் யதார்த்தம் பேசுகிறார்கள். ஒரு சமயத்தில் தன் மனைவியை பயங்கரமாகத் திட்டும் மிக்கேல், மற்றோர் சமயம் அவளை நினைத்து பெருமை…

  • |

    Wings Of Fire – A.P.J. Abdul Kalam and Arun Tiwari

    This book is an autobiography of Dr.A.P.J.Abdul Kalam. This book describes the story of a young boy born in a middle class family with greater dreams. This book remains as a guide to many young people with big dreams. This book is the success story of Dr.A.P.J.Abdul Kalam, that describes the struggles he faced throughout…

  • |

    Home Deus – Yuval Noah Harari

    This books follows the popular book ‘The Sapiens’ from the same author Yuval Noah Harari. If you have not read the book ‘The Sapiens’ it should be read first. So that it will give better picture on understanding this book. The Sapiens talks on how the homo sapiens evolved as human being in detail. This…

  • மனுஷ்யபுத்திரனின் பசித்த பொழுது

    மனுஷ்யபுத்திரனின் கவிதைத்தொகுப்பு – பசித்த பொழுது. படிக்கும் பொழுது “இதெல்லாம் கவிதைதானா? வெற்று வசனங்கள்தானே ?” என கேட்கத்தூண்டும் வண்ணம் பல கவிதைகள் இருக்கிறது. ஒருவேளை அவைதான் சரியான கவிதைகளோ? நமக்குத்தான் அதற்கான ஞானம் வரவில்லையோ என்ற எண்ணமும் இப்போது வரை உண்டு. உங்களுக்கும் தோன்றினால் நீங்களும் என் இனமே.  பெரும்பாலும் தன் வாழ்வின் நிகழ்வுகளைத்தான் கவிதைகளாக வடித்திருக்கிறார். சமூக பொருளாதார சித்தாந்தங்களெல்லாம் ஒன்றுமில்லை. ஒன்றுமேயில்லை எனலாம். மொத்தம் உள்ள 236 கவிதைகளில் 99% கவிதைகளை காமம், மழை,…

  • |

    ரஷ்யப் புரட்சி – மருதன்

    1917 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் ஜார் மன்னரின் ஆட்சி போராட்டத்தின் மூலம் கவிழ்க்கப்பட்டு, லெனின் தலைமையில் கம்யூனிச அரசு அமைந்ததை விவரிக்கும் சிறு புத்தகம். மருதன் அவர்களால் எழுதப்பெற்றது. ஜார் மன்னராட்சியில் தொழிலாளர்களின் வாழ்வு பேணப்படாமால் கீழ் நிலைக்கு சென்று கொண்டிருந்ததே போராட்டத்தின் ஆரம்பகாலக் காரணம். சரியான ஊதியமின்மை, முறைப்படுத்தப்படாத வேலை நேரங்கள் எனப் பல துன்புறல்களுக்கு ஆளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட அதன் ஒருபகுதியாக லெனினின் சகோதரனும் அரசாங்கத்தால் கொல்லப்படுகிறார். அதன் பின்னர் போராட்டத்தில் தன்னை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.