ரஷ்யப்புரட்சி – என்.ராமகிருஷ்ணன்

ரஷ்யாவின் ஜார் மன்னர்களின் ஆட்சி புரட்சியின் மூலம் ஒடுக்கப்பட்டு கம்யூனிச அரசு புரட்சியின் வழியாக 1917 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நிகழ்வே ரஷ்யப்புரட்சி. ஒற்றை வரியில் கடந்து சென்றாலும் 1900 களின் ஆரம்பகால ஆண்டுகளிலேயே ஜார் மன்னர்களுக்கு எதிரான கலகங்கள் தொடங்கி அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்று வந்தன. குறிப்பாக பண்ணையடிமை முறைக்கு எதிரான கலகங்கள்.

இதற்கிடையில் ஆங்காங்கே சில பெயர்களில் சில குழுக்கள் போராட்டங்களை ஒருங்கிணைத்தன. ஆனாலும் அவையெல்லாம் ஒருங்கிணையாமல் நடைபெற்றன. அச்சமயத்தில் மார்க்ஸ் ‍ எங்கல்ஸ் இருவரின் சிந்தனைகளும் பரவலாகப் பரவிக்கொண்டிருந்தன.

இந்நிலையில் லெனினுடைய பிரவேசம் ஆரம்பமாயிற்று. தன்னுடைய சகோதரனின் வாயிலாக மூலதனம் புத்தகம் அவருக்கு அறிமுகமாயிற்று. இதற்கிடையில் அவருடைய சகோதரர் ஜார் மன்னனைக் கொலை செய்ய முயற்சி செய்தமைக்காக தூக்கிலிடப்பட்டார்.

இதன் பின்னர் தீவிர புரட்சியில் ஈடுபட்ட லெனின் மாணவர்களை தீவிர அரசியல் புரட்சி வட்டத்தில் இணைத்தமைக்காக நாடு கடத்தப்பட்டார். அங்கே பல்வேறு மார்க்சிய நூல்களை வாசித்த லெனின் பின்னர் விடுதலைக்குப்பின்னர் மற்றுமொரு மார்க்சியக் குழுவை உருவாக்கினார்.

இதன் பின்னர் பிளக்கானோவ், மார்க்ஸ் போன்ற கருத்தாக்க வாதிகளை பல்வேறு சமயங்களில் சந்தித்திருந்த லெனின் ஜார் அரசை வீழ்த்துவதற்காக தொழிலாளர் போராட்டங்கள் வாயிலாக முயன்றார். பல்வேறு பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிய, ஒவ்வொரு புதிய போராட்டமும் அதற்கு முந்தைய போராட்டத்தினை விட வீரியமாக இருந்தது. ஜார் அரசாங்கத்திற்கு தெரியாமல் மறைந்திருந்து இத்தகைய நடவடிக்கைகளில் சில காலம் ஈடுபட்டார். பின்னர் 1917 ல் நடைபெற்ற போராட்டத்தில் ஜார் அரசு நீக்கப்பட்டு கம்யூனிச அரசு லெனின் தலைமையில் அமைக்கப்பட்டது.

ரஷ்யப்புரட்சி தொடர்பான நிகழ்வுகளை தொகுத்து இந்நூலில் விவரித்திருக்கிறார் என்.ராமகிருஷ்ணன். ஒட்டுமொத்த உலகில் அமைக்கப்பட்ட முதல் கம்யூனிச அரசு அது. மிக விரிவாக வாசிக்கவேண்டிய நிகழ்வாக இருப்பினும் ஆரம்ப கால புரிதலுக்காக இந்த புத்தகத்தினை வாசிக்கலாம்.

Similar Posts

  • |

    புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்

    1960 களில் ப.சிங்காரம் அவர்களால் எழுதப்பெற்ற நாவல். இந்தோனேசியாவில் வாழும் தமிழ் மக்களுடைய வாழ்வியலே கதையின் கரு. அத்தோடு கதை மாந்தர்களின் நினைவின் வழியாக இந்திய கிராமங்களினுடைய வாழ்வியலும் விவரிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் சிவகங்கை மற்றும் அதன் சுற்று வட்டாரக் கிரானங்கள். நாவல் பாண்டியன் என்னும் இளைஞனைச் சுற்றியே நகருகின்றது. பாண்டியன் பிழைப்பிற்காக இந்தோனேசியா சென்று, பின்னர் இந்தோனேசியாவிலிருந்து மலேயாவிற்கு செல்வது, அங்கே நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்வது என கதை நீள்கிறது. நாவல் நடைபெறும் காலம்…

  • மகாபாரதம்:அறத்தின் குரல் – நா.பார்த்தசாரதி

    நா.பார்த்தசாரதி அவர்களால் 1964 ஆம் ஆண்டு தமிழில் எழுதப்பெற்ற காவியம். அரைகுறையாகத் தெரிந்த மகாபாரதத்தினை முழுமையாகத் தெரிந்து கொள்ள விரும்பி வாசித்த நூல். வாசிப்பின் முடிவில் புலப்படுவதென்னவோ முழு மகாபாரதத்தையும் புரிந்து கொள்வதென்பது இயலாத ஒன்று என்பதையே.  எந்த ஒரு மகாபாரதப் பதிப்பினையும் எழுதப்பெற்ற ஆசிரியரின் பார்வையில் மகாபாரதம் எனப் பொருள் கொள்வதே சரி எனலாம். அத்துணை பெரிய காவியம். எண்ணிலடங்கா கதாபாத்திரங்கள். படிக்க படிக்க திகட்டாத, தீராத காவியம். இந்து மரபின் உயரிய கருத்தான அறத்தை…

  • | |

    தற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து

    அராத்து அவ்வப்போது ஃபேஸ்புக்கில் எழுதிய குறுங்கதைகளை உயிர்மை பதிப்பகம் நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். எதேச்சையாக கண்ணில் பட்ட நூல், இந்நூலின் வெளியீட்டு விழாவில் சாருவும், ஜெயமோகனும் கலந்துகொண்ட நினைவு. அதனால் இப்புத்தகத்தை வாசிக்கலாம் என நினைத்து எடுத்து வந்தேன். ஒட்டுமொத்த நாவலின் பெரும்பான்மை பேசுபொருள் உடலுறவு. காமம் அல்ல. இதற்கு பாலுறவுக் கதைகளாகவே வெளியிடப்படும் கதைகள் எவ்வளவோ பரவாயில்லை. அவர்கள் அவர்களுடைய கதைகளை உலகத்தர நாவல் என்றோ அல்லது தமிழின் முதல் ஃபோர்னோ நாவல் என்றோ இன்ன பிற…

  • |

    ஏறுவெயில் – பெருமாள் முருகன்

    எழுத்தாளர் பெருமாள் முருகனால் எழுதப்பெற்று 1991 ஆம் ஆண்டில் வெளிவந்த நாவல். இது அவருடைய முதல் நாவல். நகரமயமாதலின் பொருட்டு தன்னுடைய பூர்விக நிலத்தைவிட்டு செல்லும் ஒரு கிராமத்து குடும்பத்தின் கதை. கதைக்களம் நிகழ்வது 1980 களில். பொன்னையாவின் தாத்தாவிற்கு மூன்று மகன்கள். நிலத்தினை அரசாங்கம் எடுத்துக்கொள்வதன் பொருட்டு நிலத்தை விற்றுவிட்டு அக்காசை மூன்று மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு தன் மனைவியோடு அருகில் ஏரிக்கு பக்கத்தில் தங்கிவிடுகிறார் தாத்தா. இரண்டு மகன்கள் அவர்களின் மாமனார் வீட்டோடு சென்றுவிட…

  • |

    The Psychology of Money – Morgan Housel

    Morgan Housel ஆல் எழுதப்பெற்ற நூல். வெளிவந்த ஆண்டு 2020.நம்முடைய பொருளாதார முடிவுகளை எடுப்பதில் நம்முடைய உணர்வுகளும், நம்பிக்கையும், எண்ணங்களும் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதினை விளக்கக்கூடிய‌ நூல். குறிப்பாக நம்முடைய கடந்த கால அனுபவங்கள், நம்பிக்கைகளே பெரும்பாலும் நம்முடைய பொருளாதார முடிவுகளை எடுப்பதில் முக்கியப்பங்காற்றுகின்றன என்பதனை விளக்குகிறார். பணத்தினைப் பற்றிய நம்முடைய எண்ணங்களை மாற்றக்கூடிய ஒரு புத்தகம். உண்மையில் செல்வம் என்ற ஒன்று நம்மால் காண முடியாத ஒன்று. நம்மால் எதை செய்ய முடியும் என்பதற்கும்,…

  • |

    அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்

    தி ஜானகிராமன் அவர்களால் எழுதப்பெற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் 1966ல் வெளிவந்த ஒர் நாவல். அப்பு வேதம் படிப்பதற்காக திருச்சிக்கு அனுப்பபடுகிறான். அங்கே பதினாறு வருடங்கள் வேதம் படித்தபின்னர் தன்னுடைய சொந்த ஊருக்குப் புறப்படத்தயாராகிறான். இன்னும் சில நாட்களில் கிளம்ப வேண்டும் என்ற நிலையில், அம்மடத்தினை நிர்வகிக்கும் பவானியம்மாளின் தம்பி மகள் இந்து தான் அப்புவை விரும்புவதாகக் கூறுகிறாள். இந்து ஏற்கனவே திருமணமாகி கணவனை இழந்தவள். தன் அத்தை பவானியம்மாளோடு வசிக்கிறாள். அவள் சிறுவயதிலிருந்தே அப்புவுடன் வளர்ந்தவள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.