தண்ணீர்

சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த புகைப்படம் இது. நெல் வயலுக்கு டிராக்டரில் கொண்டுவந்து நீர் பாய்ச்சுகிறார்கள் இல்லை ஊட்டுகிறார்கள். தமிழகத்தின் தேனி மாவட்டத்தில்தான் இந்த நிலை. கேரள எல்லையை ஒட்டி மேற்கு மலைத்தொடருக்கு அருகே இருக்கும் மாவட்டத்திலேயே இந்நிலையென்றால் மற்ற மாவட்டங்களின் நிலைகளை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கிக்குடிப்பதையே மிகப்பெரிய ஆச்சரியமாகப் பார்த்தவன் நான். நெல்வயலுக்கு நீர் ஊட்டுவதைப் பார்க்கும்பொழுது இனம்புரியாத வலி இந்த நெஞ்சுக்குள்.

எப்பொழுதாவது எங்கள் கிராமத்தில் இருந்து சென்னைக்கோ அல்லது பிற ஊர்களுக்கோ செல்லும் பொழுது வழியில் பேருந்து எங்காவது நிற்கும்பொழுது அண்டாவில் குடிநீர் வைத்திருப்பார்கள், ஒரு சங்கிலி டம்ளரோடு. அதைத்தான் பெரும்பாலும் எல்லோரும் குடிப்பார்கள். யாராவது ஒரு சிலர் குடிநீர் பாட்டிலை வாங்குவார்கள். அவர்களை ஆச்சரியமாகப் பார்ப்பேன். அவர்கள் தங்களை மேன்மை பொருந்திய மக்களாக நினைத்திருப்பார்களோ என்னவோ? குடிக்கும் நீரை காசு குடுத்து வாங்குவார்களா என்ன என்று எனக்குத் தோன்றும்.

ஆனால் இன்று நிலைமை அப்படியா என்ன? எந்த இடத்திலும் அண்டாவும் இல்லை, தண்ணீரும் இல்லை. ஆனால் குடிநீர் பாட்டில்கள் இருக்கின்றன. யாரைக் குற்றம் கூற முடியும்? எல்லோர் பக்கமும் அவரவர் நியாயங்கள், காரணங்கள். வாழ்க குடிநீர் பாட்டில் கம்பெனிகள்.

ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் வெளியிட்டுள்ள குடிநீர் பற்றாக்குறை தொடர்பான அறிக்கையின்படி உலகின் பதினோரு நகரங்கள் விரைவில் நீரற்ற நிலைக்கு செல்லப் போகிறதாம். அதில் ஒன்று பெங்களூர் நகரமாம். இதனை ஐக்கிய நாடுகள் ஏன் சொல்ல வேண்டும்? நானே சொல்கிறேன், இதை வாசிக்கும் நீங்களும் நானும் மரணிப்பதற்குள் நீர் இல்லா நிலையைப் பார்த்துவிட்டுதான் சாகப்போகிறோம். பெங்களூருதானே நம்ம ஊருக்கென்ன என்று நினைக்காதீர்கள். பெங்களூரு திங்கட்கிழமை என்றால் சென்னை வெள்ளிக்கிழமை, உங்கள் ஊரும் என் ஊரும் அடுத்த வெள்ளிக்கிழமை, அவ்வளவுதான்.

நாளுக்கு நாள் நம்முடைய ஏரிகளும் சுருங்கிக்கொண்டே வருகின்றன. குடியிருப்புகளை ஆக்கிரமித்திருந்த ஏரிகளை மக்கள் மீட்டுக்கொண்டு வருகிறார்கள் போலும்.

வருடா வருடம் அரசு ஏரிகளின் தூர்வார்லுக்கென ஒதுக்கும் தொகையை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனால் ஏரிகளின் கொள்ளளவும், பரப்பளவும் மட்டும் குறைந்து கொண்டே போகின்றது. இந்த கணக்கு மட்டும் எனக்குப் புரிபடுவதே இல்லை.

யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்?

Similar Posts

  • |

    டிசிஎஸ் ‍- ஊழியர் வெளியேற்றம்

    எங்கு பார்த்தாலும் டிசிஎஸ் நிறுவனத்தின் வேலை நிறுத்தத்தினைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்னதான் அங்கே நடக்கிறது என்ற உண்மை நிலை தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். போதாதற்கு சமூக வலைத்தளம், வாட்ஸ் அப் போன்றவற்றில் அதனைப் பகிர்ந்து கொள்ளவும் செய்கின்றனர். இதனால் சமீபத்திய நாட்களில் தேசத்தில் பெரும்பாலானவர்களால் விவாதிக்கப்படும் செய்தியாயிருக்கிறது. இச்சூழ்நிலையில் மென்பொருள் துறை மீது எப்பொழுதுமே வெறுப்போடு இருக்கும் ஒரு சாரர், இதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு தங்களின் ஆதங்கத்தையெல்லாம் கொட்டித் தீர்க்கின்றனர்….

  • |

    கேள்வி பதில்

    மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, மிகப்பெரிய திட்டமிடலுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். அதனால் தங்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாமல் தூரத்து நிலவாகவே வைத்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். இருந்தாலும் இந்த கேள்வி சமீபத்திய நாட்களில் மிக அதிகமான முறை நினைவில் எழும்புவதால் இக்கடிதம். என்னுடைய வேலையும் என்னுடைய புத்தக வாசிப்பும் வேறு வேறு வழிகள். ஆனால் நான் வாசிக்கத் தொடங்கிய பின்னர் என் வேலையினை மிக எளிதாகமாற்றிக்கொண்டேன். வேலையின் அளவு ஐந்து மடங்கிற்கும் அதிகமாகி இருக்கிறது. மிக முக்கியமாக மகிழ்ச்சியாக இருக்கிறேன். எளிமையாக…

  • |

    சுதந்திர தின‌ வாழ்த்துக்கள்

    70 ஆவது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின‌ வாழ்த்துக்கள். முதலில் நம் அனைவரிடமும் ஓர் கேள்வி. நாம் உண்மையாகவே சுதந்திரதினத்தைக் கொண்டாடுகிறோமா, இல்லை அதனை ஓர் விடுமுறை நாளாக மட்டும் எடுத்துக்கொள்கிறோமா? உண்மையான பதில் நம்மில் பெரும்பாலானோர்க்கு உண்மையில் அது விடுமுறை தினம் மட்டுமே. நாம் மற்ற பண்டிகைகளான தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போலவா சுதந்திர தினத்தினைக் கொண்டாடுகிறோம்? இல்லவே இல்லை. நண்பர்களே! நாம் பெற்ற அந்த சுதந்திரத்தால்தான் இன்று நாம் நாம்…

  • ஆசானிடமிருந்து

    இது ஏன் நிகழ்கிறது? இச்செயலை இச்சமூகம் sanction செய்கிறது. இல்லை என்றால் இவர்கள் பதறுவார்கள் இல்லையா? ஊழலை ஒழுங்கின்மையை ஒவ்வொரு கணுவிலும் அங்கீகரிக்கும் மக்களாக நாம் ஆகிவிட்டோம். அந்த மனநிலையைத்தானே அத்தனை அமைப்புகளும் செய்கின்றன அன்ணா ஹசாரே ஊழலுக்கு எதிராகக் கிளர்ந்தபோது இங்கே கிண்டல் செய்தவர்கள் தானே அதிகம்? அவர்கள் உருவாக்கி நிலைநிறுத்தும் மனநிலை அல்லவா ஜெயலலிதாவும் கருணாநிதியும் உருவாகி நீடிக்கக் காரணம் அந்த மனநிலைக்கு எதிரான நம்பிக்கை தளரான கருத்துப்போர்தான் ஒரெ வழி ஜெ

  • | |

    தேர்வு முடிவுகள்

    பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளிவந்திருக்கின்றன. இந்த வருடம் வழக்கத்தைவிட அதிகமாக தேர்ச்சி விகிதம், மதிப்பெண்கள் பெற்றுள்ளதை தேர்வு முடிவுகள் காட்டுகின்றன. அனைவரையும் வாழ்த்தும் அதே வேளையில் இந்த தேர்வு முடிவுகளின் உண்மை நிலையை நாம் விவாதிக்க வேண்டியுள்ளது. முதலாவது தமிழகத்தைப் பொறுத்த வரையில் தேர்ச்சி விழுக்காடு என்பதனை பெரும்பாலும் கடந்த ஆண்டின் தேர்ச்சி விழுக்காட்டிலிருந்து அதிகபட்சம் ஐந்து விழுக்காட்டிற்குள் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள். கடந்த ஆண்டுகளின் தேர்ச்சி விகிதத்தை…

  • எனது இந்தியா! (உப்பு வேலி ) – எஸ். ராமகிருஷ்ணன்

    பெர்லின் சுவரைவிட, சீனப் பெருஞ்சுவரைவிட மிகப் பெரிய முள் வேலி ஒன்று இந்தியாவின் குறுக்காக அமைக்கப்பட்ட கதை அறிவீர்களா? 4,000 கி.மீ நீளமும் 12 அடி உயரமும் கொண்டது அந்த வேலி. வரலாற்றின் இருட்டுக்குள் புதையுண்டு போயிருந்த இந்தியாவின் நீண்ட முள் வேலி ஒன்று சமீபத்தில் உலகின் கவனத்துக்குள் வந்திருக்கிறது. இது தெரியாது. The Great Hedge of India என்ற, ராய் மார்க்ஸ்ஹாமின் மகத்தான ‘சுங்க வேலி’ எனும் புத்தகம் இந்திய வரலாற்றியல் ஆய்வில் மிக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.