| |

லஜ்ஜா – அவமானம்

1993 ஆம் ஆண்டு வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் அவர்களால் எழுதப்பட்ட நாவல். 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு வங்கதேசத்தில் நடைபெற்ற கலவரங்களின் போது ஒரு இந்து குடும்பத்தின் நிலையே நாவல். அந்தக்குடும்ப நபர்கள் கற்பனை எனக் கூறப்பட்டிருந்தாலும் விவரிக்கப்படும் சம்பவ‌ங்கள் அனைத்தும் உண்மை சம்பவங்களே. இதற்காக  சம்பவங்களை ஆதாரத்தோடு விளக்கியுள்ளார்.

கதை இதுதான்.

பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் சுதந்திரம் பெறுவதற்கான போராட்டங்களில் பங்கு பெற்ற பல இந்துக்களில் சுதாமயும் ஒருவர். பாகிஸ்தானிலிருந்து சுதந்திரம் பெற்ற 1972 க்குப் பின்னர் ஆறு ஆண்டுகள் கழித்து வங்கதேசத்தின் அரசியல் சாசன‌ம் மாற்றி இஸ்லாமிய தேசமாக அறிவிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இந்துக்கள் மீது பல்வேறு விதமான அடக்குமுறைகள் ஏவப்படுகின்றன. பல லட்சம் இந்துக்கள் தன் தாய் நாட்டை விட்டு இந்தியாவுக்கு அகதிகளாக செல்கின்றனர். ஆனால் சுதாமய் எக்காரணம் கொண்டும் தன் தாய் நாட்டை விட்டு போக மறுத்து அங்கேயே வாழ்கிறார்.

சுதாமய் ஒரு டாக்டராக இருந்தவர். வயதாகி விட்டதால் வீட்டிலிருந்த படியே சிலருக்கு வைத்தியம் பார்த்து சம்பாதிக்கிறார். அவர் இந்து என்பதால் அதிகம் பேர் வருவதில்லை. அவருடைய மனைவி கிரண்மயிக்கு வீடே உலகம். எந்நேரமும் தன் மகள், மகனுக்கு ஏதும் நேர்ந்துவிடக்கூடாது என்ற பதைபதைப்போடு வாழ்பவர். மகன் சுரஞ்சன் முப்பது வயது இளைஞன், வேலையில்லாமல் ஊரில் நடைபெறும் கலவரங்களைக் கண்டு ஒன்றும் செய்யமுடியவில்லை என விரக்தியில் வாழ்பவன். அவன் தங்கை மாயா அமைதியாக, கலவரமின்றி வாழ விரும்புபவள், அதற்காக அவள் ஒரு முஸ்லிம் இளைஞனைக் காதலித்தாள். தன்னை ஒரு முஸ்லிம் போலக் காட்டிக்கொள்ளக் கூடியவள்.

இந்நிலையில் 1992 டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் வங்க தேசத்தில் இருக்கும் இந்துக்கள் மீது வெறித்தனமான தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்துக்களின் கடைகள், இந்துப் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் தாக்கப்படுகின்றனன‌ர். இந்துக்கள் மீதான தாக்குதல் தீவிரமாகிறது. உறவினர்கள் எல்லோரும் வற்புறுத்தியும், மனைவி, மகள் கெஞ்சியும் சுதாமய் இந்தியாவுக்கு செல்ல மறுத்து தன் தேசம் என உரிமை கொண்டாடுகிறார். இந்நிலையில் அனைவரும் பிரச்சினை சீராகும் வரை முஸ்லிம் நண்பர்கள் வீட்டில் ஒளிந்து கொள்ளும்படி கூறும் யோசனையையும் நிராகரிக்கிறார்.

இந்நிலையில் அவருக்கு பக்கவாதம் வந்து விடுகிறது. சுரஞ்சன் எந்த பொறுப்புமில்லாமல் வீதிகளில் விரக்தியோடு சுற்றித் திரிகிறான். எங்கும் தாக்குதல்கள். இந்நிலையில் ஒரு கும்பல் சுதாமய் வீட்டுக்குள் புகுந்து வீட்டை அடித்து நொறுக்கி விட்டு மாயாவைத் தூக்கிச் சென்றுவிடுகிறது. யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. விஷயம் அறிந்து சுரஞ்சன் முழு நகரமும் நண்பர்கள் உத‌வியோடு தேடுகிறான். கடைசி வரை மாயா கிடைக்காத நிலையில் வீடே அலங்கோலமாகிறது. சுரஞ்சனும் அளவின்றி குடிக்க ஆரம்பித்து விடுகிறான். இந்நிலையில் சுதாமய் வங்கதேசத்தை விட்டு புறப்படுவதாக நாவல் முடிகிறது.

இந்த நாவல் பங்களா தேசத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்திற்காகத்தான் தஸ்லிமா நஸ்ரின் நாட்டை விட்டு வெளியேறினார்.

Similar Posts

  • தேவை நிரந்தர ஆட்சி

    ஒருவழியாக டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி என்பது முடிவாகிவிட்டது. காங்கிரஸை எதிர்த்து அரசியல் செய்து அவர்கள் ஆதரவிலேயே ஆட்சியும் அமைக்க வேண்டிய சூழ்நிலை. ஆம் ஆத்மி காங்கிரஸ் நிபந்தனை இல்லாத ஆதரவு அளித்திருப்பதாகக் கூற, ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க முடிவு செய்து அறிவிப்பு வெளியானவுடன் ஷீலா தீட்சித்தோ நிபந்தனையற்ற ஆதரவு என்று நாங்கள் கூறவில்லை என முதல் குண்டை போட்டிருக்கிறார். மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் செயல்பாட்டின் அடிப்படையில் ஆதரவு, ஆறு மாதத்தில் அளிக்கப்பட்ட…

  • புத்தகம் 2 : அப்புசாமியும் ஆப்ரிக்க அழகியும்

    பாக்கியம் ராமசாமியால் எழுதப்பெற்று குமுதத்தில் 1963 களில் தொடர்கதையாக வெளிவந்த நகைச்சுவைத் தொடர். பின்னர் மொத்த நாவலாக வெளியிடப்பட்டது. அப்புசாமித் தாத்தா தன்னுடைய மனைவி சீதாவுடன் நாள்தோறும் சண்டையிட்டு வருபவர். சாதாரண விளையாட்டுச் சண்டைகள். ஒருமுறை அவருடைய தாடியை அவர் மழிக்கவில்லை என்பதற்காக அவரைத் தன்னுடன் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லாமல் விடுகிறாள் சீதா. அதனால் தான் இனிமேல் தாடியை எடுக்கப்போவதில்லை என சபதம் செய்கிறார் அப்புசாமி. இந்நிலையில் இந்தியாவுக்கு வருகை தரும் ஒரு ஆப்ரிக்க இளவரசி…

  • ஃபாரன்ஹீட் 451

    கதை எதிர்காலத்தில் நடைபெறுவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் போர் ஏற்படுவது போன்ற சூழல். ஆதலால் அரசாங்கம் யாரும் புத்தகங்களை வைத்திருப்பதையும், வாசிப்பதையும் தடை செய்கிறது. மோண்டாக் ஒரு தீயணைப்புத் தொழிலாளி. அவனுடைய மேலாளர் பியாட்டி. அவர்களது பணி யார் வீட்டிலெல்லாம் புத்தகங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதோ அவற்றைக்கண்டுபிடித்து எரிக்க வேண்டும். அதுவே அவர்களுக்கு இடப்பட்ட ஆணை. மக்கள் பெரும்பாலானவர்கள் வாசிக்கும் பழக்கத்தையே விட்டுவிட்டவர்களாக இருக்கிறார்கள். அன்றைய தொலைக்காட்சிகள் பார்ப்பவர்களோடு உரையாடும் தொழில்நுட்பம் கொண்டவைகளாக இருக்கின்றன. எனவே எல்லோரும் முற்றிலும்…

  • |

    உன்னோடு ஒரு நிமிஷம் ‍ – வெ.இறையன்பு

    வெ. இறையன்பு அவர்களால் சுட்டி விகடனில் எழுதப்பெற்று தொடராக வெளிவந்த சுயமுன்னேற்றத் தொடர். சுட்டி விகடனில் வெளிவந்த‌தால் முற்றிலும் குழந்தைகளை நோக்கி எழுதப்பட்ட கட்டுரைகள். பெரும்பாலும் நீதி போதனைக் கட்டுரைகள். அத்தோடு அந்தந்த காலகட்டத்தின் நிகழ்வுகளை ஒட்டி எழுதப்பட்டவை. உதாரணமாக தேர்வு சமயத்தில் வெளிவந்த இதழில் தேர்வு தொடர்பான சில அறிவுரைகள், விடுமுறைக்கால இதழில் விடுமுறை தொடர்பான சில ஆலோசனைகள். அதனால் இக்கட்டுரைகளை ஒட்டுமொத்தமாகத் தொகுக்கும்போது ஒரு புத்தகத்திற்கான‌ ஒட்டுமொத்த வடிவம் இல்லை. ஆனால் இது போன்ற…

  • | | |

    ரஷ்யப் புரட்சி மருதன்

    ரஷ்யப்புரட்சி முதல் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் நடைபெற்றது. ஜார் மன்னரின் தவறான அணுகுமுறைகளால் ரஷ்யாவின் மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி லெனின் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. லெனின் ஆதரவாளர்கள் போல்ஷ்விக்குகள் எனப்பட்டனர். அவர்களின் எதிர்த்தரப்பிலிருந்த மற்றோர் புரட்சியாளர்கள் மென்ஷ்விக்குகள் எனப்பட்டனர். ஏற்கனவே ரஷ்யா போரில் பெருமளவு சேதமடைந்திருந்த சமயத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தால் அரசால் முழு வீச்சோடு புரட்சியினை அடக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் மென்ஷ்விக்குகள் ஆட்சியை ஜார் மன்னரிடமிருந்து பெற்றுக்கொண்டனர். பின்னர் அவர்களிடமிருந்து லெனின் புரட்சி மூலம் ஆட்சியினைக்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.