ஆசானுக்கு
தனி மனித வாழ்வில் ஒழுக்கமாய் வாழும், வாழ நினைக்கும் நாமெல்லாம் வெறுமனே பார்த்துக்கொண்டே செல்லவேண்டியதுதானா? இல்லை அவர்கள் நம் பிரதிபலிப்புகளே (நீங்கள் சொன்னது) என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதானா?
தனி மனித வாழ்வில் ஒழுக்கமாய் வாழும், வாழ நினைக்கும் நாமெல்லாம் வெறுமனே பார்த்துக்கொண்டே செல்லவேண்டியதுதானா? இல்லை அவர்கள் நம் பிரதிபலிப்புகளே (நீங்கள் சொன்னது) என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதானா?
எழுத்தாளர் பெருமாள் முருகனால் எழுதப்பெற்று 1991 ஆம் ஆண்டில் வெளிவந்த நாவல். இது அவருடைய முதல் நாவல். நகரமயமாதலின் பொருட்டு தன்னுடைய பூர்விக நிலத்தைவிட்டு செல்லும் ஒரு கிராமத்து குடும்பத்தின் கதை. கதைக்களம் நிகழ்வது 1980 களில். பொன்னையாவின் தாத்தாவிற்கு மூன்று மகன்கள். நிலத்தினை அரசாங்கம் எடுத்துக்கொள்வதன் பொருட்டு நிலத்தை விற்றுவிட்டு அக்காசை மூன்று மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு தன் மனைவியோடு அருகில் ஏரிக்கு பக்கத்தில் தங்கிவிடுகிறார் தாத்தா. இரண்டு மகன்கள் அவர்களின் மாமனார் வீட்டோடு சென்றுவிட…
70 ஆவது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். முதலில் நம் அனைவரிடமும் ஓர் கேள்வி. நாம் உண்மையாகவே சுதந்திரதினத்தைக் கொண்டாடுகிறோமா, இல்லை அதனை ஓர் விடுமுறை நாளாக மட்டும் எடுத்துக்கொள்கிறோமா? உண்மையான பதில் நம்மில் பெரும்பாலானோர்க்கு உண்மையில் அது விடுமுறை தினம் மட்டுமே. நாம் மற்ற பண்டிகைகளான தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போலவா சுதந்திர தினத்தினைக் கொண்டாடுகிறோம்? இல்லவே இல்லை. நண்பர்களே! நாம் பெற்ற அந்த சுதந்திரத்தால்தான் இன்று நாம் நாம்…
ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு யானை தந்தத்திற்காக கொல்லப்படுவதை விவரிக்கும் இந்த ஆவணப்படம் இன்றைய நிலையில் மிக முக்கியமானது. மேலதிக தகவல்களுக்கு, http://www.lastdaysofivory.com/
Paul Greengrass ன் இயக்கத்தில் 2013 ல் வெளிவந்த திரைப்படம். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற அலாபாமா சரக்குக் கப்பல் கடத்தல் சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். Captain Richard Phillips ஆக நடித்திருப்பவர் Tom Hanks. கொள்ளையர்களின் தலைவனான Abduwali Muse ன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் Barkhad Abdi. தனக்கு இட்ட வேலைப்படி ஆயுதங்களில்லாத சரக்குக் கப்பலை ஓமனின் சாலாலா துறைமுகத்திலிருந்து கென்யாவின் மொம்பாசா துறைமுகத்திற்கு கொண்டு செல்ல பணியாளர்களுடன் புறப்படுகிறார் பிலிப்ஸ். சோமாலியக்…
ராமச்சந்திர குஹாவால் எழுதப்பட்டது. ஆங்கிலத்தில் எழுதப்பெற்ற நூல் ஆர்.பி.சாரதியால் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறந்த மொழியாக்கம். புத்தகம் இரு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. சரி, ஏற்கனவே இந்திய வரலாற்றினைப்பற்றி ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துள்ளனவே, அவற்றில் இல்லாத அப்படி என்ன சிறப்பு இந்தப்புத்தகத்திற்கு? இரண்டு முக்கியமான காரணங்கள். முதலாவது, இதுவரையான இந்திய வரலாற்று நூல்கள் இந்தியப் போராட்ட நிகழ்வுகளை அதிகமாக விவரித்து சுதந்திரத்தோடு நின்று விடும், அல்லது இந்திய மன்னர்களது காலங்களில் அதீத கவனம் செலுத்துவதாய் இருக்கும். இந்த நூல்…
சமீபத்தில் நடைபெற்று வரும் இளம் படைப்பாளிகள் தொடர்பான கருத்து மோதல்களை அறிந்திருப்பீர்கள். இருப்பினும் அது தொடர்பான முழு சித்திரத்தையும் அறிந்து கொள்ள தொகுத்துள்ளேன். ஆனந்த விகடன் வார இதழின் விகடன் மேடை பகுதியில் ஒரு வாசகரின் கேள்வியும் அதற்கு நாஞ்சில் நாடன் அவர்களின் பதிலும் என இந்நிகழ்வு தொடங்கியது. ”இன்றைய எழுத்தாளர்களில் நம்பிக்கை தரக்கூடியவர்கள் யார் யார்?” பார்வதி, திருநெல்வேலி நாஞ்சில் நாடன்: ”இளையவர்களை மட்டுமே கருத்தில்கொண்டு என் கருத்தைச் சொல்கிறேன். ஈழத்து இளைஞர்களில் சயந்தன், தமிழ்நதி,…