மனம் – திரைப்படம்

நாகேஸ்வரராவ்,நாகர்ஜுனா,நாக சைதன்யா நடிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். நான் சமீபத்திய ஆண்டுகளில் ஒரு திரைப்படத்தை ஒரு தடவைக்கு மேல் பார்த்த‌தே இல்லை. எவ்வளவு நல்ல திரைப்படம் என்றாலும். ஆனால் இந்த திரைப்படத்தினை இன்று மீண்டும் ஒருமுறை பார்த்து விட்டேன். காரணம் மற்ற படங்கள் என் புத்தியை தொட்டிருக்கின்றன. இப்படம் என் மனதைத் தொட்டதே. முதல்முறை போலவே இம்முறையும் கண்களில் கண்ணீர் பல இடங்களில். வாழ்க்கைதான் எத்தனை அழகானது? நல்லதையே பார்த்து நல்லதையே செய்து நல்லவனாகவே வாழ்ந்துவிட்டுப்போவதுதான் எத்துனை சுகமானது? என்னை மீண்டும் மீண்டும் பரிசுத்தமானவனாக மாற்றும் இது போன்ற திரைப்படங்களுக்காகவே இதுவரை வந்த எல்லா தரக்குறைவான படங்களையும் மன்னித்துவிடலாம் என்று தோன்றுகின்றது. இதுவரைப் பார்க்கவில்லையென்றால் பாருங்கள், கண்டிப்பாகப் பாருங்கள்.

Similar Posts

  • |

    இன்னும் மீதமிருக்கிறது

    சிங்கப்பூரில் வாழும் சத்திக்கண்ணனால் எழுதப்பட்ட கவிதைப் புத்தகம். பெரும்பாலானவை வசனக்கவிதைகள். ஒரு சில முத்தாய்ப்பான கவிதைகளும் உண்டு. உதாரணமாக மனைவியைப்பற்றிய கவிடையொன்றில் எல்லாவற்றையும் தூரமாகத்தெரிந்தால் அழகென்றிருந்த எனக்கு அருகில் மலர் நீ இருக்கும் போது என்ன செய்ய?  என்னும் கவிதை அழகு. வானவில், கனவு போன்றவை நான் ரசித்த கவிதைகள். நான் ரசிக்காதது முன்னுரை எழுதியிருப்பவர் பாடியிருக்கும் துதி.

  • |

    கயம் – குமார செல்வா

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த குமாரசெல்வாவினால் எழுதப்பெற்ற ஆறு சிறுகதைகளின் தொகுப்பு. காலச்சுவடு பதிப்பகம். 2009 ஆம் ஆண்டு வெளிவந்தது. நாகமலைகுறுவெட்டிஉயிர்மரணம்கயம்கிணறுவிடாலு இவையே அந்த ஆறு சிறுகதைகள். இவற்றுள் என்னை மிகவும் கவர்ந்த கதை உயிர்மரணம். கடாட்சம் தன் தந்தை சொன்ன சொல்லுக்காக தன் இரண்டு வயது மகன் றாபியைத் தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு மனைவி அஞ்சம்மாளோடு வெளியேறுகிறார். ஒன்றுக்கும் உதவாது என ஊர் நினைக்கும் ஓர் நிலத்தில் உழைத்து முன்னேறுகிறார். அவர் அடையும் உச்சம் அவர்…

  • |

    Rich Dad Poor Dad – Robert Kiyosaki

    Robert Kiyosaki ஆல் எழுதப்பெற்று 1997 ஆம் ஆண்டில் வெளிவந்தது. வாழ்வில் பொருளாதார தன்னிறைவு அடைவதற்கு தனி மனித நுண்ணறிவு எத்தகைய முக்கியமான ஒன்று என்பதனை விவரிக்கும் நூல். 50 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகம் முழுவதும் 30 மில்லியனுக்கும் அதிகமாக விற்பனையான நூல். இந்நூல் வாசிப்பவர்கள் பொருளாதார தன்னிறைவினை அடைந்தார்கள் என்பதனை விட‌ Robert Kiyosaki கண்டிப்பாக இப்புத்தகத்தினால் பொருளாதார நிறைவினை அடைந்திருப்பார் என்பது நிதர்சனம். இப்புத்தகத்தினை பத்து தனி அத்தியாயங்களாக‌ Robert Kiyosaki…

  • |

    இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு பாகம் 1

    ராமச்சந்திர குஹாவால் எழுதப்பட்டது. ஆங்கிலத்தில் எழுதப்பெற்ற நூல் ஆர்.பி.சாரதியால் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறந்த மொழியாக்கம். புத்தகம் இரு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. சரி, ஏற்கனவே இந்திய வரலாற்றினைப்பற்றி ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துள்ளனவே, அவற்றில் இல்லாத அப்படி என்ன சிறப்பு இந்தப்புத்தகத்திற்கு? இரண்டு முக்கியமான காரணங்கள். முதலாவது, இதுவரையான இந்திய வரலாற்று நூல்கள் இந்தியப் போராட்ட நிகழ்வுகளை அதிகமாக விவரித்து சுதந்திரத்தோடு நின்று விடும், அல்ல‌து இந்திய மன்னர்களது காலங்களில் அதீத கவனம் செலுத்துவதாய் இருக்கும். இந்த நூல்…

  • |

    சூல் ‍- சோ.தர்மன்

    2019 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல். சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் தொடங்கி சுதந்திரத்திற்குப் பிந்தைய ஜனநாயக அரசுகள் வரையிலான காலகட்டத்தினை ஒட்டிய ஒரு சுற்று வட்டார கிராமங்களின் கதை. ஒட்டுமொத்த கதையும் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தினை ஒட்டி அமையும் கதை அல்ல இது. கிராமங்களில் ஆங்காங்கே நடைபெறும் சம்பவங்களும் அதற்கு முந்தைய பிந்தைய மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளுமாக அமைந்த நாவல். ஒரு நீர்ப்பாய்ச்சியும், ஒரு கண்மாயுமே கதையின் மையம். கண்மாயின் நீரை அக்கண்மாய்க்குப்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.