|

ஆயிரம் ஜன்னல் ‍‍- ஜக்கி வாசுதேவ்

ஆனந்த விகடனில் தொடர்ச்சியாக வெளிவந்த ஜக்கி வாசுதேவ் அவர்கள் எழுதிய‌ கட்டுரைகளின் தொகுப்பு. எழுத்தாக்கம் சுபா. வாராந்திரக் கட்டுரை வடிவில் வெளிவந்ததனால் ஒட்டு மொத்த தொடர்ச்சி கிடையாது. ஒரு எளிய கட்டுரை அதனுள் ஒரு சிறு அறம். இப்படித்தான் பெரும்பாலானவை. இத்தொடர் வெளிவந்த காலகட்டத்திலேயே ஜக்கி வாசுதேவ் ஒரு புகழ்பெற்ற நபராக இருந்தமையால் அவர் சாதாரணமாகச் சொல்வதைக்கூட பிரமாண்டமாகவே எடுத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு வாசிப்பவர்கள் சென்றே ஆக வேண்டும். அப்படிப்பட்டவையே இக்கட்டுரைகள். வாராந்திர சஞ்சரிகைகளையும், தினசரி செய்திகளையும் மட்டுமே பார்க்கும் ஒருவர் இக்கட்டுரைகளையும், அவருக்கு இருக்கும் பிறவி ஞானத்தையும் விதந்தோதலாம். உலக, இந்திய, தமிழ் எழுத்தாளர்களை குறைந்த அளவிலேனும் வாசித்தவர்களுக்குத் தெரியும் இவையெல்லாம் வியாபாரக் குப்பைகள் என்று. இந்தக் கட்டுரைகளின் மற்றோர் பொதுத்தன்மை பெரும்பாலான கட்டுரைகளில் அவர் தன்னைத்தானே உயர்த்திக்கொள்கிறார். தனக்கு சிறு வயதிலேயே எல்லா விதமான ஞானம் ஏற்பட்டதாகவும், எல்லாவற்றையும் ஆராய்ந்து பகுத்து மூலத்தினைக் கண்டுபிடிக்கும் வல்லமை இருந்ததாகவும், இன்னும் பிற. இவர் இக்காலப் பொருளியல் வெற்றியடையலாம், ஆனால் எதிர்காலம் இவரை உதரித்தள்ளும். மிகச் சாதாரணமான புத்தகம். வாசிக்கலாம்.

Similar Posts

  • |

    வாசிப்பில்

    தற்போது இந்த மூன்று புத்தகங்களையும் ஒரு சேர வாசித்து வருகிறேன். 1. இந்துத்துவத்தின் பன்முகங்கள் 2. Adolf Hitler: A Life From Beginning to End 3. Pride and Prejudice மூன்று விதமான புத்தகங்கள் ஒருசேர…

  • |

    ரஷ்யப் புரட்சி – மருதன்

    1917 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் ஜார் மன்னரின் ஆட்சி போராட்டத்தின் மூலம் கவிழ்க்கப்பட்டு, லெனின் தலைமையில் கம்யூனிச அரசு அமைந்ததை விவரிக்கும் சிறு புத்தகம். மருதன் அவர்களால் எழுதப்பெற்றது. ஜார் மன்னராட்சியில் தொழிலாளர்களின் வாழ்வு பேணப்படாமால் கீழ் நிலைக்கு சென்று கொண்டிருந்ததே போராட்டத்தின் ஆரம்பகாலக் காரணம். சரியான ஊதியமின்மை, முறைப்படுத்தப்படாத வேலை நேரங்கள் எனப் பல துன்புறல்களுக்கு ஆளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட அதன் ஒருபகுதியாக லெனினின் சகோதரனும் அரசாங்கத்தால் கொல்லப்படுகிறார். அதன் பின்னர் போராட்டத்தில் தன்னை…

  • |

    நவீன இந்தியாவின் சிற்பிகள் – ராமச்சந்திர குஹா

    நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகள் இவர்கள் என பத்தொன்பது பேரைக் குறிப்பிட்டு அதற்கான காரணங்களாக அவர்களுடைய செயல்பாடுகள் மற்றும் அவர்கள் பல்வேறு சமயங்களில் ஆற்றிய உரைகள், எழுதிய கடிதங்கள் போன்றவற்றை ஆதாரங்களினோடு தொகுத்துள்ளார் ராமச்சந்திர குஹா. அதுவே இப்புத்தகம். அந்த பத்தொன்பது பேர் இவர்களே மகாத்மா காந்தி ஜவகர்லால் நேரு பி.ஆர்.அம்பேத்கர் ராம்மோகன் ராய் ரவீந்திரநாத் தாகூர் பாலகங்காதர திலகர் ஈ.வே.ராமசாமி முகம்மது அலி ஜின்னா சி.ராஜகோபாலச்சாரி ஜெயப்பிரகாஷ் நாராயணன் கோபால கிருஷ்ண கோகலே சையது அகமது கான்…

  • |

    Wings Of Fire – A.P.J. Abdul Kalam and Arun Tiwari

    This book is an autobiography of Dr.A.P.J.Abdul Kalam. This book describes the story of a young boy born in a middle class family with greater dreams. This book remains as a guide to many young people with big dreams. This book is the success story of Dr.A.P.J.Abdul Kalam, that describes the struggles he faced throughout…

  • அறம் – ஜெயமோகன்

    உண்மை மனிதர்களின் கதைகள். ஜெயமோகன் அவர்களால் எழுதப்பட்டது. வம்சி பதிப்பக வெளியீடு. ஒரு சில நூல்களின் மேல் நம் கருத்தையோ, எண்ணத்தையோ வைப்பதற்கு குறைந்த பட்ச த‌குதி என்ற ஒன்று எப்போதும் தேவை என்று நினைப்பவன் நான். இதனை எழுதும் இந்த வேளையில் அத்தகுதி இல்லாதவனாகவே உணர்கிறேன், இருக்கிறேன். ஆதலால் இந்த நூலைப் பற்றி எந்த பார்வையையும் நான் வைக்கமாட்டேன், இப்போதைக்கு. ஆனால் காரணமில்லாமல் ஒரு எழுத்தின் வழியாக மட்டுமே என்னை அழ வைத்த நூல், இது….

  • |

    Rise of the Planet of the Apes

    2011 ஆம் ஆண்டு Rupert Wyatt இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். நடிப்பு James Franco. இவர்தான் சமீபத்தில் வெளிவந்த Interview மற்றும் 127 Hours திரைப்படங்களில் நடித்தவர். நாயகி Freida Pinto. இவர் இந்தியப் பெண் . Slumdog Millionaire படத்தில் நடித்த அதே பெண். கதைப்படி வில் ரோட்மென் ஒரு ஆய்வாளர். அல்சமீர் ( Alzheimer) போன்ற மறதி நோய்களுக்கான‌ மருந்தினைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு ALZ-112 என்னும் மருந்தைக் கண்டறிகிறார். பின்னர் அதனை சோதனைக்காக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.